Posts

Showing posts from January, 2013

நீங்கள் தடை செய்ய வேண்டிய இன்னொரு படம்

Image
வெர்டிகல் லிமிட் படத்தில் கே டூ மலை சிகரத்தை அடைய பாகிஸ்தானுக்கு செல்வான் ஹீரோ, அப்போ சில காட்சிகள் வரும்  பாங்கிற்கு பின் பாகிஸ்தானிய இராணுவ தளபதி சொல்லுவார் ஒ நாலு மணி இந்தியர்களை எழுப்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது.
பின்னர் பீரங்கிகளை இந்தியாவை நோக்கி திருப்பி ஒன் டூ த்ரீ அல்லாகு அக்பர் என்று முழங்கி வெடிப்பார்கள். அந்த படத்தை நீங்களும் நானும் ரசித்து தானே பார்த்தோம்?

என்றும் என் பிரியத்திற்குரிய  முஸ்லீம் சகோதர்களுக்கு, மதம் என்பது மனிதனை நல்வழிப் படுத்தவே, அது எந்த மதமாக இருந்தாலும் கடவுளின் பெயரை சொல்லி வன்முறையில் இறங்குவது கடவுளை சாத்தனின் நிலைக்கு கொணர்வதே.
ஒருபுறம் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது நீங்கள் ஒன்றிணைந்திருப்பது, இருந்தாலும் உங்கள் எதிர்ப்பை நீங்கள் இஸ்லாம் காட்டும் சாத்வீக வழியில் தான் பதிவு செய்திருக்கவேண்டும்.
இஸ்லாத்தை இகழ்வோனை வெட்டு என்பது மட்டும்தான் நபி மொழியா?  அவர் உங்கள் வீட்டில் 7 1/2 பவுண் தங்கம் இருந்தால் ஏழைகளுக்கு எவ்வளவு செய்யவேண்டும் என்ற சொன்ன அளவுகள் மறந்துவிட்டதா?
டிசம்பர் ஆறு எனக்கும் ஒரு கருப்பு தினமே, நீங்கள் என்போன்ற பெருவாரி மாற்று மத சக…

பெரிய ஜவுளி மாளிகை

Image
சமீபத்தில் எங்கள் குடும்ப திருமணம் ஒன்றிற்காக இந்தியாவின் பெரிய ஜவுளி மாளிகை ஒன்றிற்கு செல்ல நேரிட்டது. அநேக கணவர்களைப் போலவே நானும் செலக்சனை அம்மணியிடம் தள்ளிவிட்டு குழந்தைகளுடன் கொஞ்சம் எங்காவது அமரலாம் என்றால் பல்பு கிடைத்ததுதான் மிச்சம்.
இந்தியாவின் பெரிய ஜவுளி மாளிகை வாடிக்கையாளர் அமர்வதற்கு இரண்டு இடங்களை மட்டுமே கொண்டிருந்தது. ஒன்று இரண்டாவது வாசலின் வெளியே இன்னொன்று வடக்குப் படியின் மடிப்பில் எண்ணி பத்து நாற்காலிகள். ஆகா என்னே நமது நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை என்று நினைத்துக்கொண்டு அமர்திருந்த வேலையில் தோன்றியவை. பட்டுப் பிரிவின் உள்ளே அமரலாம் என்றாலும் அது சில சங்கடங்களை தரலாம். பட்டு எடுக்கும் வரை அமரலாம் அப்புறம்?
இந்த நிறுவனத்திற்கு இலவசமாய் சில வருவாய் வழிகள் ப்ளஸ் சேவை நிறைவு ஆலோசனைகள், உங்கள் நிறுவனத்திற்கும் பயன்படலாம்..
 1. மொட்டை மாடியில் ஒரு குழந்தைகள் தீம் பார்க்!
எடை குறைவான பிளாஸ்டிக் சருக்கல் மற்றும் எடை குறைவான விளையாட்டுகள் கட்டணத்துடன் தருவது.
2. வீடியோ கேம் ஆர்கேட்.
3. வை பீ சேவை ஒரு குறிப்பிட்ட பகுதியில் வை பீ சேவை வழங்குவது வருவாய், சேவை மற்றும் புதிய …

சக ஆசிரியர்களுடன் நட்பு

Image
தோழர்களுக்கு வணக்கம்,
வருகைக்கு நன்றி.

