Posts

Showing posts from December, 2012

ஜாக் ரீச்சர்

Image
திடீரென்று டாம் க்ரூஸ் ஜாக் ரீச்சர் அவதாரம் எடுத்திருக்கிறார். முதலில் ஜாக் ரீச்சர் யாரு?

லீ சைல்ட் என்கிற புனைபெயரில் எழுதி வரும் ஜிம் கிராண்டின் ஹிட் நாவலின் முதல் திரையாக்கம்தான் ஜாக் ரீச்சர்.


ஜாக் ரீச்சர் ஆறடி ஐந்துஅங்குலம், கடிகாரத்தை பார்க்காமலே தனது உடல் கடிகாரத்தை வைத்தே நேரத்தை சொல்லக்கூடிய திறன்,  அப்பர் கட், முழங்கை அடி, மண்டையால் மோதுவதில், தெருச்சண்டையில் எக்ஸ்பெர்ட்.  ஒரு ராணுவ விசாரணை அதிகாரி, என கொஞ்சம் ஆர்வத்தைக்கிளரும்  மர்ம மனிதன். காரோ, லைசென்சோ கிடையாது. பஸ் மட்டுமே இவரது ஒரே வாகனம். எங்கேயாவது சுமாரான ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு, சுமாரான லாட்ஜில் தங்குவது இவரது வழக்கம். ஒரு இடத்தில்  நிலையாக இருப்பதும் கிடையாது. 
இந்த திரைப்படம்   ஒன் ஷாட் என்கிற நாவலை தழுவி எடுக்கப்பட்டது. ஆறடி கதாநாயகனுக்கு டாம் க்ருஸ் கொஞ்சம் எசகு பிசகாக செட் ஆகிறார். ஆனாலும் லீ சைல்ட் எனது கதாநாயகனின் 100 சதவிகிதத்தை டாம் க்ரூஸ் கொண்டுவந்துவிட்டார் என்று மகிழ்ந்திருக்கிறார். அப்பறம் பார்க்கிற நமக்கென்ன ? 
படத்தின் ஆரம்பத்தில் துப்பாக்கியின் தொலைநோக்கி வழியே நாமும் பார்க்கும்போது  என்ன நடக்கபோகி…

கொஞ்சம் புதிய அறிவியல்

Image
ஓப்பன் சோர்ஸ் சாப்ட்வேர் வரலாற்றில் ஒரு மைல் கல்
நாசாவின் திறந்த நிலை நிர்வாகம் மிகச் சிறந்தது என அறியப்படுகிறது. ஓப்பன் சோர்ஸ் சாப்ட்வேர் வரலாற்றில் ஒரு மைல் கல்லாக நாசா தனது திட்டங்களுக்கு தேவையான மென்பொருள்களை ஓப்பன் ஸ்டோர்ஸ் முறையில் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது. ஆர்வமுள்ள தனிநபரும் இந்த மென்பொருள்களை பார்வையிடலாம். நாசாவின் தொழில்நுட்பத்தை பொதுமக்கள் பயன்படுத்த இது வாய்ப்பாக அமையும்.

ஹாக்கர்கள் நினைத்தால் நீங்கள் இருக்கும் இடத்தை அறிய முடியும். மினசோட்டா பல்கலைக்கழக ஆய்வு ஒன்றின் மூலம் செல்போன் நிறுவனங்கள் வாடிக்கையாளர் எங்கிருந்து பேசிக்கொண்டிருக்கிறார் என்ற விவரத்தை வெளியிடுவதை கண்டுபிடித்திருக்கிறார்கள். செல்போன் நிறுவனங்கள் அவற்றின் சேவையை தொடர்ந்து வழங்க வாடிக்கையாளர் எங்கிருக்கிறார் என்று அறிந்தாக வேண்டும். இதுதான் ஹாக்கர்காளுக்கான வாய்ப்பை வழங்குகிறது. இந்த ஆய்வின் முடிவுகள் தனிமனிதன் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியிருக்கிறது.

