Posts

Showing posts from February, 2016

எஸ்.என்.டி.பி ஒரு அறிமுகம் சுரேந்தரின் கட்டுரை

Image
சுரேன் சுரேந்தர் முகநூல் இணைப்பு ..


சாதிசங்கம் குறித்த  ஒரு  பதிவு  என்றாலும்  சங்கங்கள்  எப்படி  இருந்திருந்தால்  நன்றாக  இருந்திருக்கும்  என எண்ண வைத்த பதிவு.

நந்தனின்  பகிர்வை மலர்தருவில் வெளியிடுவதில் மகிழ்வு.

சுரேந்தருக்கு  நன்றிகள்


கோட்டயம் மாவட்டம் பாலா தாலுகாவில் பைகா என்றொரு சிற்றூர் உள்ளது. பாலா தாலுகாவைப் பற்றி மேலதிகம் தகவல் ஒன்றும் உள்ளது. நமது ஆதர்ஸ நாயகி மியா ஜார்ஜ் மற்றும் பாடகி ரிமி டாமி இருவரின் சொந்த ஊர் அது. இப்படிப் பட்ட வளப்பமான ஊருக்கு அருகில் இருக்கிறது பைகா.

பைகாவில் இருந்து விளக்குமாடம் செல்லும் வழியில் ஒதுங்கினார்போல் ஒரு சாமுண்டீஸ்வரி கோவில் உள்ளது. சிறிய கோவில் ஆனால் பழமையானது. இதில் பூஜை புனஸ்காரங்கள் செய்ய நாயர்களுக்கு மட்டுமே உரிமை இருந்து வந்துள்ளது. பூஜை மட்டுமல்ல வழிபாடு செய்யவும் அவர்களுக்கும் , அவர்களுக்கும் மேலே உள்ள சாதி மக்களுக்கும் தான் உரிமை. புலையர்கள் , ஈழவர்கள் எல்லாம் ரோட்டின் ஓரமிருந்து கன்னத்தில் போட்டுக் கொண்டு , சில்லரையை உண்டியலில் போடலாம் அவ்வளவே.


பத்து இருபது வருடங்கள் முன்பு வரை இதுதான் வழக்கம். ஈழவர்கள் பார்த்தார்கள். விளக்குமாடத்…

மிருதன் -சக்தி சவுந்தர் ராஜனின் கையொப்பம்

Image
சமீபமாய் படங்களை பார்பதற்கு விடுப்பு விட்டிருக்கிறேன். கணிப்பொறி ததும்பும் அளவிற்கு படங்களும், சென்னையில் கடந்த ஆண்டு ஒருமணி நேரம் அலைந்து திரிந்து வாங்கிய குறுந்தகடுகளும் காத்திருப்பில் இருக்கின்றன.  நூல்களோ தவமிருக்கின்றன. 

அரசுப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

Image
பிப் 19, அரசு உயர்நிலைப் பள்ளி, எல்லைப்பட்டி, புதுக்கோட்டை.

சர் சி வி ராமன்  கல்லூரியில்  முதல்  விருப்பமாக  வராலாற்றை தேர்ந்தெடுத்தவர். தேசத்தை  அறிவியல் வரலாற்றின்  பக்கங்களில்  பதிக்கப் போகும்  ஒருவர் என்பதால் அவருக்கு  வரலாற்றுப் பாடம் கிடைக்கவில்லை போல!

அப்படி  ஒரு நிகழ்தகவில் அவருக்குக்  கிடைத்த  இயற்பியல் இந்தியாவிற்கு ஒரு  நோபலைத்தர ராமன் விளைவு குறித்து  அவர் அறிவித்த அந்த பிப் இருபத்தி எட்டினை நினவு கூறும் வண்ணம் ஆண்டுதோறும் அந்த தினம் இந்திய தேசிய அறிவியல் தினமாக கொண்டாப்படுகிறது.


பத்தாம் வகுப்பின் அறிவியல் செய்முறைத் தேர்வுகள் இருந்ததால் இராமன் விளைவை நாங்கள்  கொஞ்சம் முன்னாலேயே  கொண்டாட வேண்டியிருந்தது.


