Posts

Showing posts from October, 2014

நல்ல கவிதை ஒன்று

Image
மரணம் நிகழ்ந்த வீட்டின்
மறுநாள்
கிடுகுகளின் வழியே
காலி இருக்கைகளில் அமரும்
வெய்யிலில்
யாரோ அமர்கிறார்கள்,
வரையறுக்கப்பட்ட கேள்விகளை
அது கேட்பதில்லை.
மேல் நோக்கி
அது கை நீட்டுவதில்லை.
அது ஒரு
தொடர் முத்தத்தை இடுகிறது.
ஒரு இரவு கொடுத்த
மொத்த துக்கத்தின்
துளைகளில்
மெல்ல வழிந்து நிரம்புகிறது.
பின் நகர்கிறது
அடுத்தடுத்த
காலி இருக்கைகளுக்கு.


- ஜெ. ஃப்ராங்க்ளின் குமார்

நண்பர் நந்தனின் பகிர்வு இது கவிதையைப் படிக்கும் பொழுது கடக்கும் அந்த சூரிய ஒளி என்னையும் கடக்கிறது ... நன்றி நந்தன் வாழ்த்துக்கள் ஜே.பிராங்களின் குமார் 
கவிஞர்கள், கவிதை பிரியர்கள் தவறவிடக்கூடாத பக்கம் ஒன்று  நந்தனின் கவிதைப் பக்கம் 

நிஜ நாயகர்கள்

Image
நிகழ்கால நாயகர்கள் நம் நினைவின் பரப்பிற்கே வருவதில்லை இதோ இருவர் தோழர் அறிவழகன் கைவல்யம் அவர்களின் முகநூல் பகிர்வு ஒன்று.

Arivazhagan Kaivalyamfeeling brave October 29 at 2:01pm·
திருப்புத்தூரில் இருந்து மதுரைக்குச் செல்லும் வழியில் பயணிப்பவர்களுக்குத் தெரிந்திருக்கும், கொத்திக் குதறப்பட்டிருக்கும் விவசாய நிலங்கள், இயற்கை வளங்கள், கிராமங்கள், தோட்டங்கள், கண்மாய்கள், ஆற்று நீர்ப்பிடிப்புக் கால்வாய்கள், பண்ணை வீடுகள், புன்செய் நிலங்கள் என்று எல்லாம் ஏறத்தாழ அழிக்கப்பட்டு கண்ணுக்கெட்டிய வரையில் கிரானைட் குவாரிகள் இறைத்திருக்கும் கற்கள்.

மதுரை பதிவர் சந்திப்பு 2014

Image
புதுகையில் நடந்த வலைப்பதிவர் பயிற்சியிலேயே திண்டுக்கல் தனபாலன் அண்ணாத்தே வலைப்பதிவு சந்திப்பு குறித்து சொல்லியிருந்தார். மிக நீண்ட காத்திருப்பின் பின்னர் ஒருவழியாய் அறிவிப்பு வந்தது.

ஒரு கோப்பை மனிதம்

Image
மதுரை பதிவர் மாநாட்டில் கலந்துகொள்வதை உறுதி செய்த விசயங்களில் ஒன்று சகோதரி கீதா அவர்களின் ஒரு கோப்பை மனிதம். 
திடீரென மகிழ்நிறையை அழைத்து ஒரு முன்னுரை தருக எனக்கேட்க நான்தான் நல்லா மாட்டிக்கிட்டேன். எதையும் பொறுப்போடு செய்யும் அம்மணி மகிழ்நிறை. லாப்பில் முழுத்தொகுப்பினையும் மின்வடிவத்தில் படித்து ஒரு உரையைத் தயார் செய்துவிட்டார்கள்.

துவரங்குறிச்சி, செவல்பட்டி பள்ளியில் நிகில் பயிற்சி

Image
நிகில் நிறுவனப் பயிற்சிகள் குறித்து நீங்கள் அறிவீர்கள் என்றே நினைக்கிறேன். கிராமப்புற பள்ளி மாணவர்களுக்குத் தன்னை அறிதல், இலக்கமைத்தல், தொடர்பாற்றல் மற்றும் நினைவாற்றல் பயிற்சிகளை இலவசமாக வழங்கி வரும் நிறுவனம் நிகில்.