ஈழம் இன்று

Image
தமிழினம் முற்றாக அழிக்கப்பட்டு விட்டது,( ஆமாம் அடிமையாய்  வாழ்வதை வாழ்வென்று சொல்வதா ?) பல ஆண்டுகளுக்குமுன் அமெரிக்காவில் ஆப்ரிக்கர்கள் வாழ்ந்த்ததைப்போல் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

அப்போது அமெரிக்காவில் நான்கு அமெரிக்கர்கள் சேர்ந்துவிட்டால் கொஞ்சம் சரக்கைப்போட்டுவிட்டு துப்பாக்கிகளை எடுத்துக்கொண்டு ஒரு காரில் கிளம்புவார்கள். கண்ணில் தெரிகிற கறுப்பின மக்களை சுட்டுவிட்டு உற்சாகமாய் திரும்புவார்கள். அவர்களுக்கு அது ஒரு பொழுதுபோக்கு. அவ்வளவே. இப்படி துரத்தி துரத்தி அடித்தால் என்னே ஆகும் ரஸ்யா டுடே தொலை காட்சியில் மேட் இன் அமெரிக்கா  பாருங்கள். தெரியும்.

இதே நிலையில்தான் இன்று ஈழத்தில் வாழும் தமிழன் இருக்கிறான். சிங்களனின் பொழுதுபோக்கிற்கு என்னவேண்டாலும் செய்யலாம் தமிழ் மக்களை. புலித்தடம் தேடி தொடரை படித்தபோது இப்படித்தான் தோன்றியது.

ஆனால் மகிந்த அரசு  கொள்ளிக்கட்டையை எடுத்து முதுகு சொறிவதை பார்க்கலாம். தற்போதய இலங்கையில் புதிய கட்டுமானப் பணிகளுக்கு சீனா முழுக்க முழுக்க சீனா கூலிகளையே பயன்படுத்திவருகிறது. அப்போ இலங்கையில் மூன்றாவது இனம் ஒன்று உருவாகி விட்டது. எதிர்காலத்தில் சிங்களுனுக்கே…

ஒரு கேரள சாதனை

Image
கேரளா சத்தமில்லாமல் ஒரு சாதனையை செய்துள்ளது.  இந்த ஆண்டு கூகுளில் அதிகம்பேர் தேடியது கேரளாவைத்தான். மேற்குதொடர்ச்சி மலைகளும் மூனாறு மலை வாசஸ்தலமும் கூகுளின் டாப் டென் பட்டியலில் இடம்பெற்று உள்ளன.

கேரள அரசின் சுற்றுலாத்துறை குறிப்பின்படி கேரளா முதல் இடத்திலும் தாஜ் மஹால் இரண்டாம் இடத்திலும் வாகா எல்லை மூன்றாம் இடத்திலும் அடுத்த இடத்தில வைஷ்ணவ தேவி கோவில் மற்றும் அமர்நாத் கோவிலும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

கூகிள் தேடல் ஆய்வு முடிவுகளின் படி மூனாறு சுற்றுலாப் பயணிகளின் தேடுதலில் ஒன்பதாம் இடத்தில இருப்பதாக கூறுகிறது.

கேரளா சுற்றுலாத்துறை அமைச்சர் எ பி அணில் குமார் கேரளா இணய சந்தைபடுத்துதலில் முன்னணியில் இருப்பதாக கூறினார். சமுக வலைகளையும் இனைய விளம்பரங்களையும் பயன்படுத்தி இந்த நிலைக்கு வந்ததாக கூறுகிறார்.

கேரளாவின் சுற்றுலாத்துறை இணையத்தளம் ஒவ்வொரு மாதமும் இரண்டரை லெட்சம் பார்வையாளர்களை கவர்வதாக குறிபிடுகிறார்.

தமிழகம் செய்யவேண்டியது என்ன

1. இணய சேவைகளை சரியாக பயன்படுத்துவதன் மூலம் புதிய சுற்றுலா பயணிகளை கவர்தல்.

2. வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பை உறுதி செய்தல்.

3. சுற்று…

அசத்தும் வாத்து !