புதுகை ஜே.சி.ஐ சென்ட்ரலின் தலைவர் ஜே.சி.அன்பரசன் அவர்கள் பள்ளியை அணுகி அறிவியல் தினத்தை கொண்டாடும் விதத்தில் ஒரு கண்காட்சியை ஏற்பாடு செய்ய முடியுமா என்றார்.

பள்ளியில் அந்தத் தேதியில் செய்ய முடியாத நிலை. பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் துவங்கி விட்டன! அறிவியல் செய்முறைத் தேர்வுக்காக மாணவர்களைத் தயார் செய்து கொண்டிருந்தனர் ஆசிரியைகள்.

கல்வி குறித்து சரியான புரிதல் இன்னமு…

கிராவிட்டேசனல் வேவ்ஸ் ஆக்கம் ராஜ் சிவா

Image
ராஜ் சிவா (முகநூல் இணைப்பு)

பலர் கேட்டுக்கொண்டதன்படி, 'ஈர்ப்பலைகள்' என்று சொல்லப்படும் 'கிராவிட்டேசனல் வேவ்ஸ்' பற்றிய கட்டுரையை உங்களுக்குத் தருகிறேன். கட்டுரை விளக்கமாக இருக்க வேண்டுமென்பதற்காக, சற்றே நீளமாகிவிட்டது. மன்னிக்க.
-ராஜ்சிவா-

காதல் இசைப்பாடல் ஒன்று

Image
மாஸ்க் ஆப் ஸாரோ என்கிற  திரைப்படம்  வந்து திரையரங்குளை தெறிக்க விட்ட 1998. நாயகன் அன்டோனியோ பண்டாரஸ் எனது விருப்பதிற்குரிய  கதாநாயகன் என்பதாலும் படத்தில் அவருக்கு குருவாக வரும் ஆண்டனி ஹாப்கின்சின் அதகள நடிப்பும் எனக்கு பிடித்தமான ஒன்று என்பதாலும் பார்த்த படம். மச்சான் மதுரைத் தமிழன் சும்மா உண்மையச் சொல்லுப்பா கேதரின் ஜெட்டா ஜோன்ஸ்க்காகத்தானே படம் பார்த்தாய் என்றால் ஆமாப்பா ஆமா. அதுவும் உண்மைதான்.

படத்தைவிட எப்போதும் என் நினைவில் இருப்பது படத்தின் ஒ.எஸ்.டிதான்!
அந்த காலகட்டத்தில் மார்க் ஆண்டனி இன்னொரு பாடலில் கலக்கியிருப்பார். அது இன்று நினைவில் வரவில்லை. டினாவின் குரல் எனது நீண்ட நாள்  நட்பு.

இந்தக் காதலர் தினம் மறக்கக் கூடியதா என்ன ?

Image
மேதகு  கலாம் அவர்களின் நினைவைப் போற்றும் விதமாக துவக்கப்பட்ட மரக்கன்றுகள் நடும் இயக்கமான விதைக்KALAM அமைப்பு இருபத்தி ஐந்தாவது நிகழ்வை எட்டியது இன்று. 


பாடலுக்குள்ளே ஒரு கால எந்திரம்

Image
9/2/16
காலைஐந்தரை
ருக்ஜா ஹே மேரி தில் திவானி என இசைத்தது எனது கூல்பாட்...
உண்மையில் அதற்கு முன்னரே விழிப்பு வந்திருந்தாலும் அலார்ம் அடித்தபின்னர்தான் எழவேண்டும் என்கிற குலதெய்வ வழக்கப்படி  அலார்ம்  ஒலித்த பின்னரே எழுந்தேன்..

இறுதிச் சுற்று வேடியப்பன் கணேசனின் விமர்சனம்

Image
எனது முகநூல் நண்பர் வேடியப்பன் கணேசன் (இணைப்பு)  அவர்களின் திரைப்பட விமர்சனம்- அவரது அனுமதியோடு  பகிரப் படுகிறது ..