Posts

Showing posts from June, 2015

இற்றைகள் fb status collection

Image
1 ஒரு கலை உன்னதமாய் இருக்கிற பொழுது அதை ரசிப்பவர்களையும் அது உன்னத கலைஞர்களாக்கி விடுகிறது!  சந்திரமோகன் வெற்றிவேலின் காற்றில் கலந்த இசையில் இளையராஜாவின் பாடல்களை அவர் வர்ணிப்பது அற்புதமாக இருக்கிறது! இசை அவர் எழுத்தில் எழுகிறது!  ஹாட்ஸ் ஆப் சந்திரமோகன் வெற்றிவேல்.

இவரை அறிவோம்!- நடாஷா ரைட் Natasha Wright Rafeeq Friend

Image
இவர்களில் உங்களுக்கு யாரை அடையாளம் தெரிகிறது? என்ற கேள்வியுடன், இவரின் படத்தையும் ஒரு தென்னிந்தியத் திரைப்பட நடிகையின் படத்தையும் வைத்து ஒரு நிலைத்தகவல் பதிந்திருந்தேன். வழக்கம் போலவே மறைக்கப்பட்ட நிலையிலும் திரைப்பட நடிகையின் படமே அதிகமானோரால் அடையாளம் காணப்பட்டது. அதிகமானோர் இன்பாக்ஸ் வந்து நடிகையின் பெயரை எழுதி, சரியா என்றும் கேட்டார்கள். ஒருவர் மட்டும் சரியாக இவரின் இவரின் பெயரை எழுதியிருந்தார்.(கூகுள் உதவியதா? :) ) வேறு ஏதும் குறிப்பு எழுதுவாரா என்றிருந்தேன் ஏமாற்றமே!

மூன்று திரைப்படங்களும் இரண்டு விழாக்களும் - நிகழ்வுகளின் ஞாயிறு

Image
கடந்த ஞாயிறு ஒரு கலவையான அனுபவம் எனக்கு! 
விழா அழைப்புகள் இரண்டு வெகு முக்கியமானவை. ஒன்று நண்பர் மணிகண்டனின் புதுமனை புகுவிழா. மற்றொன்று எனது மதிப்பிற்குரிய மாணவர் ஒருவரின் திருமணம். இரண்டு விழாக்களுக்கும் தவறாது சென்றுவிட திட்டமிட்டு  வைத்திருந்தேன். 
திடீரென நிலவன் அண்ணாத்தே அழைத்து வரும் ஞாயிறு  வீதி அமைப்பின் கூட்டம் நடைபெறும் என்று அழைத்தார். எப்போ நடக்கும் என்று காத்திருந்த தினங்கள் எல்லாம் சென்றபின்னர் ஒரு மூகூர்த்த நாளில் அழைப்பு!

காக்கா முட்டை

Image
திரை மணத்தில் எந்த இடத்தில் என்னுடைய ஜுராசிக் பார்க் விமர்சனம் இருக்கிறது என்று பார்பதற்காக சென்றபோது பக்கம் முழுதும் மீண்டும் மீண்டும் ஒரே பதிவு நிரம்பியிருந்தது. அத்துணை   திரை விமர்சனப் பதிவர்கள் அனைவரும் ஆஜராகி எழுதியிருந்தனர்.
அனைவரும் ஒரு படத்தை மட்டுமே எழுதியிருந்தது என்னை வியப்பில் ஆழ்த்தியது. 
ஒரே படம் ஒரு நூறு பதிவுகள். காக்கா முட்டை. 

ஜூராசிக் வேர்ல்ட் திரை விமர்சனம்

Image
பெரும் எதிர்பார்ப்புகளைக் கிளப்பிய படம். ஆனால் ட்ரைலர் என்னை ஈர்க்கவில்லை. அதே கிளிஷே காட்சிகள், அலறல்கள், அதே தப்பிப் பிழைத்தல் ட்ரைலர் பார்த்தவுடனேயே கதை புரிந்துவிட்டதால் படம் குறித்த அதீத எதிர்பார்ப்புகள் என்னிடம் இல்லை.

வருக வெல்க ... முகநூல் நிலைத்தகவல்கள்

Image
1 பத்து வருடங்கள் இருக்கலாம் ஓர் பேருந்துப் பயணத்தில் ஜன்னலூடாக தெரிந்த ஒரு கல்லூரியைக் காட்டி இது இன்று செயல்படுவதற்கு சார்தான் காரணம் என்றார் டாக்டர்.வின்சென்ட் டி பால், (தமிழகத்தில் ஆர்.எம்.எஸ்.ஏ திட்டத்தை அறிமுகப்படுத்திய குழுவின் ஆய்வு உறுப்பினர்) ... நான் அந்தக் கல்லூரியைப் பார்த்தேன்  அதிர்ச்சி, வியப்பு என கலவையான உணர்வுக்குவியல்.

வணக்கமும் நன்றியும் கசியும் கண்களுடன் ஒரு வழியனுப்பல்

Image
புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகல்வித் துறையில் ஒரு புத்துணர்ச்சியையும் மறுமலர்ச்சியையும் ஏற்படுத்தியவர் முதன்மை கல்வி அலுவலர் முனைவர் நா . அருள்முருகன் அவர்கள் .