ட்ரான்ஸ்பார்மர்ஸ் ஏஜ் ஆப் எக்ஸ்டிங்ஷன்ட்ரான்ஸ்பார்மர்ஸ் வரிசையில் நான்காவது படம்.

போன பார்ட்டில் வெளிகிரகவாசிகளின் தாக்குதலில் இருந்து அதே கிரகவாசிகள் போரிட்டு பூமியைக் காக்கிறார்கள். நல்லவர்கள் பெயர் ஆட்டோபாட்ஸ். தீயவர்கள் டிசெப்டிகான்ஸ்!


மனிதனுக்கு உதவி செய்த ஆட்டோபாட்ஸ் எல்லாத்தையும் ஏலியன் கூட்டு ஒன்றை வைத்துக்கொண்டு போட்டு தள்ளுது சி.ஐ.ஏவின் ஒரு பிரிவு.

அங்கேதான் ட்விஸ்ட். பூமியில் மனிதர்களுக்கு உதவும் ஆட்டோபாட்ஸ் அத்துணையையும் அள்ளிக்கொண்டுபோய் அவர்களை உருவாக்கியவர்களிடம் தர ஒரு ட்ரான்ஸ்பார்மர் வருகிறது.

ஈவு இரக்கம் இல்லாமல் பூமியில் ஒளிந்திருக்கும் அத்துணை ஆட்டோபாட்ஸ்களையும் வேட்டையாடுகிறது. ஆட்டோபாட்ஸ்களின் தலைவன் ஆப்டிமஸ் ப்ரைம் கிடைத்தால் பூமியை விட்டு கிளம்பிவிடலாம். இதற்கு உதவும் ப்ளாக்ஆப்ஸ் கமாண்டரிடம் ஒரு ஒப்பந்தம் வேறு!

ஆகா மனிதர்களை காத்த ஆட்டோபாட்ஸ்களை மனிதர்களே போட்டுத் தள்ளுவது நயவஞ்சகம் இல்லையா?

இந்த அதிர்ச்சிதான் படத்தை விறுவிறுப்பாக கொண்டுபோகிறது. படத்தில் மார்க் வால்பெர்க் ஒரு ரோபாட்டிக் பொறியாளராக வருகிறார். அவரது பெண் அவ்வளவு அழகு.

அது சரி இந்த பாப்பா படத்தில் ஸ்ட்ராங் இமேஜ் உள்ள மார்க் வால்பெக்குக்கு என்ன வேலைன்னு நீங்க யோசிக்கிற மாதிரிதான் நானும் யோசித்தேன். கிளைமாக்சில் கிடைத்து பதில்.

ஒரு திவாலான மின்கட்டணம் கூட செலுத்த முடியாத ரோபாடிக் பொறியாளர் ஏகர் (மார்க் வால்பெர்க்). இவனுக்கு பதினேழு வயதில் ஒரு பெண் டெஸ்லா.
படத்தில் டெஸ்லா. உண்மையில் நிகோலா பெல்ட்ஸ். மேலே ஒரு சட்டையை போட்டுக்கொண்டு கீழே ஒரு ரப்பர் பேன்ட் அளவில் டவுசரை போட்டுகொண்டு நிற்கிற மகளிடம் ஏகர் பேசுவது ரொம்ப காமெடி. அதைவிட காமிரா ஆங்கிள் செம குறும்பு.

தன்னிடம் வேலை கேட்டு வரும் தனது நண்பனை சேர்த்துக் கொண்டு தனது வீட்டின் பின்புறம் உள்ள பெரிய ஷெட்டில் ரோபாடிக்ஸ் ஆய்வுதான். செலவுக்குப் பணம்? வேலைக்கு சேர்ந்த தனது நண்பனிடமே கேட்டு வாங்கிக் கொள்கிறார்!

ஒருமுறை ஒரு காயலான் கடை ட்ரக் ஒன்றை எடுத்து வந்து சரி செய்ய முயற்சிக்கிறார். அது உயிர் பெறுகிறது. ஆப்ட்டிமஸ் ப்ரைம்!

ட்ரக் விசயத்தை போலீஸில் சொன்னால் துட்டு வரும் என்று நண்பன் போட்டுக் கொடுக்க அவர்களுக்குப் பதிலாக கொலைகார ப்ளாக் ஆப்ஸ் கமாண்டர் வருகிறார். ஆப்டிமஸின் அதகளம் தொடங்குகிறது. சிறை பிடிக்க வந்த ட்ரான்ஸ்பார்மரிடமிருந்து தப்பி தன்னைக் காத்த ஏகர் அன்கோவை பாதுகாக்கிறது.

வயல் வெளியில் ஓடும் மூவரையும் மீட்கிறது சீறிவரும் ஒரு கார். காரில் பாப்பாவின் பாய் பிரன்ட்! ஒரு ரேசர். அப்புறம் என்ன? சேசிங்தான்! சேசிங் காட்சிகள் அருமையாக இருந்தாலும் பால் வாக்கரையோ அவரது பர்பாமென்ஸ்சையோ நெருங்கக் கூட முடியவில்லை.

