குழந்தயின் உயிரை காத்த 3டி பிரிண்டிங்!(3d Print as Life Saver)

உயிர்காத்த அந்த பிரிண்ட்!
மருத்துவர்களால் கைவிடப்பட்ட குழந்தை ஒன்று புதிய அறிவியல் கண்டுபிடிப்பு ஒன்றினால் காப்பாற்ற பட்டிருக்கிறது!

பிரையன் மற்றும் ஏப்ரலின் குழந்தை கைபா ஒரு வினோதமான நுரையீரல் நோயினால் பாதிக்கப் பட்டு பிழைப்பது கடினம் என மருத்துவர்களால் கைவிடப்பட்டது. ஆனால் சி எஸ் மோட் குழந்தைகள் மருத்தவமனையில் மருத்துவர் கிளன் கிரீன் ஒரு புதிய மருத்தவ சோதனையின் மூலம் கைபாவை மரணத்தின் வாசலில் இருந்து மீட்டுள்ளார்.

பாலிகாப்ரோலாக்டோன் என்கிற பயோபாலிமர் கொண்டு செய்யப்பட்ட ஒரு புதிய ஸ்பிளின்ட்  மூலம் கைபாவின் நுரையீரல்கள் சரியாக செயல்பட ஆரம்பித்துள்ளன! இந்த ஸ்பிளின்ட் பாப்பாவின் நுரையீரலில் வைத்து தைக்கப்படிருகிறது. இரண்டு ஆண்டுகளில் இது உடலோடு சேர்ந்து கரைந்துவிடும்!  இந்த ஸ்பிளின்ட் குழந்தை கைபாவின் சி டி ஸ்கேன் படத்தை ஒரு 3டி பிரிண்டரில் கொடுத்து பிரிண்ட் செய்யப்பட்டது குறிபிடத்தக்கது.

3டி பிரிண்டிங் முதல் முறையாக ஒரு குழந்தையின் உயிரை காத்திருக்கிறது.

அன்பன்
மது

3டி பிரிண்டிங் குறித்த ஒரு அறிமுகத்திற்கு...

Comments

 1. தங்கள் அனைவருக்கும் அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!..

  ReplyDelete
 2. புதிய அறிவியலின் ஆக்கபூர்வமான பணிக்கு வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 3. இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏற்படும் நன்மைக்கு இக்குழந்தை ஒரு எடுத்துக்காட்டு. பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி

  ReplyDelete
 4. வாழ்க அறிவியல்!.அந்தக் குழந்தை வளமாய் வாழ வாழ்த்துக்கள்!
  பகிர்விற்கு நன்றி அண்ணா

  ReplyDelete

Post a Comment

வருக வருக