Image
புதிதாய்ப் புயலாய் ஒரு தேடல் எந்திரம்

பெரிய பெரிய கம்பெனியே கூகுளை போட்டுப்பார்த்து கையைச்சுட்டுக்கொண்டு உட்கார்ந்திருக்கையில் தக்குனூன்டு கம்பனி ஒன்று தேடல் துறையில் மிக அழுத்தமாய் கால்பதிதிருக்கிறது. பெரிய தேடல் நிறுவனங்கள் தரும் லொள்ளு பிடித்த ப்ரைவசி பாலிசி ஏதும் இல்லாம செயல்படுவது இதன் சிறப்பு. இதை ஒருமுறை உபயோகித்துபார்த்தால் இதன் அருமை தெரியும். ஒரே ஒரு முழுநேர பணியாளருடன் செயல்படும் இந்த தளம் நிச்சயமாக ஒரு சிறந்த தேடல் என்ஜின் என்றால் மிகையாகாது. பயனர்களை பபுள் செய்வதோ பில்ட்டர் செய்வதோ இல்லாமல் இந்த சேவை வழங்கப்படுகிற காரணத்தினால் இத்ததளம் வெகு வேகமாக புகழ்பெற்றுவருகிறது தளத்தின் மோர் பட்டனை அழுத்தினால் அளிக்கும் இலவச சேவைகள் வாவ் ரகம்.


இதில் இருந்து பொறியியல் கல்லூரி மாணவர்கள் உணரேவேண்டியது நம்மாலும் முடியும் என்பதே. சொத்து சேர்க்க, சொகுசாய் வாழ, ஐ டி யில் வேலை என்று காலரைத்தூக்கிவிட்டுக்கொண்டு ஏதோ ஒரு வெளிநாட்டு நிறுவனத்திடம் நல்ல சம்பளம் வாங்க கனவுகாணும் சராசரி பொறியியல் மாணவர்களை அல்ல நாம் சொல்வது. சுயமாய் சிந்திக்க, செயல்பட, சாதிக்க துடிக்கும் நாளைய இந்த…

வார்த்தைகளை சேமிப்போம்

Image
ஆங்கிலம் பேச சில யுக்திகள்
நாம் நினைப்பதை விட நமக்கு அதிக ஆங்கில வார்த்தைகளைத் தெரியும் என்பது ஒரு ஆச்சர்யமான செய்தி. இருந்தாலும் நாம் அவற்றில் எத்தனை வார்த்தைகளைப் பயன்படுத்துகிறோம் என்பது கேள்விக்குறி. நமது நினைவில் வார்த்தைகள் இரண்டு குழுவாக பதியவைக்கப்படுகிறது. அன்றாடம் பயன்படுத்தும் வார்த்தைகள், எப்போவதாவது பயன்படுத்தும் வார்த்தைகள் என்கிற இரண்டு குழுக்களை நாம் நன்கு புரிந்துகொண்டோமென்றால் நாம் சுலபமாக ஆங்கிலத்தை பேச முடியும். ரொம்ப சிம்பிள் அன்றாடம் பயன்படுத்தும் வார்த்தைகள் நம் நினைவில் நிற்கும் எப்போவதாவது பயன்படுத்தும் வார்த்தைகள் மெல்ல மெல்ல மறந்து போகும். எனவே நமது எப்போதாவது பயன்படுத்தும் வார்த்தைகளை நாம் அன்றாடம் பயன்படுத்துகிற வழியை பார்க்கவேண்டும்.
அது எப்படி அன்றாடம் இரண்டு புதிய வார்த்தைகளையாவது நாம் பயன்படுத்திப் பேச வேண்டும். வார்த்தைகளுக்கும் நமக்குமான தொடர்பு அறுந்துவிடக்கூடது. கொஞ்சம் பொறுமை விடாத பயிற்சி இருந்தால் இது எளிமையான பணிதான்.
ரொம்ப போட்டு மண்டைய கொடையாம இந்த பணியை எளிமைப்படுத்தும் ஒரு வலைத்தளம் www.wordhippo.com . இந்த தளத்த…

நண்பா அறக்கட்டளையின் சிந்தனைத்திறனாய்வு 2012

Image
நிகழ்வுகள்
நண்பாவின் இரண்டாம் ஆண்டு நம் மக்கள் எம் திட்டம் சிந்தனை திறனாய்வு விழா 8/01/2012 அன்று இனிதே நிகழ்ந்தது. வழக்கம்போல் துரை சரவணன் நிகழ்ச்சியை தொகுக்க புகழ்பெற்ற பேச்சாளர்கள் கஸ்துரி நாதன் மற்றும் வள்ளியப்பன் நடுவர்களாக இருந்து சிறப்பித்தனர். வழமையான பேச்சுபோட்டியாக இல்லாமல் சிந்தனை திறனாய்வு என நடத்தியது நண்பாவிற்கே உள்ள புதுமை. பல பங்கேற்பாளர்கள் சரளமாக பேசினாலும் சிலர் திக்கினர். இருப்பினும் பங்கேற்பாளர்கள் அனைவரும் தங்களது சிந்தனையை தயங்கியோ திக்கி திக்கியோ சொல்ல அனுமதிக்கப்பட்டது அருமை. இது சிந்தனை திறனாய்வு அல்லவா? நிகழ்ச்சி ஏற்பாடுகள் அனைத்தும் அருமை. மிக அருமையாக திட்டமிடப்பட்ட ஒரு நிகழ்வு என்பது பார்த்தவுடன் பளிச்சென்று தெரிந்தது.