துளிர் விடும் விதைகள், கிரேஸ் பிரதீபாவின் கவிதைத் தொகுப்பு

Image
அவையோருக்கு அடியேனின் பணிவான வணக்கம்

கவிஞர் கிரேஸ் பிரதீபாவின் துளிர் விடும் விதைகள் கவிதைத் தொகுப்பை வாழ்த்தும் முகத்து இங்கே உங்கள் முன்னே நான்.

ரஷ் Rush (2013 film)

Image
நிஜவாழ்க்கை கற்பனையைவிட கிளர்வூட்டுவது என்று சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அதை முழுமையாக உணரவேண்டும் என்றால் உண்மைச் சம்பவங்களில் இருந்து திரையில் விரிந்த ரஷ் பார்க்கவேண்டும். 
இயக்குனர் ரான் ஹோவர்டின் ஆகச் சிறந்த படம் என்று யு.எஸ்.ஏ டுடே சொல்லியிருக்கிறது. பார்த்தல்தான் புரியும். இரண்டு பார்முலா ஒன் ஓட்டுனர்களுக்கிடையே நிகழும் ஆரோக்கியமான போட்டி விரைந்தோடும் கார்களில் சடுதியில் வரும் மரணம் என படம் தொய்வின்றி பறக்கிறது. 

நிக்கி லௌடா என்கிற ஆஸ்திரிய ஓட்டுனருக்கும், ஜேம்ஸ் ஹன்ட் என்கிற பிரிட்டன்  ஓட்டுனருக்கும் நடக்கும் தொழில் போட்டியே படம். என்ன விசயம்  ஒருவரியில் இப்படி சொல்லிவிட்டு போய்விடாத வண்ணம் செதுக்கப்பட்ட திரைப்படம். 
முதலில் இது நீட் பார் ஸ்பீட் மாதிரியோ அல்லது பாஸ்ட் அண்ட் பியுரியஸ் மாதிரி சமூகவிரோத கார்பந்தயங்களை குறித்த பொறுப்பில்லாத ஆக்சன் குப்பை அல்ல. 
மோட்டார் ஸ்போர்ட் என்று  ஹிட்லரால் அறிமுகம் செய்யப்பட்டு  (ஜெர்மனின் தொழில் உன்னதத்தை உலகுக்கு காட்ட)   பின்னர் உலகெங்கும் பரவிய எப்.ஒன் கார்பந்தயம் குறித்த அகன்ற புரிதலைத் தரும் படம்.
இரண்டு வீரர்களுமே பெரும் செல்வந்தக…

இளையராஜா ஏன் ஆராதிக்கப்படுகிறார்?

Image
மீண்டும் ஒரு முகநூல் பகிர்வு ... இளையராஜாவை ரஹ்மானுடன் இன்னொரு கோணத்தில் இருந்து அணுகும் கட்டுரை திரு. Nelson Xavier அவர்களது. (அனுமதி பெற்ற பகிர்வு) 
கடந்த சில வாரங்களாக தொடர்நது ரஹ்மான் பாடல்களை பண்பலையிலும் மொபைலிலும் கேட்கிறேன். ஏற்கனவே கேட்ட பாடல்கள் என்றாலும் இப்போது கொஞ்சம் புதிதாக தெரிகிறது . என்னுடைய மனநிலையும் சூழலும் அதற்கு காரணமாக இருக்கலாம் . ரஹ்மானின் இசையில் ஒருவித தொடர்ச்சி இருக்கிறது. பல்லவி சரணம் வேறுபடும் இடங்களில் ஒருவித நிர்ணயிக்கப்பட்ட ரிதம் இருக்கிறது.

இன்னுமோர் கொசுவத்தி...

Image
நேற்று அவசரமாக பள்ளிக்கு சென்றுகொண்டிருந்தேன். முன்னால் ஒரு சைக்கிள் போய்க்கொண்டிருந்தது. ஏதோ வித்தியாசமாகப்பட்டது. சைக்கிளின் கேரியரில் உட்கார்ந்திருந்தவன் என்னைப்பார்த்து சிரித்தான்.
அட முன்னாள் மாணவன்.

லுக் பெசனின் லூசி Lucy 2014

Image
லூசி தைவானில் படிக்கும் ஒரு மாணவி. அவளது நண்பன் ஒருமுறை ஒரு பெட்டியை ஜாங் என்பவனிடம் கொடுத்துவர சொல்கிறான். லூசி மறுக்கிறாள். அவன் அந்தப் பெட்டியை அவளது கையில் விலங்கிட்டுவிடுகிறான். 