பள்ளியில் புதிதாக சேரும் ஆசிரியர்கள் பெரும்போலானோர் ஆர்வம் மிகுதியில் மகிழ்ச்சியுடன் பணியாற்றுவார்கள். இது இயல்பானது.

சில நடைமுறை உண்மைகளை நாம் பகிர்ந்துகொண்டால் நல்லது என்பதால்தான் இந்தமடல்.

நீங்கள் நன்றாக பணியாற்றினால் மட்டும் போதாது.

எனது நண்பனுக்கு நிகழ்ந்ததை சொன்னால் விசயம் பளிச்சென்று புரியும். நண்பன் 26 வயதில் போட்டித் தேர்வின் மூலம் தினம் பணம் புழங்கும் ஒரு துறையில் பணியில் சேர்ந்தான். குடிமைபணிக்கு தயார் செய்தவன் என்பதால் இயல்பாகவே ஒரு துடிப்பும் நேர்மையும் உள்ளவன். அலுவலகத்தின் செங்கல் கூட பணம்வாங்க பயல் நிமிர்ந்துகொண்டு லஞ்சம் பெற மறுத்தான்.

இதுவரை சரி. ஆனால் ஒரு தவறையும் செய்தான். லஞ்சம் பெறும் சக ஊழியரை கேவலமாக பார்ப்பதும் (பார்வை மட்டுமே ) அவர்களிடமிருந்து விலகியும் இருந்தான்.


சில மாதங்களில் நண்பனுக்கு ஒரு பெண்ணை பேசி முடிக்க இருந்தார்கள் பெற்றோர். ஆனால் பெண்வீட்டார் கடைசி நேரத்தில் மறுத்துவிட்டனர். எல்லாம் அலுவலக நண்பர்களின் கைங்கர்யம்தான். ஒரே வாரத்தில் எனது நண்பனுக்கு திருமணமாகிவிட்டதாகவும் விவாகரத்து ஆகிவிட்டதாகவும் ஒரு பொய்யை …

ஒரு மடல்

Image
புதிதாக பணியேற்ற ஆசிரியர்களுக்கு ...


நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள். இந்த சமுகத்தின் மிக அற்புதமான பணிவாய்ப்பு தங்களுக்கு கிடைத்திருக்கிறது. பலநூற்றாண்டு கலாச்சார தொன்மை கொண்ட இந்த பாரத திருநாட்டின் எதிர்கால சிற்பிகள் நீங்கள். இது எல்லாருக்கும் வாய்க்காது. நீங்கள் தெரிவு செய்யப்பட்டவர்கள்!
மாணவர் நலன்
உங்களில் அநேகர் தனியார் பள்ளிகளில் பணியாற்றி இருக்ககூடும். தனியார் பள்ளிகளில் அநேக மாணவர்கள் அருமையாக படிப்பார்கள். ஒரு பாடத்தை மாணவர்களுடன் இயந்து நடத்துவதில் உள்ள சுகத்தை நிறையபேர் அனுபவித்து இருப்பீர்கள்.
உங்களுக்கு சவாலாக சில மாணவர்களும் இருந்திருப்பார்கள். அரசுப் பள்ளிகளில் இருக்க கூடிய அநேக மாணவர்கள் சவாலான மாணவர்கள் தான்.
நான் அரசுப் பள்ளியில் சேர்ந்த புதிதில் எனது கல்வியியல் பேராசிரியர் திரு ஜம்புநாதன் அய்யா தனது மாணவர் ஒருவருக்கு சொன்னதை அடிக்கடி நினைவுகூர்வது வழக்கம்.
புதிய ஆசிரியர் ஒருவர் அவரிடம் பயலுகளுக்கு ஒன்னும் தெரியல சார், என்று சொல்லி வருத்தப்பட சிறிய புன்னகையோடு ஜம்பு அய்யா திரும்ப கேட்டார் "அவனுக்கு எல்லாம் தெரிஞ்சுட்டா உனக்கு என்னப்பா வேலை?" அவனுக்கு ஒன்னும…

அலெக்ஸ் பாண்டியன்

Image
ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம்.

