கடல் பன்றிகள்ஆழ்கடலில் ஆயிரம் மீட்டர் ஆழத்தில் கடலின் தரையில் வாழும் ஒரு சிறிய உயிரினம் கடல் பன்றி. சுமார் பதினைந்து சென்டி மீட்டர்கள் வளரும் இந்த சிறிய உயரினம் உடலின் அடியில் நீண்ட கால்களை கொண்டது. கால்கள் உணவை வாய்க்குள் தள்ளவே பயன்படுகின்றன! தலையின் முன்புறத்தில் நீண்டிருக்கும் கொம்பும் ஆண்டெனா அல்ல. அதுவும் காலே. ஆழ்கடலின் தண்ணீரில் நடக்க இது உதவுகிறது. ஆழ்கடலின் தரையில் இருக்கும் சேற்றினை உட்கொண்டு அதில் இருக்கும் ஆர்கனிக் பொருட்களை உண்டே வாழ்கின்றன. இவை எந்த விதத்திலும் மனிதனை பாதிப்பதில்லை. மனிதர்களாலும் இவற்றுக்கு அச்சமில்லை. ஆமா யார் அங்கே போய் பிளாட் போடுவது?Comments