Thursday, 22 September 2016

சீட்டாடிப்பார்

கருத்து: ஷாஜஹான்
வடிவம்: வைரமுத்து
ஆக்கம்: ஷான்


சீட்டாடிப்பார்
சம்பளத்துக்கு முதல் நாள்
கடன் வாங்கிப் பழகுவாய்

Thursday, 8 September 2016

டோன்ட் பரீத் மூச்சு விடாதேஅரிதினும்  அரிதான சந்தர்பங்களில் ஒரு சினிமாவின்  சக்தியை உணர முடியும். அது  கலை, ஒரு  பொழுதுபோக்கு என்பதைக் கடந்து அரங்கில்  இருப்பவர்களின்  உணர்வுகளை கிளர்ந்து, ஆகர்சித்து, கரைத்து நெகிழ வைக்கும் அதன்  சக்தியை திரையரங்கில் உணர்வது அரிது.

Monday, 5 September 2016

தி இத்தாலியன் ஜாப் 1969

படம் துவங்குவதே ஒரு அழகிய மலைப்பாதையில்தான். ஆல்ப்ஸ் மலைத்தொடரின் சாலைகளில் விரையும் சொகுசுக்காரை துரத்தும் காமிரா ஒருகணம் என்னைத் திகைக்க வைத்தது! 

என்னப்பா இது அறுபத்தி ஒன்பதில் வந்த படமா?

நீங்கள்  பார்த்தாலும் நம்புவது கடினம். கிரேட் செயின்ட் பெர்னாட் பாஸ் என்கிற மலைப் பாதையாம் அது. ஒரு தபா டிரைவ் செய்ய வேண்டிய பாதை. 

படத்தின் கதை அறுபத்தி  ஒன்பதுக்கு கொஞ்சம் அதிகம்தான். பிரிட்டிஷ் கும்பல் ஒன்று இத்தாலியில் இருக்கும் நான்கு  மில்லியன் டாலர் மதிப்புள்ள தங்கத்தை திருட திட்டமிடுகிறது. 

மைக்கேல் கேய்ண் இந்தப் படத்தில் அசத்தியிருக்கிறார்! பாட்மேன் படங்களில் பட்லராக வந்து கம்பீர முத்திரை பதிக்கும் கிழவரை நினைவில் இருக்கிறதா? அவரேதான். அறுபத்தி ஒன்பதில் தலை ப்ளேபாய்! 

படத்தில் விலாவலிக்க சிரிக்கவைக்கும் காட்சிகள் கூட சீரியஸாகவே வரும்! மைக்கேல் சிறையில் இருந்து விடுதலை பெற்றபின்னர் மீண்டும் சிறைக்குள் திருட்டுத்தனமாக நுழைவது அப்படிப்பட்ட காட்சிகளில் ஒன்று. 

சிறைக்குள் இருந்தாலும் தன்னுடைய குற்ற சாம்ராஜ்யத்தை ஆளும் பிரிட்ஜர்(நோயல் கவார்ட்), அவர் காட்டும் சிரிப்பூட்டும் கறார்தன்மை! உள்ளே இருந்தே வெளியில் இருப்பவரை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது, கிளைமாக்சில் தங்கத்தை ஆட்டையைப் போட்டாச்சு என்றவுடன் ஜெயிலில் படிகளில் நடனமாடி இறங்கிவருவது என தனது கதா பாத்திரத்தை வெகு அழுத்தமாக பதியவைத்திருக்கிறார் இவர். 

குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் முதலில் இந்த குற்ற திட்டத்திற்கு பணம் தர மறுக்கும் இவர் பின்னர் தருகிறார். எது அவரது மனதை மாற்றியது?
சிறையில் பேப்பர் பார்க்கிறார். ஒரு செய்தியின் மூலம் பியட் நிறுவனம் தனது தயாரிப்பு நிறுவனம் ஒன்றை சீனாவில் துவக்க இருப்பதை அறிகிறார். சினத்தில் கூப்புடுறா கெய்னை குடுடா பணத்தை என அதிரடிகிறார். வில்லனுக்கு கூட ஒரு நியாயம்?

அசந்து போகவைக்கும் கதை, காமிரா இவற்றுடன்  அப்போதே இத்தாலியன் போக்குவரத்து கட்டுப்பாடு கணிப்பொறிகளின் மூலம் நடத்தப் பட்டதை அறிகிற பொழுது எழும் அதிர்ச்சி எனக்கு மட்டும் தானா?

