ரிவைண்ட் .... எப் பி...

ஆறு பாகைகள் , ஒரு பிரபலத்தை நினைத்துக் கொள்ளுங்கள் அஜீத், அப்துல் கலாம் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். அவர்களுடன் நீங்கள் பேச உங்களில் நண்பர்களில் ஒருவர் வழிவகுப்பார்.ஜீவா நெடுநாளாக அப்துல் கலாமை பார்த்து பேச நினைக்கிறான். ஜீவாவின் நண்பர்  அருண் அவர் ஜான் என்ற நண்பரை அறிமுகம் செய்ய இப்படி போகும் ஒரு வலைபின்னல் தொடர்பு ஆறாவது தொடர்பில் அப்துல் கலாமிடம் நேரடியாக சென்று முடிகிறது. ஜீவா தனது நண்பர்களின் நண்பர்கள் மூலம் அவரது நெடுநாள் கனவை நிறைவேற்றிக்கொண்டார்.

எவ்வளவு பெரிய பிரபலத்தையும் நீங்கள் ஆறாவது இணைப்பில் அடையலாம் என்பது ஆறு பாகைகள் கொள்கை. பிக்ஸ் கரின்த்தி என்பவரால் முன்மொழியப்பட்டு நிறுவப்பட்ட கொள்கை இது.

இதனை அடிப்படையாக கொண்டு ஒரு வலைத்தளம் செயல்பட ஆரம்பித்தது. அது சிக்ஸ்டிகிரிஸ் என்று அழைக்கப்பட்டு 1997 முதல் 2001 வரை செயல்பட்டு வந்தது. நானும் அதில் ஒரு உறுபினராக இருந்தேன். இதுதான் எனக்கு தெரிந்த முதல் சமூக வலைத்தளம்.

2001ல் டாட் காம் டும் நடந்த பொழுது இந்த சேவைதளம் காணாமல் போய்விட்டது. அமெரிக்க பொருளாதார நெருக்கடியில் காணமல் போன பல தளங்களில் இதுவும் ஒன்று.

நான் இந்த தளத்தை பற்றி நெட்டுக்கு நான் அடிமை என்கிற தொடரில் படித்து விட்டு எங்கள் பகுதியில் ஜோரான வலை உலவியகம் ஒன்றில் இதனை மேய்ந்தது உண்டு. அப்போது பெரியார் நகர் இரட்டை ரோட்டில் ஒரு மலிவு விலை  இணய  உலவியகம் இருந்தது. எனது இணையப்பயன்பாட்டை சீரமைத்து உற்பத்தி சார்ந்ததாக மாற்றியது இந்த இனைய உலவியகம்தான். இதன் உரிமையாளர் நம் பின்னே உலவிக்கொண்டே இருப்பார்.

ஆண்ட்ரு வேயன்றிச் என்பவரின் மைக்ரோவியு என்கிற நிறுவனத்தால் ஆரம்பிக்கப் பட்ட இந்தத் தளம் நூறு பணியாளர்களுடன் முப்பத்தி ஐந்து லெட்சம் பதிவு செய்த பயனர்களுடன் இருந்தது.

இன்னும் மீண்டு வரவே இல்லாத இந்த முதல் நிறுவனம் தான் இன்றய வெற்றிகரமான சமூக வலைதளங்களுக்கு முன்னோடி. அனேகமாக மார்க் சக்கர்பெர்க் தனது பதின்ம வயதுகளில் இந்தத் தளத்தில் ஒரு பயனாராக தனது அனுபவத்தை பெற்றிருக்க கூடும்.

ஆறு பாகைகள் கொள்கையில் வந்த முதல் தளம் தோல்வியுற்றாலும் இன்று பேஸ்புக் வெற்றிக்கு இதுதான் முதல் படி...

தொடரும்..

அன்பன்
மது


Comments

  1. ஆறு பாகைகள் கொள்கை அறிந்தேன்... தொடர்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் எனக்கு மூன்றாவது பாகை நான், முத்துநிலவன் அய்யா, திண்டுக்கல் தனபாலன் அய்யா ... ஹ ஹ ஹா

      Delete

Post a Comment

வருக வருக