எல்லைப்பட்டி மற்றும் கீழையூர் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுடன் அண்டக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி, இராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, குலபதி பாலையா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி, எஸ்.எஃப்.எஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி, மௌண்ட்சியோன் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி,வைரம்ஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்…

பனித்துளிகள் மின்இதழ் ஒரு அறிமுகம்,

இணையம் பல சாதனைகளை செய்ய சாமான்யர்களுக்கு வாய்ப்புகளை வாரி தருவது நாம் அறிந்ததே. உலகின் மிக பெரிய மீனான திமிங்கில சுறா அறிவியலுக்கெட்டா ஆழத்தில் மறைவதுபோல் பல நல்ல விஷயங்கள் இணையத்தில் நமக்கு தெரியாது போய்விடுகின்றன. இப்போது பனித்துளிகள் தனது நாற்பத்தி ஐந்தாவது இதழை தொட்டிருக்கிறது. ஆனால் நம் எத்தனை பேருக்கு இந்த இதழை தெரியும். தமிழ் மரபினை உயர்த்தி பிடிக்கும் இந்த இதழ் எத்துனை தமிழ் நெஞ்சங்களை அடைந்திருக்கிறது? பெரிய கேள்விக்குறிதான்.

நாற்பத்தி ஐந்தாவது இதழில் முதலில் பலருக்கு தெரியாத தமிழ் மரபின் பொய்க்கால் குதிரை ஆட்டம் குறித்த ஒரு அருமையான அறிமுகக்கட்டுரை, விவேக பானு குறித்த தகவல்கள் என தமிழ் சமுகம் அறிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் உள்ளன. மேலும் பாஸ்போர்ட் முகவரி மாற்ற விதிமுறைகள், புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் என எதிர்காலத்தின் அறிமுகம். பழமைக்கும் புதுமைக்கும் ஒரு அருமையான சமனாக பனித்துளிகள் மலர்ந்துள்ளது. வெற்றி நடை போட எமது நெஞ்சம் கனிந்த வாழ்த்துக்கள்.


இந்த மின்இதழை பெற

http://www.facebook.com/panithuligal E-mail: d.p.praveen@g…

ரவீந்திரநாத் தாகூர் 2

Image
இரண்டு 
 டபுள்யு. பி. யேட்ஸ், ஒரு தனித்துவம் வாய்ந்த ஆங்கிலக் கவிஞர். வில்லியம் பட்லர் யேட்ஸ் பிரித்தானிய இலக்கியத்தின் தூண் என வர்ணிக்கப்பட்டவர். கீதாஞ்சலியின் முன்னுரையில் நாம் எழுதி வியாபாரம் பார்ப்போம் ஆனால் தாகூர் தனது ஆன்மாவிலிருந்து எழுதியிருக்கிறரர் என்று குறிபிடுகிறார்.

லண்டன் இந்தியன் சொசைட்டி யேட்ஸ்சின் முன்னுரையோடு கீதாஞ்சலியை வெளியிட்டது. இது தாகூரையும் அவரது கவிதையும் புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. முதலில் லண்டன் இலக்கிய உலகிலும் பின்னர் உலகின் அத்துணை மூலைகளுக்கும்  சென்றது தாகூரின் புகழ்.

இந்தியாவின் கலாச்சாரமும், இறையனுபவமும் மேற்குலகுக்கு முதன்முதல் அறிமுகமானது. ஓராண்டிற்குள்ளாகவே 1913இல் தாகூர்க்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.   இலக்கியத்திற்காக நோபலை வென்ற மேற்குலகை சேராத  முதல் மனிதர் தாகூர் ஆவர்.

