Posts

Showing posts from March, 2013

காட்ச் மீ இப் யூ கான் (Catch Me If You Can)

Image
வெற்றிகரமான பிசினஸ் மேனின் மகன் தனது சூழலால் உந்தப்பட்டு தவறான வழிக்கு சென்றால் எப்படி இருக்கும்? பதில் இந்தப் படம். ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படயாக கொண்டு எடுக்கப்பட்ட படம்.

பிரான்க் அபிக்னல்  ஜூனியர் என்கிற பதினெட்டு வயது இளைஞனின் நம்பமுடியாத கருப்பு சாதனைகளே இந்தப் படம். பிராங்கின் தந்தையை அமெரிக்க வரித்துறை துரத்தி அவரின் பணத்தை பிடிங்கிகொண்டு ஓட்டாண்டியாக மாற்றுகிறது. 
தனது பள்ளியில் இன்னொரு வகுப்பறைக்கு போகும் பிரான்க்  அங்கெ பாடங்களை எடுத்து வீட்டுப் பாடங்களையும் கொடுக்கிறான். பாதியில் வரும் உண்மையான பதிலி ஆசிரியையை அசால்டாக திருப்பி அனுப்பி பாடத்தை தொடர்கிறான். சில நாட்கள் கழித்து உண்மை தெரிந்து அப்பா அம்மா வந்து ஜாமீன் போட்டு பிராங்கை பள்ளியில் தக்க வைகிறார்கள். பிராங்கின் சேட்டையை அப்பா ரசிக்க அம்மா கொஞ்சம் மூட் அவுட்டாக இருக்கிறார்கள். அப்பா அம்மாவை எப்படி காதலித்து மணந்தேன் என்பதை பெருமையுடன் சொல்கிறார்.
ஒரு நாள் பிரான்க் வீட்டில் நுழைய மெல்லிய இசை வீட்டில் வழிந்துகொண்டிருக்கிறது, திகீர் என்று அப்பாவின் நண்பர் படுக்கையறையில் இருந்து வருகிறார். அம்மா அப்பாவிடம் சொல்லாதே…

ஜிஅய் ஜோ ரிடாலியேசன்

Image
ஜி. அய் ஜோ ரைஸ் ஆப் தி கோப்ரா படத்தின் இரண்டாம் பாகம். முதல் பாகம் நம்பமுடியாத அறிவியல் கண்டுபிடிப்புகளின் உதவியோடு நடந்த அதிரடி திருவிழா என்றால் இரண்டாம் பாகம் அதைவிட சிறந்த அதிரடி சரவெடி.

ஜி.அய் ஜோ ஒரு அமெரிக்க ரகசிய அதிரடிப் படை, பயன்படுத்தும் கருவிகள் எல்லாம் வாவ் ரகம். (சில கருவிகள் உண்மையிலேயே பயன்பாட்டில் இருந்தாலும் மற்றவை சிறப்பான அறிவியல் கற்பனைகள்.) விரைவில் அவைகளும் பயன்பாட்டிற்கு வந்துவிடும்.

காமிரா மூலம் படமெடுத்து பிரீஸ் செய்து படத்தில் குறிவைத்து சுட்டால் குறியை தப்பாமல் தாகும் துப்பாக்கி. மனித உடல் சக்தியை பலமடங்கு கூட்டும் ஒரு கவச உடை. விமானத்தை கூட வீழ்த்தும் அல்ட்ர சோனிக்  துப்பாக்கிகள் என பட்டையை கிளப்பும் அடுத்த தலைமுறை அறிவியல் போராயுதங்கள் படத்தை இந்த தலைமுறைக்கு கவர்சிகரமாக மாற்றி இழுப்பதில் வியப்பேதுமில்லை.

படம் பாகிஸ்தான் பிரதமர் கொலையில் ஆரம்பிகிறது. பாகிஸ்தானில் அரசியல் சூழல் அபாயகரமாக இருப்பதால் அந்த நாட்டின் இரண்டு அணு ஏவுகணைகளை மீட்டுவர ஜிஐ ஜோக்கள்  உத்தரவிடப் படுகிறார்கள். (பாகிஸ்தானில் வெறும் இரண்டு அணுகுண்டுகள் தான் இருக்குமா? என்கிற குண்டக்க மண்ட…

டெத் ரேஸ் 3

Image

பிளைட்.

Image

ஜோரான முகநூல் பக்கம் -உங்களைத் தொலைத்து விடாதீர்கள்!

Image
Curtsey Thannambikkai · 6,899 like this Thursday at 9:42am · ஒரு மனிதனின் குழந்தைப் பருவத்தில் இருந்தே அவனை மற்றவர்கள் போல் மாற்றும் முயற்சி ஆரம்பிக்கிறது. "அந்தப் பாப்பாவப் பாரு எப்படி சமத்தா இருக்கு". குழந்தையில் இருந்தே மற்றவர் சிந்தனைகளையும், நம்பிக்கைகளையும் அவன் திணிக்கப் பெறுகிறான். "அவனைப் போல் இரு. இவனைப் போல ஆகு....." என்ற கட்டளைகள் வார்த்தைகளாகவும், சூட்சுமமாகவும் அவன் மனதில் ஏற்றப்படுகின்றன. இது தான் சிறந்தது, இது பிரயோஜனமில்லாதது என்பதை மற்றவர்கள் அவனுக்காக தீர்மானித்து விடுகிறார்கள். மற்றவர் வகுத்த பாதையில் பயணம் நடக்கிற வரையில் அவன் விமரிசனங்களை சந்திக்க வேண்டியதில்லை.

தனித்துவம் என்பதை பொதுவாக சமூகம் சகித்துக் கொள்வதில்லை. தப்பித் தவறி ஒருவன் தன் தனித்துவத்தில் சாதனை புரிந்து வெற்றி பெற்ற பின் அவனை ஓஹோ என்று போற்றுகிற சமூகம் அவனுடைய ஆரம்பகாலக் கட்டங்களில் அவனுக்கு உதவும் விதமாக இருப்பதில்லை என்பது கசப்பான உண்மை.

எத்தனையோ துறைகளில் தங்கள் தனித் திறமையால் முத்திரை பதித்தவர்கள் வாழ்க்கை சரிதத்தைப் படிக்கையில் நாம் இதை உணர முடியும்.

ஆனால் க…

காலம் தோறும் பிராமணியம் பாகம் நான்கு

Image