கார்த்தியின் இந்த ஸ்டில் ஒன்றே படத்தை பற்றி சொல்லாமல் சொல்கிறதாக படுகிறது.சாரி நோ கமெண்ட்ஸ்

அருணன் வீசும் ஒளிக்கதிர்கள் 1

Image
அசுரர்கள் யார்?

சில ஆய்வாளர்கள் அசுரர்கள் இந்தியாவின் பூர்வ குடிகள் என்றும், சில ஆய்வாளர்கள் அசுரர்கள் அஸ்ஸிரியாவில் இருந்து ஆரியர்களுக்கு முன்பே குடிவந்தவர்கள் என்றும் கருதுகிறார்கள்.
இவர்கள் ஏன் யாகங்களை சிதைக்கவேண்டும்?
யாகங்கள் ஒரு குறியீடு. ஒரு வனத்தில் யாகங்கள் நடந்தால் அது ஆரியருக்கு சொந்தமாகிவிடும்! அப்போ வனத்தின் பூர்வ குடிகள் வாயில் வாழைப்பழத்தை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருப்பார்களா? 
எனவே அவர்கள் யாகங்களை சிதைத்தனர். சரியான திட்டமிடலோ வழிகாட்டலோ இல்லாததால் ஆரிய சூழ்ச்சிக்கு பலியாயினர் என்றே கருத வேண்டியிருக்கிறது. 
பொதுவாகவே இந்தியாவில் நாகர்கள், அசுரர்கள் என பூர்வகுடிகள் இருந்துவந்தனர். இவர்களின் தோல்வியை இவர்களின் கலாச்சார அழிவை தீபாவளியாக கொண்டாடுகிறோம்.
மீண்டும் ஒரு மறுவாசிப்பு சிவபெருமான் பார்வதி தேவி திருமணத்தின் போது தேவர்கள் எல்லாம் திருக்கயிலையில் கூடியதால் வடஇந்தியா தாழ்த்தும் தெற்கு உயர்ந்தும் போனதால் அகத்தியரை அனுப்பி சரி செய்ததை நாம் திரைப்படங்களில் நாடகங்களில் பாட்டி சொல்லும் பக்தி கதைகளில் கேட்டு பரவசப்படிருப்போம்.
நடந்தது என்ன?

