Posts

Showing posts from November, 2017

புத்தகத் திருவிழா 2017இல் எல்லைப்பட்டி மாணவர்கள்

Image
புதுகையில் ஒரு புத்தகத் திருவிழாவை நடத்த இலக்கிய ஆர்வலர்கள் திட்டமிட்டு, இதுதொடர்பாக விவாதிக்க தொடர் கூட்டங்களை நடத்த விரும்பினார்கள். கவிஞர் தங்கம் மூர்த்தி, கவிஞர் முத்துநிலவன் மற்றும் கம்பன் கழக நிறுவனர் சம்பத் குமார் ஆகியோரின் முன்னெடுப்பில்  விவாதங்கள் தொடங்கின, கவிஞர்கள் வீடுகளில் ஆலோசனை துவங்கி மெல்ல மெல்ல உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகமாகி இறுதியாக சில்வர் ஹாலில் கூட்டம் நடைபெற்றது.

படம் பார்க்க கிளிக்குங்க 

ஊர்கூடி இழுத்த தேர் திடுமென நின்றுபோக, இனி புத்தகத் திருவிழா சாத்தியமா என்கிற நிலையில் சிலமாதங்கள் நீடித்தது.


திடுமென தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தேரை இழுக்கத் துவங்கியது. அய்யா மணவாளன், தோழர் பாலா, புதுகை புதல்வன் என்கிற ஒரு அணி ஒன்றிணைந்து மீண்டும் கவிஞர் தங்கம் மூர்த்தியை அழைத்து விழாக்குழுவிற்கு தலைமையேற்க கோர முதலாண்டு புத்தகத் திருவிழா வெற்றிகரமான முறையில் நடந்தேறியது.

பிரச்னை என்னவென்றால் கடந்தமுறை திருவிழாவின் போதுதான் மோடி பகவான் ரூபாய் நோட்டுக்கள் மூலமாக இந்தியர்களின் தேசபக்தியை சோதித்துக்கொண்டிருந்தார். போதாக்குறைக்கு முதல்வர் ஜெயா உடல்நிலை வேறு சேர்ந்துகொள்ள திரில…

தீரன் அதிகாரம் ஒன்று

Image
நடிகர் சிவாஜி கணேசனுக்கு பிறகு அதிரி புதிரியாய், அசுரத்தனமாய் முதல்படத்திலேயே மாஸ் ஹீரோ அப்பீல் கிடைத்தது கார்த்திக்குக்கு மட்டுமே என்று பெருமூச்சுடன் சொல்வார்கள். 
உண்மைதான்.

இலக்குமி இரண்டு விமர்சனங்கள் ....

Image
திருமிகு. ராஜசுந்தரராஜன் அவர்களின் விமர்சனம்...

இலக்கு me
____________
சின்ன விலகல் அல்லது கோணலாவது இல்லாவிட்டால் அது கலை ஆகாது. அது ராக்கெட் சயின்ஸ்.

லட்சுமி இன்னொரு கோணம்

ஸ்ரீதர் சுப்பிரமணியனின் கேள்விகள்

சேகரிடம் சில கேள்விகள்
==========================

லட்சுமி பாத்திரத்தை நோக்கி ஆயிரம் கேள்விக்கணைகள் வந்து கொண்டு இருக்கின்றன. ஆனால் சேகரை கேள்விகள் கேட்டு ஒரு பதிவு, ஒரே ஒரு பதிவு, கூட இதுவரை நான் பார்க்கவில்லை. ஆகவே நான் கேட்கிறேன். இந்தக் கேள்விகள் சேகரை நோக்கியதாக இருப்பினும், திருமணமாக எல்லா ஆண்களும், லட்சுமி படத்தை கடுமையாக விமர்சித்த எல்லா ஆண்களும், தங்களையும் இதே கேள்விகளை கேட்டுக் கொள்ளலாம்:

ஜியோஸ்டார்ம் 2017 geostorm 2017

Image
ஜியோஸ்டார்ம் இன்னொரு பேரழிவு ஸைபி. ஜெரார்ட் பட்லர் ஆக்சன் ஹீரோவாக அதகளம் செய்துவிட்டு விண்வெளி நிபுணராக அசத்தியிருக்கும் படம்.

ஆல்வரெஸ் கெல்லி Alvarez Kelly(1961) ஆநிரை கவர்தல்

Image
ஆநிரை கவர்தல்  ஆபிரகாம் லிங்கனால் திறமையான மாட்டுத்திருட்டு என்று குறிப்பிடப்பட்ட ஒரு திருட்டுச்சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம்.

ஆல்வரெஸ் கெல்லி, ஒரு மெக்சிகன் கவ்பாய், அமெரிக்க உள்ளநாட்டுப் போரின் பொழுது யூனியன் படைகளுக்கு ஆயிரக்கணக்கில் மாடுகளை இறைச்சிக்காக விற்பனை செய்தது இவரது தொழில்.

யுத்தத்தில் பணம் செய்வது இயற்கை என்பது இவரது வாதம்.

1864இல் நடந்த சம்பவத்தை 1966இல் படமாக்கிருக்கிறார்கள்.

யூனியன் கர்னல் ஸ்டட்ஸ்மான் ஆல்வாரெஸ் கெல்லியை மிரட்டும் காட்சியுடன் துவங்கிறது படம். ஏற்கனவே பல ஆயிரம் மைல்கள்  பயணித்து வந்த கெல்லி இன்னும் ஒரு ஆயிரம் மைல்கள்  தனது மாடுகளை ஓட்டி ஒப்படைக்க வேண்டும் என்று மிரட்டுகிறார் கர்னல்.

வேறு வழியில்லை என்று பணிக்கிறார் கெல்லி. ஆனால் எதிர்பாராவிதமாக கெல்லியை கடத்துகிறது கான்பிடரேட் படை.

கெல்லியை மிரட்டி அத்துணை மாடுகளையும் தங்கள் பகுதிக்கு ஓட்டிவரவேண்டும் என்று ஆணையிடுகிறார் கண்பிடரேட் கர்னல், டாம் ரோசிஸ்ட்டர்.

கெல்லி, பணிய மறுக்க அவரது விரல் ஒன்றை சுட்டு அகற்றவே வேறு வழியின்றி ஒப்புக்கொள்கிறார் கெல்லி.

விரலை வெட்டியதற்கு பழிவாங்குவதற்காக க…

2:22 (2017) ஜென்ம ஜென்மாக தொடரும் காதல்

Image
டைலன் ப்ராஸ்னன் ஒரு ஏர் டிராபிக் கண்ட்ரோலர், சொல்லப்போனால் அவன் ஏரியாவில் அவன் கில்லி. அவன்கூட  கூட பணியாற்றும் சாண்டியுடன் காதல், அது புட்டுக்கொள்கிறது.  சாண்டி அவனுக்கு தரும் ஏரியல் பாலே நடன நிகழ்விற்கு செல்லும் இடத்தில் சாராவை சந்திக்கிறான்.

பிரமாண்டமான பேலியோ அறிமுக மாநாடு - புதுக்கோட்டை

Image
05/11/2015


பேலியோ குறித்து புதுக்கோட்டை பகுதியில் முதல்முதலில் பேசியவன் நான் என்றாலும் பேலியோ பக்கமே செல்லாமல் இருந்தேன். உணவுமுறை கட்டுப்பாடு என்பது எனக்கு சுட்டுப்போட்டாலும் வராது என்பதுதான் காரணம்.