Posts

Showing posts from April, 2019

அவன்ஜெர்ஸ் யாரு புதிய அயர்ன்மேன்?

Image
சில சமயம் எழுத்தாளர்களை சமூகம் அவர்கள் இருக்கும் காலத்திலேயே கொண்டாடும். பலருக்கு இந்த ஏற்பும், கொண்டாட்டமும் கிடைப்பதில்லை.

வீதி அறுபத்தி இரண்டு கல்வித்திருவிழா

Image
வீதி அறுபத்தி இரண்டின் பொறுப்பாளர்கள் என புதுகை செல்வாவும் சகோதரி ரோஸ்லின் அவர்களும் அறிவிக்கப்பட்டிருந்தனர்.

என்ட்கேமில் போஸ்ட் கிரெடிட் சீன் எதுவும் இல்லை ஆனால்..

Image
மார்வல் படங்கள் முடிந்த பின்னர், ரன்னிங் டைட்டில் பாதி
ஓடிக்கொண்டிருக்கும் பொழுது திடுமென ஒரு காட்சி வரும். அந்த காட்சி அடுத்து வரும் திரைப்படங்களை இணைக்கும்.

ஏழை மாணவர்களுக்கு உதவ விருப்பமா ?

Image
சமூக வலைத்தளம் நல்லதற்கா கெட்டதற்கா என்கிற கேள்விக்கு விடை, அது நம் உலகைபோன்ற ஒரு மெய்நிகர் உலகம் அவ்வளவே.

குற்றவாளிகளும், காவலர்களும், சாமான்ய மனிதர்களும் ஒரே நகரில் வசிப்பது போலவே சமூக வலைத்தளத்திலும் இயல்பு இருக்கிறது. 
ஆனால், நாம் நண்பர்களின் இன்பாக்ஸ் சென்று இம்சிக்காதவரை, நமக்கு பிரச்னை இல்லை. இந்த விதியை மீறுகிற பொழுது பிரச்சனைதான். 
இந்த இயல்பான பிரச்சனைகளை கடந்து சமூக வலைதளங்களால் நன்மை இருக்கிறதா என்றால் எண்ணற்ற நன்மைகள் இருக்கின்றன. 
அவற்றில் ஒன்று நல்லோர் நட்பு. 
பொ.வேல்சாமி அய்யா, ஷாஜகான், கிரேஸ், காரிகன், இனியா, டிடி என பல நண்பர்களை உறவுகளை சமூக வலைத்தளம்  எனக்கு வழங்கியிருகிறது. 
குறிப்பாக அய்யா ஷாஜகான் தொடர்ந்து சமூக நலப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் பல லெட்சம் ரூபாய்களை அவர் கல்வி நிதி கோரும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையாக வழங்கிவருகிறார். 
இது எப்படி சாத்தியம்?
பல தசாப்தங்களாக அவர் சமூக நலச் செயல்பாட்டில் இருந்து வருவதால் அவருக்கு உதவ நல்ல இதயங்கள் எப்போதும் தயாராக இருக்கின்றனர்.
அவரது வழிமுறை எளிமையானது. 
முதலில் கல்வி நிதி கோரும் குரல்களை அவர் தன…

அவெஞ்சர்ஸ் என்ட் கேம்

Image
அதீத எதிர்பார்ப்புக்களை உருவாக்கிய ஹாலிவுட் படம். இரண்டு பாகங்களாக வெளிவந்த திரைப்படம். முதல் பாகத்தில் சரிபாதி சூப்பர் ஹீரோக்கள் மென் துகள்களாக காற்றில் கரைந்துவிட, அவர்களோடு கூடவே  இந்த பால்வெளி மண்டலத்தின் பாதி ஜனத்தொகை காற்றில் கரைந்துவிடுகிறது.

எமோஷனல் பாக்கேஜ் என்றுதான் ரூஸோ சகோதரர்கள் சொன்னார்கள். அது உணமைதான்.

இந்திய சினிமாவின் சில வித்தைகளை ஹாலிவுட் செய்திருப்பதும் மகிழ்வு.

கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றான்? என்று முடிந்த முதல் பாகம் போலவே அதே யுக்தியில் பாதி சூப்பர் ஹீரோக்களை துகள்களாக்கி பறக்கவிட்டனர் இயக்குனர்கள் முதல் பாகத்தில்.

பெரும் இழப்பின் பின்னர் துவங்குகிறது படம். கிட்டத்தட்ட டிஸ்டோப்பியன் மூவி போலவே இருக்கிறது முதல்பாதி.

ரகளையான திருப்பங்களோடு அதிரடிக்கிறது படம்.

தானோஸ் கருத்தின்படி இந்த பேரழிவுக்கு உலகம் அவனுக்கு நன்றிகடன்பட்டிருக்க வேண்டும்.

உணவுத்தேவைகள், பொருளாதாரத் தேவைகள், இயற்கை வளத்தேவைகளுக்கும் பயன்பாட்டிற்கும் பாதி மக்கள்தொகையை போட்டுத்தள்ளுவது அதுவும் ஒரே சொடக்கில் என்பதுதான் அவனது தீர்வு.

ஒரு நிமிடம் இவன் வில்லனா ஹீரோவா என்று யோசிக்கிறீர்கள்தானே?

அவன்ஜர…

நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல் நூல்

Image
நாற்பத்தி எட்டுப் பக்கங்களில் ரபேல் ஊழல் குறித்து விரிவான ஒரு நூல் திரு.விஜயன் அவர்களால் எழுதப்பட்டிருக்கிறது...