ஒரு கட்டத்தில் பலமாடிகள் உயரத்தில் இருந்து தாவுகிறது கார். இதற்கு ஹான்ட் பிரேக் போடுவது ஏகரின் ஒன்றும் தெரியாத மகள்! (இந்த இடத்தின் வசனம் ரொம்ப ரொம்ப குசும்பு)

இதன் பின்னர்தான்  ஒரு அறிவியல் நிறுவனம் சி.ஐ.ஏவுடன் இணைந்து கொல்லப்பட்ட ஆட்டோபாட்ஸ்களை உருக்கி ட்ரான்ஸ்பார்மியம் என்கிற உலோகத்தை எடுத்து புதிய போர்க் கருவிகளை செய்கிற விசயத்தை கண்டுபிடிகிறது குழு.


ட்ரான்ஸ்பார்மியத்தால் செய்யப் பட்ட ஒரு பந்து. நினைத்த நொடியில் வடிவம் மாறும் ஒரு நொடியில் மியூசிக் பிளேயர் அடுத்த நொடியில் துப்பாக்கி!

என்னது? ராமநாரயணன் படம்மாதிரி இருக்கேப்பா என்று நினைகிறீர்களா?

ஆமாம். ஆனால் அமெரிக்காவிற்கு வில் ஸ்மித் என்கிற சூப்பர் ஸ்டாரைக் கொடுத்த டைரக்டர் மைக்கல் பே. அவர் படம் இது. இந்த பட்ஜெட்டில் ஒரு நூறு ராம நாராயணன் படங்களை எடுத்துவிடலாம்.

அந்த அறிவியல் ஆய்வு  நிறுவனத்தின்  தலைவர் தனது ஜாய்ஸ் சி.ஐ.ஏ தொடர்புகளின் மூலம் அழிக்கப்பட்ட ட்ரான்ஸ்பார்மர்ஸ்களைக் கொண்டு அவற்றின் ஜீனோம் கோடை கண்டறிந்து அவரே ட்ரான்ஸ்பார்மர்களை உருவாக்க ஆரம்பிக்கிறார். ஒரு ஏலியன் பாம் ஒன்றை வாங்கி ஆராய்ச்சி செய்ய நினைக்கிறார்.

பாம்தான் ஒப்பந்தம்! ஆப்டிமசை பிடித்துத் தந்தால் பாம் சி.ஐ.ஏ விற்கு. அதை ப்ளாக் ஆப்ஸ் கமாண்டர் அறிவியல் நிறுவனத்திற்கு தருவார். பதிலுக்கு அவருக்கு நிறுவனத்தின் பல கோடி மதிப்புள்ள ஷேர்ஸ் கிடைக்கும்.

ஆனால் ஆப்டிமஸால் கொல்லப்பட்ட மேக்கட்ரான் அறிவியல் நிறுவனம் உருவாகும் அத்துணை ட்ரான்ஸ்பார்மர்களையும் தன்வசப்படுத்தி விடுகிறான். அவன் நோக்கம் அந்த பாமை வைத்து ஒரு பெரிய நகரை அதன் ஜீவராசிகளுடன் உருக்கி அந்த குழம்பை வைத்துக் கொண்டு ஒரு பெரும் படையை உருவாக்க திட்டமிடுகிறான்!

சைனாவில் நடக்கும் கிளைமாக்ஸ் பட்டாசு பாஸ் பட்டாசு.

இயக்கம்


மைகேல் பே, ஹாலிவுட்டின் பாக்ஸ் ஆபிஸ் செல்லம். ஏகப் பட்ட ரெக்கார்ட்ஸ். ஆர்மகெடன், பேர்ல் ஹார்பர், என சூப்பர் டூப்பர் ஹிட்கள் இவரது அடையாளம்.

ஜார்ஜ் லூகாசிடம் ஸ்டோரி போர்ட் பிரிவில் வேலைபார்த்த இவர் ஸ்டார் வார்ஸ் வெற்றியைப் பார்த்த பின்னர்தான் டைரக்டராக ஆசைப்பட்டவர், இன்று எத்துனைச் சாதனைகளுக்கு சொந்தக்காரர் என்பது ஆச்சர்யம்.

இசை


படத்தை தூக்கி நிறுத்துவது விஷுவல் எபக்ட்ஸ் என்றால் தொய்வு விழாமல் பார்த்துக் கொள்வது இசை. ஸ்டீவ் ஜெப்லான்ஸ்க்கி செய்திருப்பது ஒரு இசை ரகளை விருந்து.

ரகளை


ஒரு காயலான் கடை டப்பா ட்ரக் வடிவத்தில் இருந்து ஆப்டிமஸ் ஒரு அல்ட்ரா ட்ரக்காக மாறும் காட்சி.

ஜாக் ரெயினரின் சேசிங் காட்சிகள். அந்த கிரேசி ஜம்ப்.

கிளைமாக்ஸ் காட்சிகள் டைனோசர் ட்ரான்ஸ்பார்மர்கள், அத்துணைபொருட்களையும் உறிஞ்சும் மெகா ஏலியன் ஷிப். சும்மா கப்பல்களை இழுத்து பறக்க விடுவது ரொம்ப கூல்!