ஒரே இரவில் புகழின் உச்சிக்கு சென்ற தாகூர் தனது உலக சுற்றுபயணத்தை துவக்கினார். பல கலச்சாரங்கள் சகிப்புத்தன்மையோடும், புரிந்துணர்வோடும் இருக்கவேண்டிய அவசியம் குறித்து உலகெங்கும் உரையாற்றினார். 1915ஆம் ஆண்டு ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் தாகூரை நைட் பட்டம் கொடுத்த…

ரவீந்திரநாத் தாகூர்

Image
ஒன்று 

கல்கத்தாவில் ஒரு வசதியான பிராமணக் குடும்பத்தில் பிறந்த ரவீந்திரநாத் தாகூர் 1828இல் லண்டனில் சட்டம் படிக்க விரும்பினார். ஆனால் பாதியிலேயே இந்தியா  திரும்பினார்.

கல்கத்தாவில் எழுத்து, இலக்கியம், பாடல்கள், நாடகம் மற்றும் கல்வி என இவர் தனது பன்முக ஆளுமையை வளர்த்துக்கொண்டார். தனது நண்பர் ஒருவரின் இதழில் தனது கவிதைகளை வெளியிட்டுவந்த தாகூரை கல்கத்தா தாண்டி யாருக்கும் தெரியாது.

தனது 51ஆம் வயதில் தனது மகனுடன் மீண்டும் இங்கிலாந்துக்கு சென்றார் தாகூர். மிக நீண்ட கடல் பயணத்தில் எதையாவது  செய்து பொழுதைபோக்க வேண்டும் என்று நினைத்தவர் தனது கீதாஞ்சலி கவிதை தொகுப்பை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கலாம் என்று முடிவெடுத்தார். அதுவரை தனது அத்துணை படைப்புகளையும் வங்க மொழியிலேயே எழுதியிருந்தார் தாகூர்.

ஒரு சிறிய நோட்டில் எழுத ஆரம்பித்தார் தாகூர்.  அவர் மகன்  அந்த நோட்டை லண்டன் சப்வே ஒன்றில் ஒருபெட்டியோடு மறந்து வைத்துவிட்டு வந்துவிட்டார். யாரோ ஒருவர் அந்த பெட்டியை பொறுப்பாக திரும்பக்கொண்டுவந்து ஒப்படைத்ததும் நடந்தது!

ரோத்தைன்ஸ்டீன் என்ற ஓவியர் தாகூரின் நண்பர். தாகூரின் மொழிபெயர்ப்பு குறித்து கேள்விப்பட்ட இ…

கனவுப் பள்ளி

Image
பள்ளிகள் எதிர்காலத் தலைமுறைகளை வாழ்க்கைக்கு தயார்படுத்தி, தரமேற்றி மனிதகுலத்தின் எதிர்காலத்தை உறுதிப்படுத்தும் உன்னத ஆலயங்கள். ஆனால் இதை இப் பள்ளிகள் தரமாக செய்கின்றனவா? விடை தெரிந்தும் பகர்வதில்லை பலர். ஒரு சின்ன உதட்டு சுளிப்புடன் எல்லாரும் செய்வதைத்தான் செய்யவேண்டும். வேறென்ன செய்ய இயலும்.

பள்ளிகளின் தொடக்கம்

பன்னெடுங் காலத்திற்கு முன் குருகுலமாகவும். பின்னர் திண்ணை பள்ளிகள், மிசன் பள்ளிகள் என்று வளர்ந்தது நமக்கு தெரியும். ஆனால் மேற்குலகில் பள்ளிகள் வேருன்ற துவங்கியது தொழிற் புரட்சியின் போதுதான். வேலைக்கு செல்லும் பெற்றோர்களின் பிள்ளைகளை என்னசெய்வது? பள்ளிகள் சரியான இடமாக பட்டது. தொழிலாளர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிகளில் விட்டுவிட்டு தொழிற்சாலைகளை நோக்கி நகர்ந்தனர். திடீரென கூடிய மாணவர் எண்ணிக்கையை சமாளிக்க நிர்வாகம் திணறியது. மேற்குலகின் சில பள்ளிகளில் மாணவர்களை அமைதிப்படுத்த அபின் கூட பயன்படுத்தப்பட்டது.