வேதகாலத்தின் எழுச்சியில் பிராமண…

ஒரு ஆய்வு சில அதிர்வுகள்

Image
மைல்டா ஒரு ஷாக் வைல்டா ஒரு தாட்

நம்புங்கள் வெற்றி உமதே

சாலிக்மான் என்கிற உளவியல் அறிஞர் தனது ஆய்விற்காக சில நாய்க்குட்டிகளை பயன்படுத்திவந்தார்.   ஆனால் அவருக்கு தெரியாது அந்த ஆய்வு மனித குலத்திற்கு ஒரு அற்புதமான உண்மையை சொல்லப்போவது.
ஆய்வினை இரண்டு கட்டமாக பிரித்த அவர் முதல் கட்டடம் கண்டிஷனிங்க், இதில் நாய்கள் அனைத்திற்கும் ஒரு ஒலி அறிமுகம் செய்யப்பட்டது இதனை தொடர்ந்து ஒரு சிறிய மின்னதிர்ச்சி தரப்பட்டது. பீப் என்று ஒரு சத்தம் ஒரு மைல்ட் ஷாக்.
இரண்டாவது கட்டதில்  இரண்டு அறைகளை கொண்ட ஒரு பெட்டியில் நாய்கள் விடப்பட்டன. பீப் ஒலி கேட்டவுடன் நாய்கள் தவ்வி அடுத்த அறைக்கு போனால் அவற்றுக்கு மின்னதிர்ச்சி  கொடுக்கப்படக்கூடாது என்ற வகையில் சோதனை வடிவைமைப்பு செய்யப்பட்டிருந்தது.
ஆனால் இரண்டாவது கட்டச் சோதனையில் மின்னதிர்ச்சி நாய்களுக்கல்ல ஆய்வாளர்களுக்கு! ஆமா இருக்காதா பின்னே. பீப் ஒலி கேட்டவுடன் நாய்கள் மெல்ல முனகிக்கொண்டு படுத்துவிட்டன!
அவை என்ன பன்னுவ சத்தம் அப்புறம் ஷாக் என்று நினைத்திருக்க வேண்டும்! எப்போது பீப் ஒலி கேட்டாலும் முனகிக்கொண்டு படுத்துவிட்டன! பெட்டியின் அடுத்த அறைக்கு தாவவே இல்ல…

ஈமிஸ் தேவையா?

Image
பறந்து பறந்து அத்துணை மாணவர் விவரத்தையும் படபடப்பாய் பதிவேற்றும் ஆசிரியர்களுக்கு வாழ்த்துகளுடன் துவங்குவோம்.

இது தேவையா?

ஆணையிட்டால் செய்துதானே ஆகவேண்டும்? ஆகவே இந்தக்கேள்வி தேவையற்றது.

டேட்டா பேஸ் பற்றி தெரிந்தால் இந்தப் பணியின் அவசியம் புரியும்.

ஒரு ஆய்வுக்காக உங்களுக்கு கீழ்க்கண்ட விவரங்கள் தேவைப்படுகிறது.


தமிழ்நாட்டில் எட்டாம் வகுப்பில் எத்துனை பெண்குழந்தைகள் படிக்கிறார்கள்?இவர்களில் அரசுப்பள்ளிகளில் படிப்பவர்கள் எத்தனைபேர்?இவர்களில் எத்துனை பேர் மாற்று திறனாளிகள்?

இப்படி ஒரு நூறு கேள்விகளுக்கு விடை வேண்டும் என தகவல் அறியும் சட்டத்தில் கேட்டாலே குறைந்த பட்சம் மூன்று முறையாவது வாய்தா கேட்ட பின்பே ஆறுமாதத்தில் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. அதுவும் சந்தேகம்தான்.

ஆனால் இன்னும் ஒரு ஆயிரம் கேள்விகளுக்கு சில வினாடிகளில் பதில் தரலாம் என்றால் ஆச்சர்யமாக இல்லை, இதை சாத்தியப்படுத்துவது இந்த ஈமிஸ்.

இதன் மூலம் திட்டமிடல் நூறுசத துல்லியத்துடன் நடக்கும். செயல்படுத்துதலும் அவ்வாறே.

மேலும் ஒரு பயன் 

கல்விசார் ஆய்வுகள் இனி மேம்படுவதுடன், இந்த மாபெரும் தகவல் தொகுப்பு ஒரு தங்க சுரங்கம். டேட்டா இஸ் கிங்.…