மலாலா எனும் மாயை!

Image
முகநூல் நண்பர் திரு.ரபீக் அவர்களால் பகிரப்பட்ட ஒரு தகவல். ஆப்கனின் நம்பிக்கை நட்சத்திரம் ஒன்றைக் குறித்த பதிவு. எனக்கு இந்தியாவில் இருந்த கைலாஷ் சத்யார்த்தியைப் குறித்த தகவல்கள் நோபலின் மூலமே தெரிந்தது.
உண்மையில் இப்படி பலர் அடையாளம் இல்லாமல் மானுட மேன்மைக்கு உழைப்பதால்தான் பூமி இன்னும் பிழைத்துக் கிடக்கிறது. ஷபானா பாஸிஜ் ராஸிக்கை அறிமுகம் செய்த அய்யா திரு ரபீஃக் அவர்களுக்கு நன்றிகள்!

பேராசிரியர் அ. தட்சிணாமூர்த்தி

Image
கோதரி ஈரநிலா தட்சிணாமூர்த்தி அவர்கள் தனது தந்தையைக் குறித்து முகநூலில் பகிர்ந்ததை அனுமதியோடு இங்கே பகிர்ந்திருக்கிறேன். ஏன் என்பது முழுவதும் படித்தால் தெரியும்.
1937 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஏழாம் நாள் மன்னார்குடி அருகில் இருக்கும் நெடுவாக்கோட்டை எனும் கிராமத்தில் விவசாயிகள் அய்யாசாமி–இராசம்மாள் தம்பதியினருக்கு என் தந்தையார் மகனாய்ப் பிறந்தார். படிப்புவாசனையே இல்லாதவராயிருந்தும், தன் மகனின் அறிவுத்திறனை அடையாளம் கண்டுகொண்ட என் பாட்டனார், கடும் சிரமங்களுக்கிடையிலும் தன் மகனைப் படிக்கவைப்பதில் உறுதியாயிருந்தார். பாதங்கள் பழுக்கப் பழுக்க மைல் கணக்கில் பள்ளிக்கு நடந்து சென்று, மண்ணெண்ணெய் விளக்கின் ஒளியில் படித்து, பள்ளிப்படிப்பை முடித்தவர், தமிழ்மொழியின் மேல் உண்டான அடங்காத அன்பினால் அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவனானார். தமிழ்மூதறிஞர்கள் திரு. தெ. பொ. மீனாட்சி சுந்தரனார், திரு. தண்டபாணி தேசிகர் போன்றவர்களின் அன்பையும், அறிவையும் பெற்றுத் தமிழில் புலமை அடைந்தார். தன்னுடைய ஊரில் முதன் முதலில் முதுகலைப்பட்டம்பெற்றவர் என்கிற பெருமையையும் பெற்றார். 33 ஆண்டுக் காலங்கள் தமிழாசிரியராகப் …

கொஞ்சம் சிரிக்கலாமே

Image
வந்தாரை வம்புக்கு இழுக்கும் சங்கம் முகநூல் பக்கத்தில் இருந்துஒரு மாணவன் தனது தேர்வு ஒன்றில்..
முட்டை மதிப்பெண் கிடைத்ததால்
பெரும் அதிர்ச்சி ஆனான்..! காரணம்
அவன் அனைத்து கேள்விகளுக்கும்..
சரியாக பதிலளித்திருப்ப
தாகவே நம்பினான்..!


சரியான பதிலை எழுதியதாகவே.. அந்த மாணவன்
தொடர்ந்து பள்ளி நிர்வாகத்திடம்..
வாதாடினான்..!
சரி.. அப்படி என்ன தான்
கேள்விகளுக்கு பதில் அளித்தான்.. என பார்ப்போம்..!

கேள்வி;- எந்த போரில் திப்பு சுல்தான்
உயிரிழந்தார்..?
பதில்;- அவரது கடைசி போரில்..!

கேள்வி;- இந்திய சுதந்திரத்திற்கான..
பிரமாணம் எங்கே கையெழுத்திடப்பட
்டது..?
பதில்;- காகிதத்தின் அடிப் பகுதியில்..!

