Posts

Showing posts from September, 2015

ஞாயிறு போற்றுதும்

பதிவர் சந்திப்பு-2015 தமிழ் இணைய கல்விக் கழகம் இணைந்து நடத்தும் போட்டிக்கு எழுதப்பட்ட கட்டுரை வகை-(2) சுற்றுச்சூழல் விழிப்புணர்வு - கட்டுரைப் போட்டி
சுற்றுச்சூழல் அறியாமை தரும் ஆபத்து, விழிப்புணர்வுக்கு ஆக்கபூர்வமான யோசனைகள்


ஞாயிறு போற்றுதும் - சூழல் மேம்பாடு
சூழல் சீர்கேடுகளைக் குறித்து ஊடகங்கள் அலறித்தீர்த்துவிட்டன . எங்கோ நிகழும் எல் நினோ எங்கோ எழுந்து அடங்கும் சுனாமி என்று விட்டேத்தியாய் இருந்த நாட்களெல்லாம் முடிந்துபோய் நமது வாழ்நாள் காலத்திலேயே சீர்கேடுகளின் பலன்களை அனுபவித்கத் துவங்கிவிட்டோம்.

இப்படி ஒரு ஞாயிற்று கிழமை - விதைக்கலாம் நிகழ்வு ஐந்து

Image
காலை ஐந்து இருபதுக்கு எழுப்பியது அலாரம். ஐந்து நாற்பதுக்கு அழைத்தார் மலை. எனக்கு முன்னரே ஸ்ரீ, ஐஎம்எஸ் என்கிற மணி அய்யா மற்றும் ஸ்ரீ யின் தம்பி குருமூர்த்தியும்  இம்பாலா உணவகம் முன்னே காத்திருந்தார்கள். நாகு, ஜலீல், யு.கே டெக் கார்த்திகேயன், முகுந்தன், காசிப்பாண்டி, பி வெல் மருத்துவமனை பாக்கியராஜ் என ஒவ்வொருவராய் வரவும் பயணம் துவங்கியது.

நான் கண்ட நல்லவர் திருவிழா

Image
பல்லன் கோவில் தலைமையாசிரியர் திரு.சோமசுந்தரம் ஓர் மிகநல்ல ஆசிரியரும்கூட. அவர் பள்ளியில் சில ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்த்திய திருவிழா ஒன்றைப் பகிர்ந்துகொண்டார்.

இத்துணை எத்தனங்களும் யாருக்கு

Image
பதிவர் சந்திப்புக் அமைப்புக் குழுகூட்டம்

25/09/2015, நண்பா அறிவை விரிவு செய் அரங்கு, புதுகை

வழக்கம் போல் முதல் ஆள் சோலச்சிதான்! வைகறை தொடர நாங்களும் குழும விவாதங்கள் தொடங்கின.

அமைப்புக்குழு விடுமுறை நாள் கூட்டம்

Image
வணக்கம்


பக்ரீத் விடுமுறை நாள் என்பதால் 24/09/2015 அன்று காலையிலேயே சுமார் பத்து மணியளவில் அமைக்குழு கூடி விவாதிக்க முடிவானது.

பதிவர் சந்திப்பு திருவிழா தொடர் சந்திப்பு இரண்டு

Image
வணக்கம் 

இன்றய பதிவர் திருவிழா அமைப்புக் குழு சந்திப்பு நண்பா அறிவை விரிவு செய் அரங்கில் நடைபெற்றது.

நெஞ்சார்ந்த நன்றிகளுடன் விழாக்குழு தொடர் சந்திப்பு நிகழ்வு ஒன்று

Image
வணக்கம் 
வலைப்பதிவர் சந்திப்பு திருவிழாவின் அமைப்புக் குழு இனி தொடர்ந்து சந்திக்கும். இந்நிகழ்வின் முதல் அமர்வு இன்று நண்பா அறக்கட்டளையின் அறிவை விரிவு செய் அரங்கில் நடைபெற்றது.

