Posts

Showing posts from November, 2016

டிசிர்டோ

Image
ஜோன்ஸ் குரான் இயக்கத்தில் 2015இல் வந்த படம். 
ஒரு மரக்கூண்டு, அதன்மீது தார்ப்பாய், சுமார் நாற்பது பேர் அந்த வண்டிக்குள், பார்த்தவுடனே தெரிகிறது புலம்பெயர்பவர்கள். கூண்டு ஆடி ஆடி விரைகிறது. மெல்ல நிற்கிறது. இப்போது காமிரா வெளியே வருகிறது. அது பெரிய லாரி அல்ல! ஒரு பிக்கப் ட்ரக்!

புதுக்கோட்டை வாசிக்கிறது

Image
குழந்தைகளிடம் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களிடமிருந்து ஒரு உத்தரவு வந்திருப்பதாக தலைமையாசிரியர் அறிவித்தார். 
வேறொன்றுமில்லை குழந்தைகளிடம் நூலகப் புதகங்களைக் கொடுத்து ஒருமணிநேரம் வாசிப்பில் ஈடுபடுத்தவேண்டியதுதான். மாவட்டத்தின் எண்பதாயிரம் குழந்தைகளும் இந்த திட்டத்தின்படி 21/11/2016 அன்று காலை பத்து மணி முதல் பதினோரு மணிவரை வாசிப்பில் ஈடுபட வேண்டும் என்று பணிக்கப்பட்டனர். 

இன்று காலை சரியாக பத்து மணிக்கெல்லாம் குழந்தைகளிடம் நூல்கள் வழங்கப்பட்டன. வாசிக்கப் பணித்ததும் வாய்விட்டு உரக்க வாசித்தனர் சில குழந்தைகள். 

பொறுமையாக வாசித்தல் என்பது வாய்விட்டு உரக்க வாசிப்பது மட்டுமல்ல. மௌனமாகவும் வாசிக்கலாம். உணர்ந்து, அனுபவித்து வாசித்து பழகுங்கள் என்று மீண்டும் மீண்டும்.... மீண்டும் சொல்ல வேண்டியிருந்தது. 
ஒருமணிநேர வாசிப்பின் பின்னர் ஏழாம் வகுப்பு முருகேசன் அவன் படித்த ஒரு கதையை மாணவர்களிடம் ஒலிபெருக்கிமூலம் பகிர்ந்துகொண்டான். பின்னர் ஒன்பதாம் வகுப்பின் திவ்யதர்ஷினி தான் படித்த வியாச பாரதம் குறித்து சில விசயங்களை சொன்னார். 

மகிழ்வுடன் மாணவர்கள் தங்கள் வகுப…

இப்பத் தெரிகிறதா?

Image
அன்பான நண்பர்களே வணக்கம்...      அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் போராடிய போது பெரும்பாலான ஏன் அனைத்து ஊடகங்களுமே போராட்டங்களை கொச்சைப் படுத்தி விவாதித்தன விமர்சித்தன.

டாக்டர் ஸ்ட்ரேஞ்

Image
ராஜசுந்தர்ராஜன் பார்வையில்

ஒரு மருத்துவர்தான். மூளை நரம்பியல் மருத்துவர். முனைவர் (Ph.D) பட்டம் பெற்றவர்களும் ‘டாக்டர்’களே. ஏன் கருணாநிதி, ஜெயலலிதாகூட ‘டாக்டர்’தாம். ஆனால் ஒரு மருத்துவர் தன்னிடம் வைத்தியத்துக்கு வந்த கொடூரனைக்கூட வேண்டுமென்றே கொல்லமாட்டார். ஒரு விஞ்ஞானி அல்லது பிற அறிஞர்கட்கு அது கட்டாயமில்லை.

அச்சம் என்பது மடமையடா -ராஜசுந்தர்ராஜன் பார்வையில்

Image
விமர்சனம் - ராஜ சுந்தர்ராஜன்

___________________________
கே. பாலச்சந்தர் புதுமையாக அணுகுவதில் ஆசைப்பட்ட ஓர் இயக்குநர். “புன்னகை” படத்தில் ஒரு ‘ரேப்’ ஸீன் உண்டு. அதைப் புதுமையாகச் செய்துகாட்ட விரும்பினார். கதாநாயகி மாராப்பு நழுவ, “ஆணையிட்டேன் நெருங்காதே!” என்று வில்லனை விரல்நீட்டி எச்சரித்துப் பாடுவார். அப்படியும் அவன் நெருங்க, இவள் நொறுங்க...

அதேபோல சீரியஸான ஒரு கட்டத்தில் (ரேப் இல்லை), இந்தப் படத்தில், ஒரு பாட்டு வைத்திருக்கிறார் இயக்குநர் கௌதம் வாசுதேவ மேனன். இடைவேளைக்கு சற்று முந்தி வரும் பாட்டு. ஆனால்...
படம்தொடங்கி அரைமணி நேரத்துக்கு வெறும் தொணதொணப்பு. வாயால் விவரித்து கதைசொல்கிற மழுங்கல்-கத்தி. அப்புறம் ஆரம்பிக்கிறது ‘பைக்’ சுற்றுலா. அதில் நாம் எதிர்பார்க்கிறபடி அனைத்தும் அப்படிஅப்படியே நடக்கிறது. என்றாலும் மோசமில்லை. ஏ.ஆர்.ரஹ்மான் பாட்டுமேல் பாட்டாக போட்டு தொய்வு தெரியாமல் பார்த்துக் கொள்கிறார்.

இப்படியே போய் இந்த நாயகனுக்கும் நாயகிக்கும் தங்களுடைய குணம்/மனச் சிக்கல் காரணமாக முரண்பாடுகள் தோன்றி கதை நகர்ந்தால் இது ஓர் அகத்திணைப் படமாக அமைய வாய்ப்புண்டு (எ.டு. “விண்ணைத்தாண்டி வர…

பேரிடர் நாட்குறிப்பு ஒன்று

நண்பர்களுக்கு வணக்கம் ...

கருப்புப் பணம் குறித்த முகநூல் பகிர்வுகளை இங்கே தர இருக்கிறேன்.

ஒரு பொருளாதாரப் பேரிடர் குறித்த நாட்குறிப்பாட்டம் இருக்கட்டும் என்பதற்காக ...

நன்றி

மெமரி கார்ட்

Image
மீண்ட பதிவர்கள்

சில ஆசிரிய ஆளுமைகள் பதிவுலகில் இருந்தார்கள். வெகு எளிய காரணத்திர்காக ஒருவரும் புரிந்துகொள்ளக்கூடிய  காரணத்தினால் ஒருவரும் வலைப்பூ உலகில் இருந்து விலகி இருந்தனர்.

கருப்பு பணம்

Image
Raja M Raja கல்புவின் எக்கானமி குத்து...

அண்ணே இந்தியாவே ஆடிப்போச்சுன்ணே.. அம்புட்டு கறுப்பு பணமும் வெளியில வரப்போவுது பணப்பொழக்கத்துல இந்தியா ரெண்டாவது ஜப்பானா மாறப்போவுதுண்ணே..