மொமெண்டோ (Memento- Movie Review)



கிறிஸ்டோபர்நோலனின் வாழ்நாள் சாதனை; அவரின் திரை திறனுக்கு ஒரு சோற்றுப் பதம் மொமண்டோ. எங்களுக்கு தெரியுமே கஜனிதானே? என்பவர்களுக்கு இல்லை என்பதே என்னுடைய பதில்.
 
கஜனி மொமொண்டோவின் ஒரு சிறு கூறினை எடுத்து தமிழ் கரம் மசாலா சேர்த்து முருகதாஸ் முத்திரை பதித்து வந்த படம். சந்தேகம் இல்லாத ஒரு சாதனைதான். ஆனால் மொமொண்டோ அதி தீவிர திரை ரசிகர்களுக்கானது. மொமொண்டோ ஒரு மலை கஜனி அதன் மிகச் சிறிய கல். 

திரைப்படத்தை பார்த்த ஒரு ரசிகர் இயக்குனரிடம் எனக்கு ஒண்ணுமே புரியலே என்று சொன்னபொழுது இந்தப் படத்தை எடுக்க எனக்கு மூன்று வருடம் ஆனது  உங்களுக்கு ஒன்றரை மணி நேரத்தில் புரியுமோ? போய் இன்னொருமுறை படத்தை பாருங்க என்று ரொம்ப கூலாக சொன்னதாக ஒரு செய்தி உண்டு. 

சாலி ஜென்கின்ஸ் என்கிற ஒருவர் ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ் நோய்தாக்கிற்கு ஆளாகிறார். இவர் படும்பாடினை காண சகியாத மனைவி இவர் கையாலேயே இன்சுலின் ஊசியினை போடச் சொல்லி மரணிக்கிறார்.

இதனை விசாரிக்கும் இன்சுரன்ஸ் ஏஜன்ட் சில நாட்களுக்கு பின் இந்த நோய்க்கு ஆளாகிறார். இவரது வாழ்வியல் அனுபவங்களாக விரிவதே படம்.

ஆனால் வருக என்று ஆரம்பித்து வணக்கம் என்று முடியும் வழக்கமான திரைக்கதை பாணியில் அல்லாது நோயாளியின் மூன்று நிமிட நினைவுகளில் பயணிக்கும் திரைக்கதை சான்சே இல்லாத திரை அனுபவத்தை தருகிறது.

ஒரு காட்சியை சொன்னால் புரியும் என்று நினைக்கிறன். விரைந்து ஓடிக் கொண்டிருக்கும் கதாநாயகன் நான் ஓடிக்கொண்டிருக்கிறேன் யாரையோ துரத்துகிறேன் என்று நினைக்கிறேன் என்று சொல்லிகொண்டிருக்கும் போதே அவனை நோக்கி வெடிக்கிறது ஒரு துப்பாக்கி. ஆகா என்னையதான் தொரத்துறாங்க என்று ஓடுவது ஜோரான காட்சி. 

படத்தின் முதல் பகுதியின் ஒரு காட்சியில் வரும் கதாநாயகி காரி ஆன் மோஸ் உதடு கிழிந்திருக்கும். யார் அடித்திருப்பார்கள் என்கிற சஸ்பென்ஸ் உடைகிறபொழுது கிடைக்கும் இன்னொரு ஆச்சர்யம் சூப்பரப்பு!

நல்ல படங்களை பார்க்க விரும்பும் இதயங்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்.

சரி கதையை சொல் என்பவர்களுக்காக
ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ் உள்ள ஒருவன் தன் மனைவியை தெரியாமல் கொலை செய்துவிட்டு சிகிச்சைக் காக்க ஒரு மன நோய் மருத்துவ நிலையத்தில் இருக்கிறான். இவனை விசாரிக்க வரும் போலிஸ் அதிகாரி இவனுடைய பிரச்சனையை வைத்து இவனை ஒரு கருவியாக பயன்படுத்த முடிவு செய்கிறார்.

இவனது மனைவி கொலை செய்யப் பட்டதாகவும் இவன் பழிவாங்க தான் உதவுவதாகவும் சொல்கிறார். நம்பும் இவனை கடத்தி அவரின் ஹிட்லிஸ்டில் உள்ள லோக்கல் போதை வியாபாரிகளை போட்டு தள்ளி அவர்களின் பணத்தை ஸ்வாகா செய்கிறார்.

இப்படி பாதிக்கப்படும் ஒரு போதை வியாபாரியின் கேர்ள் பிரன்ட் காரி ஆன் மோஸ் இவனை அவள் பாணியில் திருப்பி கள்ள ஆட்ட போலிசை போட்டு தள்ளுவதுதான் கதை.

இந்தக் கதையை மூன்று நிமிட நினைவு உள்ள ஒருவனின் நினைவுகளுக்குள்ளாக சொல்வதே திரைக்கதை. ஜோர். இது மாதிரி படம் எடுக்க இப்போதுள்ள எந்த தமிழ் முன்னணி பட இயக்குனர்களாலும் முடியாது என்று கருதுகிறேன். (அவர்களின் இமேஜ் வளையம் அவர்களை செயல்பட விடாது)

விளையாட்டுக்கு சொல்லல. சும்மாச்சுக்கும் ஒரு காணன் 7டி காமிராவை வைத்துக் கொண்டு யாரோ ஒரு சின்னப் பையன் கலக்கப்போறான் என்பதே என்னுடய கனவு மற்றும் நம்பிக்கை.

கனவும் நம்பிக்கையும் தானே வாழ்க்கை
அன்பன்
மது

படக் குழு
இயக்கம்                        : கிறிஸ்டோபர் நோலன்
காமிரா                          : வாலிபிபிஸ்டர்
இசை                           : டேவிட் ஜூலியன்
எடிட்டிங்                        : டோடி டான்
ஹீரோ                          : கை பியர்ஸ்  
ஹீரோயின்                      : காரி ஆன் மோஸ்
போலிஸ்                        : ஜோ பாண்டலினோ

Comments