Posts

Showing posts from April, 2016

என்ன நடந்தது ஏன் வைகறை இருண்டது..

Image
வைகறை


ஜோசப் பென்சிகர் என்றால்  யாருக்கும்  தெரியாது... அது  அவரது  இயற்பெயர். வைகறை  அவரது  புனைப்பெயர், கைவிஞர் வைகறை  புதுகைக்காரரா?
சொந்த ஊர்  அடைக்கலபுரம்  என்பது எவ்வளவு  உண்மையோ அவ்வளவு உண்மை அவர் புதுகைக்காரர் என்பதும்.

ஒரு கவிஞனின் மரணம்

Image
கவிஞர்   வைகறை நான்  சந்தித்த  மனிதர்களில் மிக மென்மையானவர். உதட்டின் வெளிவிளிம்பில்  இருந்து  சிரிக்கும் உலகில் மனசின் ஆழத்தில் இருந்து சிரிக்கத்தெரிந்தவர்.

தெறி அட்லீயின் மசாலா இட்லி.

Image
சார் டிக்கெட் போட்டாச்சு கட்டாயம் வரணும் என்கிற ஸ்ரீயின் அழைப்பு. ஓகே, நமக்கு சித்திரைத் திருவிழா ஆர்.கே.பியில் இருந்தா அதை எதுக்கு மாத்திட்டு.  மாஸ் ஹீரோக்கள் படங்கள் வெளியிடப்படும் ஒவ்வொரு நாளுமே திருவிழாதான் தமிழகத்தில். தியேட்டர் திமிலோகப்பட்டது. வழக்கம்போல திரைக்கு முன்னால் குத்தாட்டம், வெறிக் கூச்சல்.

எளிது எளிது ஆங்கிலம் ஞானசேகரன் அவர்களின் முகநூல் பதிவு 2

முன்னோடி  ஆசிரியர் திரு ஞானசேகரன்  அவர்களின்  முகநூல் பகிர்வு  ஒன்று

August என்பதற்கும் august என்பதற்கும் வித்தியாசம் உண்டா?
உண்டு. This is called Capitonym. (euponym, antonym, synonym, homonym எல்லாம் கேள்விப்பட்டிருப்பீர்கள்.)

எளிது எளிது ஆங்கிலம் ஞானசேகரன் அவர்களின் முகநூல் பதிவு 1

முன்னோடி  ஆசிரியர் திரு ஞானசேகரன்  அவர்களின்  முகநூல் பகிர்வு  ஒன்று

ஒரு முறை நேருஜிக்கே prepositions (உரிச்சொல் அல்லது வேற்றுமை உருபுக்கள் என்று சொல்லிவந்தேன். நண்பர் கவிஞர் மகுடேசுவரன் அவர்கள் உரிச்சொல் என்பதே பொருத்தமாக இருக்கிறது என்றார்) "about" "of" என்பதில் சந்தேகம் வந்து அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர், ஆங்கிலப் புலமை மிக்கவர், கிருஷ்ணமேனன் அவர்களிடம் எது சரியாக இருக்கும் என்றாராம். அதற்கு அவரும் about சரியாக இருக்கும்....இருந்தாலும் "of" கூட போடலாம் என்றாராம்.

மனம்

Image
ஆக்ஸ்போர்ட் உணவகக் கல்லூரியின் தாளாளார் திரு ஆக்ஸ்போர்ட் சுரேஷ் அவர்களின் முகநூல் பகிர்வு ஒன்றை இங்கே பகிர்கிறேன் ...


ஒரு ஊரில் ஒரு செல்வந்தன் இருந்தான். அவன் வியாபார நிமித்தமாக வெளியூர் சென்று திரும்பிய போது அவனது அழகான பெரிய பண்ணை வீடு தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது.

கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க (எப்படிக் கேட்க வேண்டும் ஆங்கிலத்தை)

Image
ஆங்கிலம் இங்கே மட்டுமல்ல அகிலம் எங்குமே பரவி நிற்கும் மொழி.வேர்கள் பிராட்டோ இந்தியன் மொழிகளில் துவங்கி நார்த் ஜெர்மானிக் மொழிகள் வழி இன்று உலக மொழியாக வளர்ந்து நிற்கும் ஆங்கிலம் தமிழர்களை மட்டுமல்ல கொரியர்களையும் மயக்குகிறது.

அழுத்தங்கள் ஆயிரம்

தேர்வுக் காலம் மாணவர்களை அழுத்துவதைவிட பெற்றோரை அழுத்துவது அதிகம் என்பதே நடைமுறை உண்மை. தனியார் பள்ளிகளில் ஒழுக்கம் பேணப்படும் பள்ளிகளில் ஆசிரியருக்கு அழுத்தம் குறைவு. அவர்கள் சந்திக்கும் அழுத்தம் பள்ளி நிர்வாகத்தில் இருந்து மட்டுமே இருக்கும். மாணவர்கள் பள்ளி விதிகளுக்குக் கட்டுப்பட்டு பாடத்தை ஒழுங்காக படித்து வந்துவிடுவார்கள். 