கேள்வி;- சுப நிகழ்ச்சிகளில்..
வாழை மரங்கள் எதற்காக
கட்டப்படுகிறது..?
பதில்;- அவைகள் கீழே விழாமல்
இருப்பதற்காக.. கட்டப்படுகிறது..!

கேள்வி;- விவாகரத்திற்கான.. முக்கிய
காரணம் என்ன..?
பதில்;- திருமணம் தான்..!

கேள்வி;- இரவு- பகல்..
எவ்வாறு ஏற்படுகிறது..?
பதில்;- கிழக்கே உதித்த சூரியன்..
மேற்கில் மறைவதாலும்.. மேற்கில்
மறைந்த சூரியன் மீண்டும் கிழக்கில்..
உதிப்பதாலும் இரவு- பகல்
ஏற்படுகிறது..!

கேள்வி;- மகாத்மா காந்தி..

காலையில் என்ன பருகலாம்?

Image
வணக்கம் தினத்தந்தியில் இருந்து ஒரு பகிர்வு ...

காலையில் என்ன பருகலாம்?
*******************************************
காலையில் எழுந்தவுடன் காபி அல்லது டீ குடித்தால்தான் பெரும்பாலானவர்களுக்கு பொழுது விடிந்த மாதிரி இருக்கும். ஆனால் இது ஆரோக்கியமான பழக்கம்தானா என்ற கேள்வியும் அவர்கள் மனதுக்குள் ஒதுங்கிக் கிடக்கும்.

உண்மையில், நம் உடல் ஒருநாள் முழுக்க எப்படி இயங்கப்போகிறது என்பது நாம் காலையில் வெறும் வயிற்றில் முதலில் என்ன சாப்பிடுகிறோம் என்பதைப் பொறுத்தே உள்ளது.


எனவே காலையில் நாம் முதன்முதலில் பருகுவது நம் உடல்நிலையைப் பொறுத்தும், சூழ்நிலையைப் பொறுத்தும்தான் இருக்க வேண்டும்.

அப்படி, காலையில் நாம் பருகக்கூடியவற்றைப் பார்க்கலாம்...

தண்ணீர்: ஒருநாள் முழுவதும் குடிக்க வேண்டிய தண்ணீரில் கால் பங்கு நீரை, காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் அரை மணி நேரத்துக்குள் குடிக்க வேண்டும்.

குளிர்ந்த நீரைப் பருகுவது நல்லதே. ஏனெனில் குளிர்ந்த நீருக்கு அசிடிட்டியைக் குறைக்கும் தன்மை, வெந்நீரைக் காட்டிலும் அதிகம்.

வெறும் தண்ணீருக்குப் பதிலாக வெந்தயத் தண்ணீர் கூட அருந்தலாம். வெந்தயத்தை முந்தைய நாள் இரவே குளிர்ந்த…

விடைபெற்றார் காப்டன் அப்பாஸ் அலி

Image
எனது முகநூல் நண்பர் ஜே.முகைதீன் பாட்சா அவர்களின் பதிவு ஒன்று 

94 வயது சுதந்திரப் போராட்ட வீரர் கேப்டன் அப்பாஸ் அலி அக்டோப்பேர் 11 அன்று  அலிகாரில் காலமானார்கள். (இன்னாலில்லாஹி...).

புரட்சித் தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திர போசின் "இந்தியன் நேஷனல் ஆர்மி"யில் தன் உயிரைப் பணயம் வைத்து பணியாற்றிவர்.

The Summer Flight

Image

A Flight With The Moon On Their Wings

Image

A Close Encounter - Rex Coker

Image

The Cry Of The Children - Elizabeth Barrett Browning

Image

The Face of Judas Iscariot - Bonnie Chamberlain

Image

Making Visible The Invisible

Image

Swept Away - Susannah Hickling

Image

Will Thirst Become Unquenchable?

Image

Going For Water Robert Frost

Image

If (Manliness) a poem by Rudyard Kipling

Image
உங்களால் கனாக் காண முடியுமா ?

A Golden Path Gopala Krishna Gokhale

Image
இது தங்கப் பாதை


The Piano Lesson - Rob Reily

Image
இசை, பணி, சம்பளம்,

The Piano(Poem) D.H. Lawrence

Image
பியானோ இசைக் கருவியின் நீங்கள் எல்லோரும் பார்த்ததுதானே?
இவர் கவிஞர் டி.ஹச்.லாரன்ஸ்