Posts

Showing posts from December, 2015

வெள்ளம் ஒரு நினைவோடை

Image
லேய்  எங்கேலே  போனே என்று கேட்டுக்கும் வலைப்பூ  நட்புக்களுக்காக சில  இற்றை பதிவுகள் ,,

இடரில்  எழுந்த  சுடர் 

வெள்ளம் ஒரு நினைவோடை

Image
நூற்றாண்டு காணாத மாமழை குறித்து எனது  பார்வைகளும்  எண்ணங்களும்  எப்படி துளித் துளியாக  உருவானது  என்பதை  முகநூல் கணக்கில் கொஞ்சம் பின்னே சென்று  பார்த்தபொழுது புரிந்தது... இற்றைகளை  படமாக  பகிர்ந்திருக்கிறேன் ...


ஹீரோஸ் 

தங்கமகன்

Image
தனுஷ் இன்னும்  கல்லூரி  பையன்தான். அவர் உடல்வாகா அல்லது கவனமா என்று  தெரியவில்லை. மனிதர் அசத்துகிறார். எனக்கு முதலில் வந்த  எண்ணமே  This sweet little rascal needs new faces to act with him! என்பதுதான்.

இடரில் எழுந்த நம்மிக்கை சுடர்கள் 5

Image
நூற்றாண்டில் மாமழையை சென்னை சந்தித்து தத்தளித்த பொழுது மனிதம் மட்டுமே மக்கள் மனதில் இருந்தது.

ஒரு புறம் மனிதர்கள் செத்தைகள் போல  அடித்துச்  செல்லப்பட்ட பொழுது மறுபுறம் மடையுடைத்து பிரவகித்தது மனித நேயம்.

நெகிழ்வூட்டும் எத்தனையோ சம்பவங்கள் நடந்தன.

தன்னைக் காத்த இஸ்லாமிய  இளைஞனின் பெயரை தனது குழந்தைக்கு சூடிய நிகழ்வை அவ்வளவு எளிதாக மறக்க முடியுமா என்ன?

ஒரு பெண் குழந்தைக்கு யூனுஸ் என்னும் பெயர் எத்துனை நெகிழ்வைத் தருகிறது.

இன்னொருபுறம் மழை வெள்ளத்தில் உயிர் பிழைக்க படகில் மிகுந்த சிரமத்திற்கிடையே ஏறிய ராஜ் கிரண். திரையில் ஒரே உதையில் நூறு பேரைப் பறக்கவிடும் அதிரடி நட்சத்திரம் அவர். வெள்ளம்  யார் பெரிய  வில்லன் என்று காட்டிவிட்டது.

நினைவுகள் தொடரும்

இடரில் சுடர்ந்த நம்பிக்கை சுடர்கள் 4

Image
பலநாட்களாக  அடைபட்டிருந்த கோவில் குளத்தின் வரத்து வாரியை தகர்த்து குளத்தை நிரப்பிய  குழு.

நல்ல  விசயங்களும்  நடந்தன.

இடரில் எழுந்த நம்பிக்கை சுடர்கள் 3

Image
சென்னை  மழை  நினைவுகள் 

இடரில் எழுந்த சுடர் ...

உயர்திரு. சைலேந்திர  பாபு  ஐ.பி.எஸ்.  காவல்துறையின்  தலைமைப் பொறுப்பில்  இருப்பவர்கள் இப்படி  களம்  இறங்குவது உண்மையில்  பதிவு செய்யப்படவேண்டிய விசயம்.

மகத்தான  மழை  நாயக்கர்களில் ஒருவரானார்  சைலேந்திரபாபு.
பின்பற்றவேண்டிய  பாதை இது. ஐ.பி.எஸ் ஆர்வலர்கள் கவனிக்க.

இடரில் எழுந்த நம்பிக்கை சுடர்கள் 2

Image
சென்னை மழை
முதல் தவணை மழையின் சில  படங்கள். 
இத்துனை  ஆழத்தண்ணீரில்  நிற்பதற்கு  ஒரு  உரம் பாய்ந்த  நெஞ்சும், கடமையை  நேசிக்கும்  பண்பும் வேண்டும். 
மலர்தருவின் வணக்கங்கள்  இவருக்கு

புதுகை போராட்டம் - ஆபாசப் பாடலுக்கு எதிராக அனைவரும் வருக

Image

இடரில் எழுந்த நம்பிக்கை சுடர்கள் 1

Image
மாமழை நினைவுகள் ...

ஒருபுறம் வெள்ளம்  இரண்டு  தவணைகளில்  சென்னையை பிணக்காடாக  மாற்றிக்கொண்டிருந்த அதே வேளையில் முகநூலில் எழுந்த நம்பிக்கை  ஒளிகள் வெள்ளதைவிட  அதிவேகமாக  செயல்பட்டார்கள்..

உதவவேண்டிய அனைவரும் தற்காலிகமாக  காணமல் போன பொழுது, களம் இறங்கியது  இளம் இதயங்கள் ...

ஒருபுறம் வெள்ளம் சென்னையை தின்று தீர்த்துக் கொண்டிருக்க மறுபுறம் இப்படை களப்பணியை கடும் வெள்ளத்தின் இடையே ஆரம்பிதுவிட்டது...

இடரில் உங்களுடன் இருப்போம் என பேரொளி வெள்ளத்தில் மேடையில் முழங்கிய அனைவரும் வெறும் அம்மாவசை இருளாக மறைந்துபோக...

எழுந்தன  நம்பிக்கை சுடர்கள்... இணயதளத்தில் இருந்தும், கட்செவியில் இருந்தும் முகநூலில்  இருந்தும்

தமிழகம் முன்னெப்போதும் இல்லாத மற்றோர் பேரெழுச்சியை  கண்டது...

மீட்பர்கள்  வந்தார்கள்  சுழல் விளக்குகள் பொருத்தப்பட்ட  கார்களில் அல்ல  நமது எதிர்வீட்டில்  இருந்தும் பக்கத்துவீட்டில்  இருந்தும்..

மீட்பர்கள் வந்தார்கள் இறக்குமதி செய்யப்பட்ட அதிநவீன சொகுசுக் கார்களில் அல்ல

அண்டை வீடுகளில் அதுவரை முகம் தெரியாது இருந்தவர்கள் ...

அப்படி வந்த  ஒவ்வொருவரையும் நான் பதிவு செய்வது அவசியம் என்று நினை…