இற்றைகள் - விளம்பரமா இது

Image
சகாயம் ஐ.ஏ.எஸ் ஒரு விளம்பரப்பிரியர் என்கிற குரல்கள் புதிதல்ல...
ஒரு தணிக்கையாளரிடம் பேசிகொண்டிருந்த பொழுது அவர் என் கிளாஸ்மேட் தேவையில்லாம விளம்பரம் தேடுறார் என்றார். படிக்கும் பொழுது ஒரு தமிழாசிரியர் எழுதிக்கொடுத்த கட்டுரைகளை படித்து பரிசுகளை வாங்கினார் அவர் என்றும் சொன்னார்
ஆப்டர் ஆல் ஒரு கன்பர்ட் ஆபீசர் எப்படி இருக்கணும்னு தெரியலை என்றார். ஒ அப்படியா என்றதுடன் முடிந்தது எங்கள் முதலும் கடைசியுமான அந்த சந்திப்பு.. இந்தியாவில் இதுவரை சொத்து மதிப்பை வெளிப்பட்டையாக அறிவித்த ஒரே ஐ.ஏ.எஸ் இவர்தான் அறிவித்த மறுநாள் ஒரு வடஇந்திய வருவாய்த்துறை அதிகாரி தனக்கு கோடிக்கணக்கில் சொத்து இருபதாகவும் சகாயம் வெளியிட்ட தகவல்களை நம்பமுடியவில்லை எனவும் தெரிவித்தார். தற்போது ஏதோ ஒரு போதைகுரு உபன்யாசம் செய்திருக்காராம் ...
மெண்டலி அபக்ட் ஆயுட்டார் சகாயம் என்று ... பொருப்பான பத்திரிக்கைகள் சொன்னவரின் பணி அனுபவச் சாதனைகளை பட்டியலிடாமல் அவர் கருத்தைமட்டும் முன்வைக்கின்றன. அவர்களுக்கும் விற்பனை முக்கியம்... நம்மை வேதனைப்படுத்துவது குறித்தெல்லாம் பத்திரிக்கைகளுக்கு கவலைகிடையாது...
சுட சுட செய்தி வேண்டும் அவ்வளவ…

முகநூல் இற்றைகள் சில

August 24 at 6:03am · 
சாதிக்கு இரண்டாய்
வீடுகள் ஒதுக்கப்பட்டன
சமத்துவபுரம்
கவிஞர் பவல்ராஜ்
வீதி நினைவுகள் ..

August 24 at 6:01am · 
வீதி நிகழ்வு இன்று மனதில் நிற்கும் வரிகள் ...
பூபாலனின் தனிமை அரக்கனிடமிருந்து குழந்தைகளைக் காக்க வாசிப்பை அறிமுகம் செய்க ... அம்சப் பிரியாவின் கனவு நூலகங்கள்
துரத்தும் சொற்கள் குறித்த உரையுடன் 
கவிதைக்கு ஒரு நூலகம்
குழந்தைகளுக்கு ஒரு நூலகம் என முன்மொழிவுகளைச் செய்திருக்கிறார். நனவாக வேண்டும் நம் அனைவரின் ஒத்துழைப்போடு
August 23 at 4:12pm · 
வீதி இலக்கிய களத்தின் பதினெட்டாம் அமர்வு இனிதே முடிந்தது, அமர்வின் சிறப்பு அம்சப்

இற்றைகள்

1
August 28 at 7:53am · 
விரையும் பேருந்தின்
ஜன்னலில் விரிந்த உலகை 
தவிர்த்து
அலைபேசியின் 
மெய்நிகர் உலகில்
விருப்பக் குறியிட்டு
பயணிக்கும்
தலைமுறை
இழந்தது என்ன?
2 தலைமையை விமர்சிப்பது ஜனநாயக உரிமை அது மறுக்கப்படும் இடங்களில் சர்வாதிகாரத்தின் கோர நிழல் விரிகிறது. 
அதே சமயம் 
விமர்சனங்கள் மாண்போடு இருக்கவேண்டும், புரியாதவர்கள் இந்த வார ஆனந்த விகடன் போட்டூன் பார்க்கவும் ... 
இது பொது வாழ்வில் இருக்கிற ஆசிரிய சங்கங்களில் வீச்சுடன் செயல்படும் அனைவருக்குமே பொருந்தும்
3 August 28 at 7:28am · 
நாட்கள் பூத்துக் கொண்டிருக்கின்றன
மலர்களாகவே
வண்ண இதழ்களை
ரசிக்காத
அவன்
முட்கள் குறித்தே
வருந்துகிறான் இனிய காலை வணக்கம்
வாருங்கள் இதழ்களை ரசிப்போம் 4 August 26 at 7:01am · 

கோடை நகர்ந்த கதை கவிதைத் தொகுப்பு கனிமொழி ஜி

Image
நான் பெரிதும் மதிக்கும் தோழர் அவர். பத்து எம்.ஏ பட்டங்களை முடித்தவர். இயல்பாகவே வாசிப்பின்  சுவை அறிந்தவர். ஒருநாள் பேசிக் கொண்டிருக்கும் பொழுது சொன்னார் என்னங்க அப்துல் ரஹ்மான் கவிதை எழுதுறார். கவிதைனா புரிய வேண்டாமா என்று கோபப்பெருமூச்சு ஒன்றை வெளியிட்டார்.

நிகழ்ந்து ஒரு தசாப்தம் ஆனா பின்னும் இன்னும் நினைவில் நிற்கும் உரையாடல் அது. பத்து முதுகலைப் பட்டங்களோடு இருக்கும், தீராத வாசிப்புத் தாகத்துடன் இருக்கும் ஒருவர் நான் கொண்டாடும் கவிக்கோவின் கவிதைகள் குறித்து அப்படிச் சொன்னது என்னை வியப்பில் ஆழ்த்தியதே காரணம்.