ஈமிஸ் சில டிப்ஸ்

Image
ஈமிஸ் கல்வி மேலாண்மைக் காண தமிழக அரசின் தளம் ஒன்று செயல்பட்டுவருவது ஆசிரியர்களுக்கு தெரிந்ததே. இந்த தளத்தை கணிப்பொறி ஆசிரியர்கள் விரைந்து பயன்படுத்துவார்கள். அது அவர்கள் பேட்டை.
இருந்தாலும் சில டிப்ஸ் இருந்தால் அனைவரும் விரைவாக தரவுகளை உள்ளிட எதுவாக இருக்கும் என்பதால் இந்தப்பதிவு.
பிரௌசரில் தளத்தின் உரலியை சரியாக தட்டச்சு செய்து தளத்தை அடைவது முதல்கட்டம்.
பயனர் பெயரையும் கடவுச்சொல்லையும் தந்து முறையாக தளத்தின் உங்கள் பள்ளியின் பக்கத்தை திறப்பது இரண்டாவது படி.
முதலில் வரும் பக்கம் உங்கள் பள்ளியின் ஹோம் பக்கம். வலதுபுற மேல் மூலையில் உங்கள் பள்ளியின் பெயர் தெரிவதை உறுதி செய்யுங்கள்.
நீங்கள் ஏற்கனேவே மாணவர் விவரங்களை உள்ளீடு செய்திருந்தால் அவர்களின் விவரம் ஒரு பட்டியலில் காட்டப்படும். இல்லாவிட்டால் நீங்கள் விவரங்களை உள்ளிட உள்ளிட அவை பட்டியலில் காண்பிக்கப்படும்.
முதலில் உள்ள பட்டியல் பள்ளியின் மொத்த வகுப்புகளையும் அதில் நாம் உள்ளீடு செய்த மாணவர் எண்ணிக்கையையும், மொத்தமாகவும், வகுப்புவரியாகவும் காட்டும்.
இரண்டாவது பட்டியலில் முக்கிமானது யூனிக் ஐடி மட்டும் வியு பட்டன்.
வியு பட்டணை அழுத்த…

சி செட் 12

Image
சி செட் 12

நாளும் கோளும்
நலிந்தோர்க்கு இல்லை
ஞாயிற்றுக் கிழமையும்
பெண்களுக்கில்லை

என்ற ரகளையான கந்தர்வனின் கவிதையோடு துவங்கியது இன்று. எசகு பிசகான மின் தடையால் பேசாம தூங்குவோமா என்று நினைத்துக்கொண்டிருந்தபோது செல்வராஜ் அழைத்து தம்பி விட்டோபா கோவிலில் விசேசம் அர்ச்சனை மந்திரத்தில் உன்னுடைய பெயரைக் கேட்டமாத்திரத்தில் உனக்கு அடிச்சேன். வந்து சாமி கும்பிட்டு போவேன் என்றார்.
வீட்டில் ஒரு லிஸ்டை நீட்டவும் வீட்டு வேலையை முடித்துவிட்டு குளித்து நேராக போன இடம் வழக்கம்போல் அய்யா கோவில்தான். அப்புறம்  தான் விட்டோபா பெருமாள் கோவிலா? என்று கேட்காதீர்கள் போனது சிசெட்12. மிகச்சரியாக 11 மணிக்கெல்லாம் போய்  ஆரன் அடித்து கதவை திறந்து முதல் ஆளாக உள்ளே போனேன்.
1980களில் நான் தா.சு.லு.ச மேல்நிலைப்பள்ளியில் இருந்தேன். ஆமாங்க பாஸ்  நான் படித்தேன் என்று பொய் சொல்ல விரும்பவில்லை. ஜவஹர் அலி, ஸ்டாலின், ஷெரிப், பன்னீர் என்று நண்பர் பட்டாளங்களுடன் சிலாகித்து பேசி ரசித்து வாழ்ந்த திரைப்படங்கள் ஜாக்கியின் திரைப்படங்கள் தான்.
ஜாக்கி எங்கள் தலைமுறையின் ஆதர்சம். ஜாக்கி, சாமோ ஹங் என்று சிலாகித்து பேசிக்கொண்டிருப்போம்…