கல்வியாளர்களால் பள்ளிசெயல்முறைகள் தீர்மானிக்கப் படாது, சூழல் தீர்மானித்தது. இன்றளவும் இதனுடைய நீட்சியாகத்தான் வகுப்புகள் தீர்மானிக்கப்படுகிறது. ஐந்து வயதில் ஒன்றாம் வகுப்பு பதி…

தாய்மொழி -பாரதியின் பார்வையில்

Image
விடுதலைப் போராட்டத்தின்போது தேசப்பிதா மகாத்மா காந்தி சென்னையில் ஒரு எழுச்சியுரை ஆற்றினார். இந்த கூட்டத்தில் அவரது பேச்சை கேட்டுகொண்டிருந்த பாரதியார் அவருக்கு ஒரு கடிதம் எழுதிகிறார். தங்களது உரை எழுச்சி ஊட்டக்கூடியதாக இருந்தது. விடுதலை வேட்கையை தூண்டும் வண்ணம் காந்தியார் சிறப்பாக பேசியதாக குறிப்பிட்ட பாரதியார்  கடிதத்தின் பின்குறிப்பாக பின்வருமாறு குறிப்பிடிருந்தார் : தங்களது உரை இந்தியிலோ, குஜராத்தியிலோ அல்லது சமஸ்கிருதத்திலோ அமைந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். நாம் எந்த வெள்ளையனை வெளியேற்றப் பாடுபடுகிறோமோ அதே மொழியில் தங்கள் உரை அமைந்திருந்தது சரியல்ல.

இதற்கு பதிலளித்த காந்தியார் தான் ஒரு இமாலய தவறு செய்துவிட்டதாகவும் இனி தனது உரைகளை இந்தியிலோ, குஜராத்தியிலோ அல்லது சமஸ்கிருதத்திலோ பேசுவதாக குறிப்பிடிருந்தார். அவரின் கடிதத்திலும் ஒரு பின்குறிப்பு இருந்ததது. பின்குறிப்பு : ஆனால் பாரதி உங்கள் கடிதத்தை நீங்கள் ஆங்கிலத்திலேயே எழுதியிருக்கிறீர்கள்.

இந்தக் கடிதத்திற்கு பதிலளித்த பாரதி தான் யாரையும் குறைசொன்னலோ, விமர்சித்தாலோ அல்லது மனம்புன்படும் வகையில் பேசினாலோ தாய்மொழியை பயன்…

பி என் ஆர் நிலவரத்தை அறிய

தற்போதைய நிலவரம்

தற்போதைய நிலவரம்

பழைய செக் புத்தகங்கள் இன்னும் மூன்று மாதங்களுக்கு செல்லும் என ஆர் பி ஐ அறிவித்திருக்கிறது.

கொஞ்சம் வெப்

Image
1992 ஆம் ஆண்டு நேரு யுவ கேந்திரா  மூலம் கணிப்பொறிஎனக்கு அறிமுகம் ஆனது. அப்போது வெறும் 150 ரூபாய்களை பெற்றுக்கொண்டு ஒரு 50 பேருக்கு டி பேஸ், லோட்டஸ் 123, மற்றும் போர்ட்ரான் மென்பொருட்களை கற்றுத்தந்தனர் . சாப்ட் டெக் என்ற கணிப்பொறி நிறுவனம் நேரு யுவ கேந்திரா நிறுவனத்துடன் ஒப்பந்த அடிப்படையில் இந்த பயிற்சியை நடத்தியது. திரு. சுரேஷ் (தற்போதய என்.எம் பல்தொழில்நுட்ப கல்லூரி முதல்வர்),  அவர்கள்தான் இந்த கணிபொறி நிறுவனத்தின் அதிபர். திரு. செந்தில் குமார், (புதுகையின் செல்வந்த குடும்பங்களில் ஒன்றான எம்.எஸ். ரியல் எஸ்டேட் குடும்பத்தின் கடைக்குட்டி), எங்கள்   கணிபொறி பயிற்றுனர். 

டி பேஸ் ஒரு அருமையான டேட்டா பேஸ் மென்பொருள். இதை பழகிகொண்டால் மற்ற டேட்டா பேஸ் மென்பொருட்கள் இயங்கும் விதம் எளிதாக புரியும். நாங்கள் கொடுக்கும் 150 ரூபாய்க்கு 200 கட்டளைகளை சொன்னால் போதுமானது என முடிவெடுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது.இன்றளவும் ஒரு எளிய சக்திவாய்ந்த டேட்டா பேஸ் மென்பொருள் டி பேஸ்.அடுத்தது லோட்டஸ் 123. அன்று / கட்டளைகளை விழுந்து விழுந்து படித்தது நினைவிற்கு வருகிறது. இப்படி துவங்கிய என் கணிப்பொறி அறிமுக…