ஹாக்கர்(இவர் ஒரு வினோதமான பால் ஈர்ப்புடன் இருப்பதாக காட்டியிருப்பார்கள்), டிரைவர்கள், ஒரு அழகிய பெண், பல சொகுசு கார்கள், கொண்ட ஒரு பெரும் கும்பல் திருட்டில் ஈடுபட்டு அதை வெற்றிகரமாக முடிப்பதை ரசிக்கும் விதத்தில் தந்திருகிறார்கள்.

இத்தாலியின் அத்துணை சந்து பொந்துகளையும் அழகாக படமாக்கியிருக்கிறார்கள்.

இன்றைய ஓஷன் படங்கள் வரிசைக்கு பிள்ளையார் சுழி இந்தப் படமாக இருக்கலாம். 

ஓபன் எண்டிங்காக அந்தரத்தில் முடியும் படம் ஓர் பல்கலைக் கழக விவாதப் பொருளாக இருந்திருகிறது! 

தங்கம் ஏற்றிய ட்ரக் தடுமாறி முன்சக்கரங்கள் மலைப் பாதையிலும் பின் சக்கரங்கள் அதல பாதாளத்தை நோக்கியும் இருக்கும் காட்சி அதுவம் கெய்ண் ஒரு அடி எடுத்து வைத்தால் தங்கக் குவியலும் ஒரு அடி நகர்வது நிச்சயம் பார்வையாளர்களை சீட்டின் நுனிக்கு நகர்த்தியிருக்கும். 

படம் ஒரு அதிரி புதிரி வெற்றிப் படம். இன்று திரைக்கு வந்தால் கூட நன்றாக போகும் சாத்தியம் உண்டு. 

வாய்பிருந்தால் தவறவிடாமல் பார்க்க வேண்டிய படம்.

அன்பன் 
மது 


கிடாரி - ராஜாசுந்தர்ராஜன் பார்வையில்

கிடாரி- விமர்சனம்  ராஜா சுந்தர்ராஜன் 
______

என்பதில் ஒரு பெயர்க்குழப்பம் இருக்கிறது. சாத்தூர், அதாவது பழைய ராமநாதபுரம் மாவட்டம், என்றால் ‘கிடாரி’ என்பது பெட்டையைக் குறிக்கும். அதுவும் ஈனாத குமரு. இதில், நாயகனுக்கு பெயர் ஏன் ‘கிடாரி’?

ஹுமன் ஜெராக்ஸ் -சிறுகதை - கார்த்திக் கார்த்திக்

எல்லா  நண்பர்களிடமும்  பிடித்த  விசயமும்  இருக்கும் பிடிக்காத  விசயங்களும்  இருக்கும். எனது முகநூல் நண்பர் கார்த்தியின் சிறுகதை இது. 
கார்த்தியிடம்  எனக்குப் பிடித்த விசயங்களில் ஒன்று இது. 
இதோ  கதை 

"இதுதான் ஹியூமன் ஜெராக்ஸ் மிஷின்.!"விஞ்ஞானி ஆத்மா கொஞ்சம் படபடப்புடன் இருந்தார்.அரசின் முக்கிய அதிகாரிகள் சுற்றிலும் உட்கார்ந்திருந்தது அவருக்கு மிரட்சியை தந்திருந்தது.

Sunday, 4 September 2016

மெமரி கார்ட்

நிகழ்வுகள் நினைவுகள் நகரும் நாட்கள்

நிகழ்வு ஒன்று 
செயத்தக்க  செய்க வெள்ளி விழா நிகழ்வு !

தன்னை அறிதல், இலக்கமைத்தல், தொடர்பாற்றல் மேம்பாடு, கற்றல் திறன்கள் மற்றும் நினைவாற்றல் கருவிகள்  என  மாணவர்களுக்கு தேவையான வாழ்வியல்  திறன் பயிற்சிகளை கடந்த  ஆண்டு  புத்தாம்பூர் மேல் நிலைப் பள்ளியில் செவன்த் சென்ஸ் நிறுவனம் துவங்கியது நேற்று நடந்தது போல இருக்கிறது! 