ஸ்டீவென்சனும் குதிரைவண்டிக்காரர்களும்

Image
ஸ்டீவென்சன்  முதல் முதல் நீராவி என்ஜினை பயன்பாட்டிற்கு கொண்டுவந்த பொது அவரது தொழிற்சாலை தாக்கப்பட்டு முற்றாக சிதைந்தது. ஆனால் ஸ்டீவென்சன் மீண்டார் மனித குலத்தை வேகம் குறைந்த குதிரைவண்டிகளிடமிருந்து மீட்டு  இன்றளவும் நாம் விழிகள் விரியப் பார்க்கும் இரயில் வண்டியை தந்தார்.
இன்று  கிட்டத்தட்ட இதைபோன்ற ஒரு இக்கட்டில்தான் ராஜ் கமல் பில்ம்ஸ் இன்டர்நேஷனல்  நிறுவனத்திற்கு ஏற்பட்டிருக்கிறது. தொண்ணுற்று ஐந்து கோடி ரூபாய்களை கொட்டி எடுக்கப்பட்ட, தனது விஸ்வரூபம் திரைப்படத்தை டி டி ஹச் மூலம் வெளியிட முயற்சிகிறது. 
ஆனால் இது மரபுவழி சினிமா சந்தையை அசைப்பதால் பல தளங்களில் கடுமையாக எதிர்க்கப்பட்டும் விமர்சிக்கப்பட்டும் வருகிறது. விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் என பலர் தங்கள் எதிர்ப்பை மிரட்டும் தொனியில் பதிவிட்டு வருகின்றனர். 
கமலோ தனக்கு வியாபாரம் செய்ய எல்லா உரிமைகளும் உள்ளது என்று வாதிடுகிறார். 
முதலில் கமல் யார்? தமிழ் திரையுலகின் விடிவெள்ளி. திரைஉலகின் நேற்று இன்று மட்டுமில்லாது நாளையும் நன்கறிந்தவர். 
எப்படி தமிழ் திரைப்படங்களில் பாடல்கள் வந்தது என்பதை விலாவரியாக ஒருமுறை விளக்கியபோது …

நிசாதகன் என்ற ராட்சதன்

Image
பிரம்மசேனருக்கு கொஞ்சம் மூச்சிரைத்தது. முன்னே சென்றுகொண்டிருந்த அவரது சிஷ்யர்கள் அடர்ந்த காட்டினை கவனத்துடன் ஊடறுத்து ஒரு பாதையை உருவாக்கி கொண்டிருந்தனர். பின்னே வந்த சிஷ்யர்களோ காட்டினை கவனமாக உள்வாங்கி கொண்டு முன்னேறினர்.
வசந்த காலக் காடு மிக ரம்மியமாய் இருந்தது. படர்ந்திருந்த பசுமை கண்களை கொஞ்சியது. தாடகாரண்யம் அதன் எல்லா  வனப்புகளையும் பகட்டாக காட்சிப்படுத்தியிருந்தது. அத்துணையும் கண்களால் பருகிக்கொண்டே பயணத்தை தொடர்ந்தது அந்தக்குழு.
வனப்பு மட்டுமே வனத்தின் இருப்பல்லவே? எந்த நேரமும் எதாவது ஒரு கொடிய மிருகம் எதிர்ப்படும் ஆபத்தையும் நன்றாகவே உணர்ந்திருந்தது அக்குழு. ஏதேதொ பட்சிகள் எழுப்பிய இசையின் பின்னணியோடு தொடர்ந்தது பயணம்.
திடீரென ஒரு உறுமல். முன்னே சென்ற சிஷ்யர் குழு அப்படியே நின்று  பிரம்மசேனரை பார்த்தது. முன்னே செல்லலாமா வேண்டாமா என்ற ஒரு பயம் கலந்த தயக்கத்தோடு தங்கள் குருநாதரை பார்த்தனர் சிஷ்யர்கள். பிரம்மசேனரோ பகவான் வழிகாட்டுவான் தொடர்ந்து போங்கள் என்றார்.
பகவான் பெயரை கேட்டவுடன் சற்றே மனத்தேறுதல் அடைந்த சிஷ்யர்குழு  மீண்டும் முன்னேற ஆரம்பித்தது. சில அடிகள் எடுத்து வைத்தத…

இனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

Image
அனைவருக்கும் இனிய புத்தாண்டுவாழ்த்துக்கள். வரும் ஆண்டு தங்களுக்கு எல்லா வளங்களையும் வாரி வழங்கிட, வாழ்வின் அடுத்த தளம் ஒன்று தங்களுக்காக திறக்க வாழ்த்துக்கள்.