விக்டோரியா சாடோ-ஆதர்ச ஆசிரியை

Image
அமெரிக்காவில் வழக்கம்போல் இன்னொரு அதிர்ச்சி கனடிக்கட் பள்ளியில் துப்பாக்கிசூடுஆடம் லான்சா கொஞ்சம் மறைகழண்ட _____ (கோடிட்ட இடத்தை பூர்த்தி செய்துகொள்ளவும்) துப்பாக்கியை எடுத்துக்கொண்டு கனைடிக்கட் பள்ளியில் 26 பெயரை சுட்டு காலி பண்ணியிருக்கிறான்.சம்பவம் நடந்த அன்று (14/12/12, வெள்ளி ) காலை வீட்டில் தனது அம்மாவை முதலில் காலிசெய்துவிட்டு செமி ஆட்டோமாடிக் ரைபில் ஒன்றை எடுத்துக்கொண்டு சாண்டி ஹூக் துவக்கப் பள்ளிக்குள் நுழைந்து  வெறியாட்டம் போட்டு தன்னை தானே சுட்டுக்கொண்டு செத்து போயிருக்கிறான்.

மனம் ஆறா சோகம்

உயிராபத்தில் தலை தெறிக்க ஓடுவதுதான் வழக்கம். ஆனால் இப்பள்ளி ஆசிரியை ஒருவர் தனது மாணவர்களை ஒரு அலமாரிக்குள் ஒளித்து வைத்து ஆடமை திசை திருப்பியிருக்கிறார். ஒளித்து வைக்கப்பட்ட 7 மாணவர்கள் திடீரென ஓட அவர்களை பலமுறை சுட்டு விக்டோரியா சாடோ என்கிற அந்த 27 வயது ஆசிரியையும் கொன்றிருக்கிறான். அலமாரியில் மிச்சம் இருந்த 6
மாணவர்கள் சொன்னது இது.


நிகழ்வின்  உளவியல் காரணங்கள்

1, நீண்ட நேர கொடூர கணிப்பொறி விளையாட்டு
சிறார்களின் மனதை சிதைத்து, அவர்களின் சுய சிந்தனையை வீணாக்கும் பல கொடூர கணிப்பொறி விளை…

நீர்ப்பறவை

Image
வெகுநாட்களுக்கு பின் ஒரு நல்ல நாவலை திரையில் காட்டியதற்காகவே சீனு ராமசாமியை எவ்வளவு பாராட்டினாலும் தகும். சமுக பிரச்சினைகளை சொன்னால் தியட்டரை விட்டு ஓடிவிடுவார்கள் என்று நடிகைகளின் சதைபிரதேசங்களை காண்பித்து பார்வையாளனை மழுங்கடிக்கும் சாமர்த்தியக்கார இயக்குனர்களுக்கு மத்தியில் சீனு பளிச்சென வேறுபட்டிருக்கிறார் .

நாட்டை உலுக்கும் குடிநோய், யாரும் தீர்வுக்கான இயலாத இலங்கை கடற்படையின் தமிழ் மீனவ பாசம் என இரண்டு பிரச்சனைகளை எடுத்துக்கொண்டு அவற்றை சுவாரஸ்யமாய் கையாண்டு ஒரு அருமையான திரைப்படத்தை தந்திருக்கிறார் இயக்குனர்.

விஷ்ணுவிற்கு இது ஒரு ஜாக்பாட் வாய்ப்பு. ஒரளவு பயன்படுத்திக்கொள்ள முயற்சித்திருக்கிறார். குடிகாரனாக நடிப்பது தமிழ்நாட்டில் அவ்வளவு சுலபமில்லை! பாண்டி விஷ்ணுவுடன் அடிக்கும் கூத்து 20 ரூபாய்க்கு பாவ மன்னிப்பு கேட்பது என முதல் பகுதியை நகர்த்தும் காமடி டிராக்.


விஷ்ணு, சுனைனா, நந்திதா தாஸ், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி,  அழகம்பெருமாள், பாண்டி என ஒரு பெரும் பட்டாளமே கதையை நகர்த்தி செல்கிறது  .

 ஆழமான மத நம்பிக்கையுடன் வரும் சுனைனா தனக்கு கிடைத்த வாய்ப்பை பற்றிக்கொண்டு பயன்பட…