Posts

Showing posts from January, 2015

வீதிக் கூட்டத்தின் மாதந்திர சிறுகதை அறிமுகம்

Image
எனது வீதி இலக்கிய கூட்டப் பங்களிப்பை இங்கே பகிர்ந்திருக்கிறேன்.  படித்த கதைகளின் பட்டியல் dropbox pdf ஒரு மணி நேரத்தில் இருந்து மூன்று மணி நேரத்திற்குள் படித்து முடித்துவிடுவதெல்லாம் சிறுகதை என்கிறார் ஒரு ஆங்கில இலக்கியவாதி. இன்னொருவர் ஆயிரம் வார்த்தைகளில் இருந்து நான்காயிரம் வார்த்தைகள் கொண்ட படைப்பைச் சிறுகதை என்று சொல்கிறார். 
தமிழ் வெகுமக்கள் பத்திரிக்கைகளில் தற்போது இந்த இலக்கிய வடிவம் என்ன பாடுபடுகிறது என்பதைப் பார்ப்போம். பல ஆண்டுகளுக்கு முன்னரே ஒருபக்கக் கதை என்று வந்து இலக்கிய உலகிலும் வாசகர் மத்தியிலும் கடும் விமர்சனத்திற்குள்ளான வடிவம் இன்றும் தொடர்வதை பார்க்கிறோம். 
இன்றைய தலைமுறைக்கு பத்து நொடித் தலைமுறை என்ற பெயர் இருப்பதை நாம் நினைவு கூற வேண்டும். எல்லாமே பத்து நொடிகளுக்குள் கிடைத்துவிட வேண்டும். இப்படி பட்ட விரைவுத் தலைமுறைக்கேற்ப இப்போது கதைகள் கார்னர் கதைகளாகவும் சிறு பத்திக் கதைகளாகவும் வரத்துவங்கி இருப்பதை பார்க்கிறோம். 
ஜன்னல் (ஜனவரி 15-31) இதழில் ஆனந்த் ராகவ் பதினைந்து கதைகளை இப்படி கார்னர் கதைகளாக எழுதியிருக்கிறார். சில வாக்கியங்களே கொண்ட கதை துணுக்குகள் இவை. 
ஒ…

வீதி கூட்டத்திற்காக சிறுகதைகள் பகிர்வு

25/01/2015 வீதி கூட்டத்திற்காக சில சிறுகதைத் தலைப்புகள்       
(கடந்த மாதத்தில் நான் படித்த சிறுகதைகளின் பட்டியல்)               
dropbox link
வ.எண்நாள்இதழ்தலைப்புஎழுத்தாளர்பேசுபொருள்கருத்து 1              25/12/2015         ஆனந்த விகடன் குதிரைக்காரன் குறிப்புகள்   லெக்ஷ்மி சரவணக்குமார்   ஒரு ஜாக்கிக்கும் அவனது குதிரைக்கும் இருக்கும் பிணைப்பை சொல்லும் கதை. அஷோக் என்கிற ஜாக்கி ப்ளூ மவுண்டன் என்கிற குதிரை ஆஷா என்கிற காதலி என சுழலும் கதை "அருமை, சி பிஸ்கட் என்கிற ஆங்கிலப் படத்தை நினைவூட்டினாலும் நல்ல கதை."

மாதொரு பாகன் நாவல் சர்ச்சைகள் சில பார்வைகள்

Image
அதி அற்புதமான இலக்கியப் படைப்பு. குழந்தையின்மையின் வலியைச் சொல்கிற, கிராமத்து மக்களின் உழைப்பைச் சொல்கிற, வாழ்வியலை வேளாண் யுக்திகளை சொல்கிற நாவல். 
எனது மனதிற்கு நெருக்கமாக காளியும் அவனது மனைவி பொன்னாவும் இன்னமும் இருக்கிறார்கள். 
முற்போக்காய்ச் சிந்தித்து அருவருப்பாய் அனாயாசமாய் கேள்விகளைக் கேட்கும்  நல்லுப்பையன் சித்தப்பா கதாபாத்திரம் செமை. 

மாதொரு பாகன் நாவல் பதிவிறக்கம்

Image
சமீபத்தில் வந்த படைப்புகளில் தேவையே இல்லாமல் அதிகம் விமர்சிக்கப்பட்ட நாவல்.  திரு.ஷாஜகான் அவர்களின் பகிர்வு இது. அவருக்கு எனது நன்றிகள்.

இணைப்பு இதோ
படித்துவிட்டு பகிருங்கள்
எதிர்க் கருத்துக்கள் ஏதும் தோன்றினால் தாரளமாக பின்னூட்டம் இடுங்கள்.

இது குறித்து ஞாநி அவர்கள் முகநூலில் தெரிவித்திருப்பதையும்  கவனத்தில் கொள்க.

அன்பன்
மது

வெறும் கருத்துரிமைக்கு எதிரான போராட்டம் என்று மட்டுமே பேச முடியவில்லை. 
இது குறித்து பல தளங்களில் வெளியிடப்பட்டுள்ள கருத்துக்கள் கவனத்துக்கு உரியவை. சில பின்னூட்டங்களை நான் வெளியிட விரும்பவில்லை. ஏன்? அது அவர்களின்மீது சட்ட நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கம் என்பதால். 

நாவலில் என்னை நான் தொலைத்துக் கொண்டிருக்கிறேன். வாசிப்பு முடித்ததும் கருத்தினை சொல்கிறேன். இதுவரை நண்பர்களின் அணியில் இருந்தேன். இன்னமும் தொடரவே விருப்பம். ஆனால் எனக்கும் கருத்து சுதந்திரம் இருக்கிறது என்றே நம்புகிறேன்.

நினைவுக் கற்களூடே ஒரு நடை (எ வாக் அமாங் தி டும்ஸ்டோன்ஸ்)

Image
படம் ஒரு அனாயசமான துப்பாக்கி சண்டையில் துவங்குகிறது.  நியூயார்க் போலிஸ் மாத்தியு ஸ்கட்டர் ஒரு பாரில் ஓசியில் குடித்துக் கொண்டிருக்கிறான். 
என்னது அங்கேயுமா ? 
மனிதர்கள் எல்லா இடத்திலும் மனிதர்கள்தான்!

அம்மாவின் பள்ளி

Image
எனது பால்யம் முழுவதுமே அம்மாவின் பள்ளி பற்றிய நினைவுகள் நீக்கமற இருக்கின்றன.
இன்று மாதிரி இணையம் தொ.கா என்றெல்லாம் இல்லாத அற்புதமான காலம் அது. சுஜாதாவையும் ஜெயகாந்தனையும் அம்மாவுடன் பேசிக்கொண்டிருப்பார் அப்பா.