Friday, 2 September 2016

குற்றமே தண்டனை _ ராஜா சுந்தர்ராஜன்

ஆக்கம் திரு ராஜாசுந்தர்ராஜன்
குற்றமே தண்டனை
____________________

படத்தின் இயக்குநர் M. மணிகண்டனுக்கு, முதலில், நன்றி; தமிழ்த்திரைப்பட ரசிகர்களுக்கும் போதுமான அறிவுண்டு என்று நம்பி இப்படி ஒரு படம் தந்ததற்காக! மரியாதைகெட்ட உலமுங்க இது. அதுவும் மலையாளிகள் அளவுக்கு கூட தமிழர்களுக்கு அறிவில்லையோ என்று, பெரியபெரிய எழுத்தாளர்கள் எல்லாம் எழுதியெழுதி, வாசித்த எனக்கே tunnel vision வந்துட்டதாகப் பயந்துபோய் இருந்தேன். நமக்கும் அறிவிருக்கு என்று மதிக்க, ஒருவர் களமிறங்கினால் அவர்க்கு நன்றிசொல்ல வேண்டுமா? இல்லையா?

‘Tunnel vision’ என்றால் என்னவென்று, இன்று காலையில்தான், எங்கள் டாக்டரம்மாவிடம் கேட்டுத் தெரிந்துகொண்டேன். இந்தச் சொல்லாடல், dtNEXT(தினத்தந்தி)-இல் “குற்றமே தண்டனை” விமர்சனத்தில் கண்டிருந்தது. அது விமர்சனம்கூட இல்லை; படக்குழுவினரை, பத்திரிகை அலுவலகத்துக்கு வருவித்து, சந்தித்த வாய்ப்பில் எழுதப்பட்டதொரு ‘We’re OK; You’re OK’ வகையான எழுத்தியாப்பு.

ஒரு கொலை நேர்ந்துவிடுகிறது; செய்தது இவரோ அவரோ என்று கொஞ்சூண்டு கதை சொல்லி, சிறந்த நடிகர்களைத் தேர்ந்துவிட்டாலே பாதிவெற்றி கிட்டிவிட்டதாகப் பாராட்டி, “இது off-beat படமல்ல வணிகப்படம்தான்” என்று இயக்குநர் சொன்னதாகப் பதிந்திருந்தார்கள்.

தலைப்பும், ‘குற்றமே தண்டனை’ என்றிருக்கிறதா? கொலை, உண்மையை அறிவதில் குழப்பம் என்றுவேறு தினத்தந்தி சொல்கிறதா? “Rashomon” காரணம் அகிரா குரோஸவாவுக்கு முதல்மரியாதை செய்துவிட்டாரோ? ஆனால் இதன் இயக்குநர் மிஷ்கின் இல்லையே, ‘காக்கா முட்டை’ மணிகண்டன் ஆயிற்றே?

வயதானதால் மறந்திருக்கும், எதற்கும் இன்னொரு தடவை பார்த்துவிடுவோம் என்று உட்கார்ந்து, காலையில்தானே, “ரஷோமோன்” படத்தை மீண்டும் பார்த்தேன். (எவ்வளவு வீட்டுப்பாடம்!) யப்பா! என்னா வடிவம்! என்னா உள்ளடக்கம்! என்னா நடிப்பு! என்னா விறுவிறுப்பு! 195௦-இல் வெளிவந்த படம் அது. நான்கூட பிறந்திருக்கவில்லை அப்போது.

அதனளவுக்கு விறுவிறுப்பாக இதனியக்கம் இருக்க வாய்ப்பில்லை என்றுதான் போனேன். ஆனால்...

நாயகனுக்கு tunnel vision என்பதை எடுத்தஎடுப்பிலேயே வெளிப்படுத்தி நம்மைப் பரபரப்பிற்குள் ஆழ்த்திவிடுகிறார். அவனே முக்காலே அரைக்காலே மாகாணிக் குருடு. அவனிடம் வந்து, “அண்ணா, ரோடு கிராஸ்பண்ணி விடுறீங்களாண்ணா?” என்று ஒரு குருட்டுப்பெண் வேண்டுவதும் இளையராஜா பின்னிசையில் இளகுவதும், ஆஹா!

விதார்த், ஐஸ்வர்யா ராஜேஷ், குரு சோமசுந்தரம் இவர்களையெல்லாம் நகரவாசிகளாக, இவ்வளவு மிடுக்காக, இதற்குமுன்பு நான் பார்த்தஞாபகம் இல்லை. நாசரும் உள்ளார். இவர்களெல்லாம் இருந்தால் அப்புறம் நடிப்புக்கு என்ன குறை? பூஜா தேவார்யா (தேவ+ஆர்யா) கூட கச்சிதம். தனக்கு வேலைபோனதைச் சொல்கிற காட்சியில் அவரது முகபாவம், அளவோடு, அது போதும்.