கன்னித் தமிழ் இனி கணினியிலும்

கட்டுரைப் போட்டிக்கு எழுதப்பட்ட  கட்டுரை. வகை-(1)கணினியில் தமிழ்வளர்ச்சி பற்றிய கட்டுரைப்போட்டி
உலகில் தமது தாய்மொழி குறித்து சரியான கண்ணோட்டமோ பீடோ இல்லாத இனங்களை பட்டியல் இட்டால் அதில் முதல் இடம் நமக்குத்தான். 
இது தமிழ்ச்சமூகத்தின் மாபெரும் சாபம்.
பதிவர்கள் என்மீது பாய வேண்டாம். கொஞ்சம் சுற்றிப் பாருங்கள். என் மகள் தமிழில் பேசுவது எனக்கு அவமானமாக இருக்கிறது என்று சொல்லும் மனநலமற்ற தந்தைமார்களை நாம் அதிர்ச்சியோடு நோக்கிய தினங்களை மறந்திருக்கமாட்டோம். 
தமிழ் உணர்வு உயிர்த்திருக்கும் இடம் தற்போதைக்கு வலைப்பூக்கள்தான் என்பது வெள்ளிடைமலை. இது என்போன்றோருக்கு பெரும் நம்பிக்கை தருவதாக மட்டுமல்ல பல கண்திறப்புகளையும் செய்து வருகிறது. 
தினம் தினம் இற்றைகளில் மலரும் கவிதைகள் காலைக் காபியை போன்றே அவசியமாகிவிட்டது எனக்கு. நந்தனின் வார்த்தை பயன்பாடு கண்டு வியக்கும் பொழுதே கரிகாலன் வார்த்தை வெடிகுண்டுகளை வீசி அசத்துகிறார். ழ வரிசைக் கவிஞர்களை எனக்கு அறிமுகம் செய்ததும் வலைதான். மாபெரும் ஆளுமைகளை கூட வெகு எளிதில் அணுகி பேச முடிகிற வாய்ப்பும் வலை தந்ததுதான். 
இப்படி தமிழ் கொண்டாட்டத்துக்கு உரிய பெரு…

நிலா நோக்கி மதுரையைச் சுற்றி புதுகையில் மரம்நட்ட கதை

Image
ஒரு அலைபேசி அழைப்பு ...
ஸ்ரீ 
மதுரையில் நிலாநோக்கு நாள் என்று கலிலியோ அறிவியல் மையம் ஒரு நிகழ்வை வைத்திருக்கிறது போகலாமா என்றார்? 
நாசாவில் இருந்து சான்றிதழ் வேறு தருவதாக சொன்னதும் சரி போகலாம் என்றேன். சனிக் கிழமை அதிகாலை எழுந்து பாதித்  தூக்கத்திலேயே பேருந்தைச் செலுத்திய ஓட்டுனரின் திறமையை வியந்தவாறே மாட்டுத்தாவணியை (அட மதுரை பேருந்து நிலையத்தின் பெயர்) அடைந்தோம்.

இன்றைய விழாக்குழு சந்திப்பில்

Image
பதிவர் சந்திப்பு நடைபெறும் ஆரோக்கிய மாதா மக்கள் மன்றத்தில் இன்று கூடி விவாதிக்க வேண்டும் என்று கவிஞர் முத்துநிலவன் சொல்லவே காலை கிராமத்தில் இருக்கும் அம்மாவை பார்த்துவிட்டு மண்டபத்திற்கு வந்தேன். மிகச் சரியாக நிலவன் அண்ணாத்தே சொன்ன நேரத்திற்கு வந்துவிட்டார். முன்னரே கவிஞர் வைகறையும் கவிஞர் சோலைச்சியும் மண்டபத்தில் இருந்தார்கள்.

வள ஆசிரியர்கள் புதுகையின் கல்வி முகங்கள்

Image
இளம் புயல்கள்  ஹரிராம் ஆசிரியர் தேர்வாணையத்தின் மூலம் வட்டார வள மைய வள ஆசிரியராக வந்தவர். இணையத்தை மேய்ந்து கொடுக்கப்பட்ட தலைப்பைத் தாண்டியும்  தகவல்களை மழையாகக் கொட்டுபவர்.
தனித்துவம் வாய்ந்த வழங்கல் இவரது அடையாளம். பேச்சின் தொனியே ஆள் தலைப்பை கரைத்து குடித்துவிட்டு வந்திருக்கிறார் என்று சொல்லிவிடும். வட்டார வளமையத்தில் இருந்ததால் பயிற்சி பயணம் பயிற்சி என்கிற சுழலுக்கு பழக்கப்பட்டவர்.

வேகம் பெற்றது பதிவர் திருவிழா

Image
கடந்த ஆண்டு மதுரை பதிவர் சந்திப்பில் அடுத்த ஆண்டு நீங்கள் சந்திப்பை நடத்துங்களேன் என்று தொடரோட்டக் குச்சியை புதுகை நோக்கி தள்ளியது இயல்பானதே. 

