Posts

Showing posts from July, 2017

நேருவும் பெண்களும்

Image
ஸ்ரீதர் சுப்ரமணியன், முகநூல்  அறிமுகமான நண்பர். பொருள் பொதிந்த கட்டுரைகளை வெளியிடுவார். சமீபத்தில் இவரது நூலான "ஒரு நாத்திகனின் பிரார்த்தனை" வெளிவந்தது. நேரு குறித்த இவரது கட்டுரை ஒன்று நேர்த்தியாக இருந்ததால் பகிர்ந்தேன். பல விஷயங்கள் புதியவையாக இருக்கலாம் உங்களுக்கு.
_____

நேரு பற்றிய பேச்சு வந்ததுமே பெண்கள் விஷயத்தில் அவர் நடந்து கொண்ட விதம் பற்றி ஆரம்பித்து விடுகிறார்கள். அவர் ஏறக்குறைய ஒரு ‘ஸ்த்ரீ லோலன்’ போல சித்தரிக்கப்படுகிறார்.

நேரு மிகவும் ரசனைக்கார ஆசாமி. பெண்கள் விஷயத்திலும் அவர் ரசனையானவர்தான். ஆனால் அதற்காக அவர் எந்தப் பெண்ணையும் வல்லுறவு செய்யவில்லை. பாராளுமன்றத்தில் உட்கார்ந்து போர்னோகிராஃபி பார்க்கவில்லை. கட்டிய மனைவியை விட்டு ஓடி வந்து விடவில்லை. எனக்கு மனைவியே இல்லை என்று அஃபிடவிட் கொடுக்கவில்லை.

சொல்லப் போனால் அவருக்கு விருப்பமே இல்லாமல் நடந்த கட்டாயக் கல்யாணத்தைக் கூட அவர் உதறி விடவில்லை. காச நோயால் அவதிப்பட்ட கமலா-வை குணப்படுத்த எல்லாவற்றையும் விட்டு விட்டு ஸ்விட்சர்லாந்து போய் மாதக்கணக்கில் அவருக்கு மருத்துவம் பார்க்க உடனிருந்து கவனித்துக் கொண்டவர். அவர…

ச்சீஸ்ஸ்ஸ் சொல்லுங்கள்

Image
சீஸ் காமிராவிற்கு முன்னர் சொல்லப்படும்பொழுது முகங்கள் புன்னகைக்கிற பாவத்தில் வரும் என்பதால் ஷட்டர் பட்டனை அழுத்தும் முன் பொதுவாக எல்லோரும் சொல்லும் வார்த்தை.

எப்போதும் நேர்மறை

Image
நமக்கான ஆகச் சிறந்த உதவிகள் நமக்குள் இருந்தே வருகின்றன.

கரண்டைக் கையில் பிடிப்பது எப்படி ?

Image
சிடுமூஞ்சி குமார் சிரிச்ச மூஞ்சி குமராக மாற முடியுமா?

ரூல்ஸ் ராமானுஜம் ரெமோவாக முடியுமா?

நெல்லு சோறு சாப்பிடும் தென்னிந்திய நடிகர்கள் சிக்ஸ் பாக்ஸ் வைக்க முடியாது என்ற எண்ணத்தை அடித்துத் தகர்க்க சூர்யா செய்தது என்ன என்று பார்த்தாலே நமக்கு பதில் கிடைத்துவிடும்.

ஆர்வம், டயட்டிங், விடாத உடற்பயிற்சி, சிலமாதங்களில் சிக்ஸ் பாக்ஸ்.

கண்ணுக்கு தெரியும் தசைகளை நம்மால் கட்டமைக்க முடியுமென்றால், அதே கவனத்தை நமது மனப்பழக்கங்களில் காட்டினால் நிச்சயம் சாத்தியமே.

யோவ், மனப்பழக்கமா என்று குழம்ப வேண்டாம்.

சிலர் பேசும் பொழுது தோள்பட்டையை உயர்த்தி தாழ்த்துவார்கள்.

சிலர் ஒரு புருவத்தைமட்டும் மேலே ஏற்றி இறக்குவார்கள்.

இன்னும் சிலர் விரல் வித்தைகளைக்காட்டி நம்மை மிரட்டுவார்கள்.

இவையெல்லாம் வெளியில் தெரிகிற பழக்கங்கள்.

இவற்றைப் போலவே வெளியில் தெரியாத பழக்கங்கள் இருக்கின்றன.