“இனிமேல் நீ இங்கே வராதே!” என்று நாசர், விதார்த்திடம், வார்த்தையால் கதவடைக்கிற கட்டத்தில், நம்மைப்போல் அறவாழிகளுக்கு, அது சரிதான் என்று தோன்றும். ஆனால் அதுதான் நம் உள்ளுணர்வை விழிப்பூட்டும் தருணம் என்று உணர்ந்திருக்க மாட்டோம். இறுதியில் வந்து, உள்ளுணர்வாகவே தொடுப்புக் கூட்டும் அது. விதார்த்தின் கேரக்டரைசேஷன், அவரது நடிப்பும், மிக அருமை!

ஒரு வாயொடுவாய் முத்தம், திரைபோட்டு, அதாவது ஒரு தலையை இன்னொரு தலை மறைத்தாற்போல் காட்டுவது வழக்கமாயிருந்த சிவாஜி கணேசன் காலத்திலும் அவர், வெளிப்பட்டு, தன் உதடுகளைத் துடைத்தால்தான் நமக்குப் புரியும். இப்போதும், மர்மத்தை அவிழ்த்தால்தான் புரியும் என்கிற மதிப்பீடு வசனகர்த்தாக்களின் வன்முறை விளக்கங்களால் விளங்கும். ஆனால் M.மணிகண்டன், கடைசியில், யூகித்துக்கொள்ளுங்கள் என்று விட்டுவிடுகிறார்.

“ரஷோமோன்” படத்தின் கடைசிக்காட்சியில் அந்தத் துறவி, இன்னும் இந்த உலகில் மனிதாபிமானம் இருக்கிறது என்று காண்பித்ததற்காக விறகுவெட்டிக்கு நன்றிசொல்வார் இல்லையா? அப்படி இன்னும் தமிழ்நாட்டில் அறிவிருக்கிறது என்று நம்பியதற்காக மணிகண்டனுக்கு மீண்டும் நன்றி!

“ரஷோமோன்” வேறுவகை; “குற்றமே தண்டனை” வேறு.

Wednesday, 31 August 2016

முதல் ஒலிம்பிக் பதக்கம் first Olympic Medal

திரு.ஷாஜகான் அவர்களின் முகநூல் இற்றை ஒன்று
ஜாதவ் முதல் ஒலிம்பிக் பதக்கம் 

வெற்றிமீது வெற்றி வந்து உன்னைச் சேரும்
வாங்கி வந்த பெருமைகளும் உன்னையே சேரும்.
நான் உள்பட கிட்டத்தட்ட எல்லாரும் சிந்து சிந்து என்று புகழ்பாடிக்கொண்டிருக்கிறோம். ஏதோ டிவியும் சமூக ஊடகங்களும் இருப்பதால் சிந்துவும் சாக்ஷியும் தெரிய வந்தார்கள், போற்றிக் கொண்டிருக்கிறோம். உண்மையில் நமக்கு கிரிக்கெட் தவிர இதர விளையாட்டுகள் குறித்து அல்லது விளையாட்டு வீரர்கள் குறித்து எவ்வளவு தெரியும்?

Tuesday, 30 August 2016

அது ஒரு கனாக் காலம்

முகநூல் பகிர்வு நன்றி கார்த்திக் கார்த்திக் மற்றும் ஷான்டிராவலர்

1936 ஹாக்கி அணியின் சோதனை காலமாக மாறியது. பெர்லின் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள பணத்தை தயார் செய்து செல்ல வேண்டிய கட்டாயம் இருந்தது.

Sunday, 28 August 2016

தேவை கொஞ்சம் தமிழுணர்வு - ஒருங்கிணைப்பு need co-operation and a movement

முகநூல் பகிர்வு -திரு கார்த்திக் கார்த்திக்கின் பதிவு 


தாமிரபரணி நதிக்கரையில் உள்ள சிறு கிராமம் ஆதிச்ச நல்லூர்.இடுகாடுகள் நிறைந்த இதனை முதன் முதலில் கண்டுபிடித்தவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த டாக்டர். ஜாகர் என்பவர்தான்.

Saturday, 27 August 2016

மாரத்தான் Marathon

ஷாஜகான் அவர்களின் முகநூல் பதிவொன்று

மாரத்தான் என்னும் சொல்லைக் கேட்டதுமே அவரவர் ரசனைக்கேற்ப பொருளோ வேறு சொல்களோ நினைவு வரக்கூடும். எனக்கு அத்தான்... என்னத்தான்.. அவர் என்னைத்தான்... என்கிற பாட்டுதான் ஞாபகம் வரும். :) அது போகட்டும்.