வாய்ப்பு உங்கள் வலையைத் தட்டும்போது.....

Image
செயல் கவி முத்துநிலவன் அவர்களின் பக்கத்தில் இருந்து உலகளாவிய மின்தமிழ்இலக்கியப் போட்டிகள்! - மொத்தப் பரிசுத் தொகை ரூ.50,000!
“வலைப்பதிவர் திருவிழா-2015-புதுக்கோட்டை“ “தமிழ்நாடு அரசு – தமிழ் இணையக் கல்விக் கழகம்“ ...இணைந்து நடத்தும்... உலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள்! மொத்தப் பரிசுத் தொகை ரூ.50,000! ஐந்துவகைப் போட்டிகள்! – வகைக்கு மூன்று பரிசுகள்! முதல் பரிசு ரூ.5,000 இரண்டாம் பரிசு ரூ.3,000 மூன்றாம் பரிசு ரூ.2,000 ஒவ்வொரு பரிசுடனும்

கிஷோர் டேவிட் ராஜ ராஜன் புதுகையின் கல்வி முகங்கள்

Image
வள ஆசிரியர்கள்


எந்தப் பயிற்சியில் இருந்து இவருடன் பணியாற்றுகிறேன் என்று சரியாக நினைவில் இல்லை. வெகு காலம் ஒன்றாக இருந்திருக்கிறோம். பிஷப் ஹீபர் கல்லூரியில் பகுதிநேர உதவிப் பேராசிரியராக பணியாற்றிவிட்டு ஒரு டி.ஆர்.பி தேர்வு மூலம் பணிக்கு வந்தவர்.
அன்று முதல் இன்றுவரை தொடர்ந்து வள ஆசிரியராக இருப்பவர். செமையான டிரெஸ்ஸிங் சென்ஸ் உள்ளவர். எப்போதும் மாறாத புன்னகை ரசிக்க வைக்கும் வார்த்தைத் தேர்வு, என அழகான ஆங்கிலத்தில் உரையாடக் கூடியவர்.

சுகு - புதுகையின் கல்வி முகங்கள் பகுதி இரண்டு

Image
வள ஆசிரியர் என்பது சாதரணமான பணியாக இருப்பது இல்லை. ஒரே பணியில் இருக்கும் ஆசிரியர்கள் சக ஆசிரியர்களுக்கு பகிர்தலைத் தரப்பணிக்கப்பட்டு வந்தனர். ஒரே பணியிடம் ஒரே பதவி ஒரே அனுபவம் ஆனால் பணிக்கப்பட்ட ஒருவர் பயிற்சியைத் தரவும் ஏனையோர் பங்கேற்பாளர்களாகவும் இருக்கும் இத்தகைய பயிற்சிகளின் ஒருமை உணர்வு மிக முக்கியமானது. கொஞ்சம் தவறினாலும் யாரவது ஒருவரின் உணர்வுகள் புண்படவாய்ப்பு எப்போதுமே உண்டு.

வள ஆசிரியர்கள் புதுகையின் கல்வி முகங்கள்

Image
அது என்ன வள ஆசிரியர்கள் என்றுதானே கேட்கிறீர்கள். பள்ளிக் கல்வித்துறை அவப்போது ஆசிரியர்களுக்கு புத்தாக்கப் பயிற்சிகளை நடத்தும்.  அந்த பயிற்சிகளில் சக ஆசிரியர்களை ஊக்குவிக்கவும், கற்பித்தல் வளங்களைப் பகிர்ந்து கொள்ளவும் மாவட்ட அளவில் சில ஆசிரியர்கள் தேவை.

விதைக்கலாம் நிகழ்வு இரண்டு

Image
விதைக்kalaam  அப்படின்னு ஒரு அமைப்பா? 
ஆம். மேதகு கலாம்  அவர்களின் மறைவை ஒட்டி  அவர் கனவுகளை நினைவுறுத்தும் வகையில் ஏதாவது செய்ய வேண்டும் என்கிற உந்துதல் நம் எல்லோருக்குமே இருந்தது.


பேசும் கரங்கள்- Rafeeq Friend ஒரு முகநூல் பகிர்வு

Image
இந்தப் படங்களிலொன்று மட்டும் நட்பில் இருக்கும் பேராசிரியை ஒருவரால் 'காலை வணக்கம்' பதிவில் பகிரப்பட்டிருந்தது.