மனப்பழக்கங்கள்.

என்னால முடியாது.

என்னால ஏன் முடியலேன்னா என்று காரணத்தைக் கண்டுபிடிப்பது,

நமக்கு எதுவும் செட்டாகாது, இப்படி வெளியில் தெரியாமல் உள்ளுக்குள்ளேயே  ஒலிக்கும் குரல்கள் ஒரு மனிதனை எரித்துத் தின்றுவிடும்.

இவை அபாயகரமான மனப்பழக்கங…

மகிழ்வைப் பழகுவோம்

Image
இரண்டு வார்த்தைகள்

லைவ் வயர் மனிதர்கள்

வெட் ப்ளாங்கட் மனிதர்கள்

குரங்குகளின் கிரகத்திற்கான போர்

Image
இரண்டாயிரத்து பதினொன்றில் மிக எளிய ஆரம்பமாக துவங்கிய படம். ரைஸ் ஆப் தி பிளான்ட் ஏப்ஸ், படத்தின் போஸ்ட் கிரடிட்டில் வைரஸ் மெல்ல மெல்ல உலகெங்கும்  பரவுவதைக் காட்டி முடித்திருப்பார்.

ருக்குமணி வண்டி வருது -முனைவர் மு பிரபு

Image
தினசரிகளைப் படிப்பது காலை நேரங்களில் அத்தியாவசிய ஒன்றாக இருந்தது ஒரு காலத்தில். எப்பொழுதுமே சார்புச் செய்திகள் வந்த வண்ணமேதான் இருக்கின்றன. கட்சிப் பத்திரிகைகள் எவ்வளவோ தேவலாம் என்று நான் சொல்வதுண்டு. செய்தி என்று அவைகளில் ஒன்றுமில்லை. எல்லலாமே அவரவர்கள் தரப்புச் செய்திகள்தான். கட்சிக்காரர்களோ அல்லது அந்தந்த இயக்கத்து நபர்களோதான் இந்தப் பத்திரிகைகளை வாங்கிப் படிக்கின்றனர். ஆனால், செய்திப் பத்திரிகைகள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு வருபவைதான் ஆபத்தானவை. அடிப்படை நேர்மையில்லாதவை. முகநூல் - வாட்ஸ்அப் வந்த பிறகு, பல எழுத்தாளர்களின் - அறிவுஜீவிகளின் கருத்துகள் கொஞ்சமும் எடிட் செய்யப்படாமல் படிக்கக் கிடைக்கின்றன. நான் சொல்லுகின்ற செய்திப் பத்திரிகைகளைவிட முகநூல் எவ்வளவோ பரவாயில்லை என்றுதான் நினைக்கிறேன். சல்லியடிக்கும் மனிதர்களை - விஷயங்களை எளிதாக அடையாளம் கண்டு புறந்தள்ள முடிகிறது. ஒரு expert-ன் கைகளில், அதாவது தொழில்முறை எடிட்டரின் கைகளில், ஒரு பைசாவிற்கும் உதவாத செய்தியும் கூட முக்கியமான செய்தியாகத் தெரிய வாய்ப்புண்டு. அண்மைக்காலங்களில் செய்தித்தாள்களை பத்து நிமிடங்களுக்குள் படி…

ஸ்பைடர் மேன் ஹோம் கமிங்

Image
மார்வல் நிறுவனத்தை வாழவைத்துக் கொண்டிருக்கும் கதாபாத்திரத்தில் ஒன்று ஸ்பைடர் மேன். முதல் முதலில் ஸ்பைடரை நான் பார்த்தது புதுக்கோட்டை எஸ்.வி.எஸ். தியேட்டரில்தான்.

மகிமாவின் மஷ்ரூம் கட்டும் புதிய கல்விக் கொள்கைகளும்

Image
யுகம் யுகமாக மனுவினால் சாதி முத்திரை குத்தப்பட்டு, தமது பரம்பரைத் தொழில்களில் அமிழ்ந்து வெளியேற முடியாத சமூகத்தின் அடுத்த தலைமுறைகள் தங்கள் குலத்தொழிலில் இருந்து வெளியேறுவதுதான் மீட்சியின் முதல்படி.

வெள்ளாமை என்றால் விளைச்சல்தானே வேண்டும் ?

Image
மனப்பாட பாடல்களை நடத்தி இதோடு ஒருமாதம் ஆகிவிட்டது.