Posts

Showing posts from December, 2013

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Image
**********
வேண்டல்

புதிய ஆண்டு
புதிய நம்பிக்கைகள்
புதிய இலக்குகள்
புதிய கனவுகள்
வேண்டும்
புதிதாய் ஒரு பிறப்பும்
***********
மது

நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.


மது

நாயாகவேனும் பிறந்திருக்கலாமோ.?

Image
ஒரு சிறிய புல்லின் இதழில் கடவுளைக் காணும் பக்குவம் எனக்கு வேண்டும் என்கிறான் ஒரு ஆங்கிலக் கவிஞன்.  கவிதைக்காரர்கள் மனம் செயல்படும் விதம் எதார்த்த மனிதர்களின் மனங்களில் இருந்து முற்றிலும் வேறானது.
 நாம் ஒரு பார்வை வீச்சில் அலட்சியப்படுத்தும் ஒரு சிறு செயல் இவர்களின் கவிதையில் அமரத்துவம் பெற்றுவிடுகிறது.  அப்படி ஒரு கவிதையை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.
வழக்கம் போல் நந்தனின் கவிதைதான் இது..

இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

Image
நண்பர்களுக்கு
இனிய கிறிஸ்த்துமஸ் வாழ்த்துக்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..

அன்பன் மது

ப்ரோசன்

Image
டிஸ்னி குழுமத்தின் ஒரு அனிமேட்டட் கார்டூன் படம் த்ரீடியில் வெளிவந்து இதுவரை சுமார் 22.6 மில்லியன் டாலர்களை வசூல் செய்துள்ள படம்.   முழுதும் பாடல்களாக இனிய இசையாலும், காட்சிகளாலும் நிரம்பிய படம்.

ஒரு கண் பிரிண்ட் பண்ணுப்பா

Image
அறிவியல் முன்னேற்றம் தரும் அற்புதங்கள்தாம் எத்துனை.. இவ்வாண்டின் ஒரு பேரற்புதமாக மனிதக் கண்ணை இன்க்ஜெட் பிரிண்டரைக் கொண்டு அச்சிடும் ஆய்வொன்று வெற்றிப் பாதையில் பயணித்திருக்கிறது.
முதல் முதலாக கண்களின் செல்களை பிசோஎலக்ட்ரிக் இங்க்ஜெட் பிரிண்டர் மூலம் அச்சிடலாம் என்பதை நிறுவியிருக்கிறது இந்த ஆய்வு. இந்த ஆய்வு முழு வெற்றியடைந்தால் விழியிழந்தோர் என்பவர்களே உலகில் இருக்க வாய்ப்பில்லை.

ஒரு நல்லாசிரியர் எப்படி எல்லாம் இருப்பார்?

Image
எல்லோருக்கும் எங்கும் சில ரூல்ஸ் உண்டு. அவற்றில் சில அருமையாக வழிநடத்தும். சில நம்ம மிரட்டும். இங்கே சில நல்ல ஆசிரியருக்காண விதிகளை பகிர்ந்திருக்கிறார்கள்

திகைப்பு ...

Image
நந்தன் ஸ்ரீதரன்  ஈரமான ஒரு பதிவு, பகிர்வு... சட்டக்கல்லூரி மாணவர்களின் வன்முறையைப் பார்த்து திகைத்த பொதுஜனங்களில் நானும் ஒருவன்.. ஈவு இரக்கமற்ற அந்தக் கொடுமையைப் பார்த்து நிலைகுலைந்து போனேன்.. பத்திரிகைகளில் வந்த செய்திகளைத் தாண்டி உண்மைகள் என்ன என்பதை விசாரித்தறிந்தபோது நான் மேலும் விதிர்விதிர்த்தும் அருவெறுத்தும் போனேன்.. அந்த வன்முறைக்குப் பின்னால் ஊடோடி இருந்த சாதியத்தை கேள்விப்பட்டு நான் மனம் கூசிப் போனேன்..

சுய கட்டுப்பாடு ஒரு புதிய கண்டுபிடிப்பு...

Image
ஒரு டப்பா நிறைய கேக்கை நீட்டும் நண்பனை வாழ்த்தி ஒரு கேக்கை எடுத்து சாப்பிட்டு விட்டு பேச்சுவாக்கில் அடுத்த கேக்கிற்கு கை நீள்கிறதா? நல்லா தெரியும் இது எக்ஸ்ட்ரா காலரி என்று இருந்தாலும்..

எலிஷியம்

Image
மாட் டாமன் ஹீரோவாக,கொஞ்சம் காதல், கொஞ்சம் ஏழை பணக்காரர்கள் யுத்தம் கொஞ்சம் தியாகம் அனைத்தையும் ஒரு சீசாவில் போட்டு குலுக்கி கொஞ்சம் அறிவியல் புனைவை சேர்த்து ஸ்க்ரிப்ட் எழுதினால் அது எலிசியம்.

உதிர்ந்தது ஒரு நட்சத்திரம்

Image
திரை நட்சத்திரங்களை ரசிப்பது ஆதர்சமாக கொள்வது குறித்து எனக்கு எப்போதுமே உடன்பாடுகிடயாது. ஒரு நட்சத்திரத்தை தொடர்ந்து ரசித்து வருகிற பொழுது வெறும் திரை நட்சத்திரம் என்பதையும் தாண்டி ஒரு உணர்வு பூர்வமான பிணைப்பும் சற்றே வினோதமான நட்பும்   ஏற்படுவதாக எனக்கு உணர்த்தியது  ஒரு நட்சத்திர மரணம்.

கல்வி, விழா, ஒரு விருது...

Image
ஒரு குழந்தை நான்காம் வகுப்பில் இருக்கும் பொழுதே தனது   ரோல் மாடலை தேர்ந்தெடுத்து விடுகிறது என்கிறது   உளவியல். முதியோர் இல்லங்கள் இல்லாத ஒரு காலத்தில் தங்கள் தாத்தாக்கள், பாட்டிகள் மூலம் குழந்தைகளுக்கு கதைகள் மூலம் நல்ல நல்ல முன்மாதிரிகள் கிடைத்த வண்ணம் இருந்தனர்.

ஒரு குழந்தை, ஒரு மருத்துவர்

Image
பிறந்து ஒருவாரம் ஆன நண்பரின் குழந்தை ஒன்றிற்கு ஒரு சிறு வேனில் கட்டி வந்தது.  நண்பரின் மனைவி தனியாக குழந்தையை பார்த்துக்கொள்ள வேண்டிய சூழல்.