Monday, 22 August 2016

தர்மதுரை

எழுத்தாளர் ராஜா  சுந்தர்ராஜன்  அவர்களின்  விமர்சனம் கொஞ்சம்  பர்சனல்  டச்சோடு ..

தர்மதுரை
_____________
is a feel good movie.


இப்படிப்பட்ட படங்களை ‘மூவி’ என்று சொல்லக்கூடாது ‘ஃபில்ம்’ என்க வேண்டும் என்கிறார் டாரன்டீனோ. Yes, it’s a film indeed.
பொழுதுபோக்கிற்காக, லாபம்சம்பாதிப்பதற்காக பண்ணப்படுவது மூவி. கலைமதிப்பிற்காக, படிப்பினைக்காக ஆக்கப்படுவது ஃபில்ம்.

# செத்துப் போவேனோ என்று அஞ்சினேன் - ஓபி ஜெய்ஷா #

# செத்துப் போவேனோ என்று அஞ்சினேன் - ஓபி ஜெய்ஷா #

இந்தியாவின் சார்பில் ஒலிம்பிக்கில் மாரத்தான் ஓடிய பெண் இந்திய சாதனையாளர் ஓபி ஜெய்ஷா. அவர் 42கிமீ தூரத்தை 2 மணி 47 நிமிடத்தில் கடந்திருக்கிறார். ஆனால் அவரது சென்ற ஆண்டு சாதனை 2 மணி 34 நிமிடங்கள். எப்படி இவ்வளவு மோசமான ஓட்டத்தை ஓடினார் என்ற கேள்வி எழுகிறதல்லவா?

Friday, 19 August 2016

பலுசிஸ்தானும் சக்திவேலுத் தேவனும்

ஸ்ரீதர்  சுப்ரமணியன்  வெகு  ஆழமான புரிதலை ஏற்படுத்தும்  பதிவுகளுக்காக  அறியப்பட்டவர். இருபத்தி நான்கு மணிநேரத்தில்  இருபத்தி எட்டுமணி நேர  வேலையைக்  கோரும்  ஐ.டி  துறையில்   இருந்தாலும்  பிசாசு மாறி  படிக்கிறார்.

அவருடைய  நுட்பமான  ஆய்வு கட்டுரை  ஒன்று. ஸ்ரீ  ஒரு முன்னோடிப் பதிவரும் கூட ! தற்போது முகநூலில் !
ஸ்ரீதர் சுப்பரமணியன் 


Saturday, 13 August 2016

ஜோக்கர் திரை விமர்சனம்

ஆக்கம் : ராஜா  சுந்தர்ராஜன் அவர்கள்
தமிழின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவர், வெகு நுட்பமான பார்வை, ஆழமான மொழி ஆளுமை இவரிடம் நான் வியக்கும் பண்புகளில்  மிகச்சில.

ராஜா  சுந்தர்ராஜன் முகநூல் 

இனி திரைப்படம் அவர் பார்வையில்

Wednesday, 10 August 2016

ஜெய் வாழ்வில் மீண்டும் ஒரு வைகறை

வீதிக் கூட்டத்தில் மீண்டும் மலர்ந்த ஜெய்யின் புன்னகை


ட்விஸ்ட் அண்ட் டர்ன்ஸ் ஆப் லைப் என்றால் என்ன என்று குழந்தைகளுக்கு விளக்கவேண்டியிருந்தது. விளையாட்டாய் ஒரு மாணவனை அழைத்து அவன் கை ஒன்றைப் பற்றி திருப்பி இது ட்விஸ்ட் இப்போ அவன் திரும்புறானா அதுதான் டர்ன் என்றேன். வகுப்பில் சிரிப்பு.  ஆனால் சிலர் வாழ்வில் மறக்க முடியாதபடி வளைவுகளும் திருப்பங்களும் ஏற்பட்டு விடுவது பார்க்கத் திகைப்பாக இருக்கிறது. 

புதுக்கோட்டை மாவட்ட பாறை ஓவியங்கள் நூல் அறிமுகம்

வெகு நேர்த்தியான அச்சில் உயரிய காகித்தில், வண்ணப் படங்களுடன் சிநேகமான நடையில் ஒரு பாறை ஓவிய ஆய்வனுபவ  நூல்! இம்மாதிரி வண்ணப் படங்களுடன், நேர்த்தியாக வெளிவரும் நூல்கள் வெகு அரிது. உள்ளடக்கம் மட்டுமல்ல இதற்காகவும் இந்நூல் பொக்கிசமாய் பாதுகாக்கப்பட வேண்டிய நூலாகிறது.