சரி ஆப்டிமஸ் உள்ளே போகப் போகிறான் என்கிற பொழுது அவன் எடுக்கும் அதிரடி சரவெடி.

பறந்து கொண்டிருக்கும் ஏலியன் ஷிப்பில் இருந்து டைவ் அடித்து பாராசூட்டை விரித்து பின்தொடரும் கலங்களை அளிக்கும் ஆட்டோபாட் செமை..

ரசனை

அந்த ஹாங்ஹாங் லொக்கேசன் ரொம்ப அருமை. மலைக்கு நடுவே இருக்கும் மாபெரும் சுரங்கம் ஒரு விஷுவல் ட்ரீட்.

ஒரு தமிழ் படத்தை பார்க்கிறோம் என்கிற உணர்வைத் தந்த டப்பிங்.

சில செய்திகள்

படத்தில் வரும் அத்துணைக் கார்களும் செவிதான். செவர்லே கம்பனிக்காரன் படத்தின் பட்ஜெட்டில் ஒரு பகுதியைக் கொடுத்திருப்பான் என்று தோன்றுகிறது. இந்த ஐடியா இங்கே சிலர் செய்து பார்த்ததுதான்.

கருவிகளைக் உருவாக்கும் அறிவியல் கண்டுபிடிப்பாளர் ஸ்டீவ் ஜாப்ஸ் சாயலில் இருப்பது, அவர் உண்மையில் லேபில் கோபப்பட்டு பேசிய  வசனங்களை இந்தக் கதா பாத்திரம் படத்தில் பேசுகிறது. படத்தில் உள்ள கண்டுபிடிப்பாளர் பெயரும் ஜாய்ஸ்!

ஸ்டீவ் குறித்து இன்னொரு தகவலும் உண்டு. அவர் நேபாளிய தொடர்புகளின் மூலம் வெளிக்கிரகங்களுக்கு பயணம் செய்யக் கூடியவராக இருந்தார். அந்த கிரகங்களில் பார்த்து வந்த கருவிகளைத்தான் பூமியில் செய்து பெரும் பொருளீட்டினார் என்ற சுவாரஸ்யமான (கற்பனை?) தகவலும் நினைவிற்கு வந்தது. இது அப்படியே படத்தில் பொருந்தவது ஆச்சர்யம்.

தாரளமாக திரீ டியில் பார்க்கலாம்.. 

Comments

 1. வணக்கம்
  படத்தின் கதைக்கருவை படித்த போது பார்க்க வேண்டும் என்ற ஆசைவந்தது. அருமையாக எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 2. Anonymous27/6/14

  வணக்கம்
  த.ம 2வது வாக்கு

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 3. என் மகன்களுடன் சேர்ந்து 'ட்ரான்ஸ்பார்மர்ஸ் ப்ரைம்' கார்ட்டூன் பார்த்து பார்த்து எனக்கே மிகவும் பிடித்துப் போனது. வசனங்கள் கலக்கலாக இருக்கும்.
  படம் சொல்லவே வேணாம்..அருமையான விமர்சனமும் தகவல்களும்..
  பகிர்விற்கு நன்றி மது.
  த.ம.3

  ReplyDelete
  Replies
  1. ப்ரைம் கார்டூன் ...
   இங்கே லிட்டில் கிருஷ்ணா
   நிஞ்சா ஹடோரி ..
   குட்டீஸ் நிறய பேச ஆரம்பித்தது இவற்றைப் பார்த்துதான்..

   Delete
 4. நல்ல விமர்சனம்! படம் இனிதான் பார்க்க வேண்டும்!

  பகிர்வுக்கு மிக்க நன்றி!

  ReplyDelete
  Replies
  1. எதை வைத்து நல்ல விமர்சனம் என்று சொல்றீங்க...?
   ஒரு வித்யாசமான முயற்சி அவ்வளவே.
   ஊக்குவித்தளுக்கு நன்றி

   Delete
 5. Complete graphics junk

  ReplyDelete
  Replies
  1. தங்கள் முதல் வருகைக்கு நன்றி எஸ்.கே

   பாப்போம் வசூலை..

   எனது பக்கத்தில் அமர்ந்திருந்த சிவில் இன்ஜினியரிங் படித்த வெளிநாட்டுக்குப் புறப்படும் ஒரு ரசிகரிடம் கேட்டதில் சிலாகித்து சொன்னார்..

   நீங்கள் இப்படி சொல்கிறீர்கள்...
   வசூல் மட்டுமே தீர்மானிக்கும் ..

   Delete
 6. வணக்கம்

  இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்


  அறிமுகப்படுத்தியவர்-மகிழ்நிறை மைத்திலி கஸ்தூரிரெங்கன்


  பார்வையிட முகவரி-வலைச்சரம்


  ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: பேனாமுனைப்போராளி:
  என்பக்கம் கவிதையாக

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 7. தங்கள் பதிவுகளை அவ்வப்போது படித்துவருகிறேன். இன்று வலைச்சரத்தில் கண்டேன். வாழ்த்துக்கள்.

  ReplyDelete

Post a Comment

வருக வருக