Posts

Showing posts from January, 2016

ஒரு டைரி பக்கம், விதைக் கலாம், வீதி, வெங்கட் நாகராஜ்,

Image
மேதகு கலாம் அவர்களின் மறைவை ஒட்டிய நாட்களில் சமூகம் ஒருமுறை அதிர்ந்து அடங்கியது. எத்துனை உணர்வுகள்? எத்துணைக் கேள்விகள்?
நெல்லிக்காய் மூட்டை போல இருந்தாலும் இந்தமாதிரித் தருணங்களில் நமது சமூகம் இயங்கும் விதம் தனித்துவம் வாய்ந்தது.

அசத்தும் அரசுப் பள்ளி, அசத்தல் ஆங்கில ஆசிரியர்

Image
அரிமளம் அரசு உயர்நிலைப் பள்ளி, ஆங்கில இலக்கிய மன்றத்தின் ஆண்டுவிழாவிற்கு சென்றுவந்தேன்.

சக்கரக்காலன் அல்லது பயணக்காதலன்

Image
சக்கரக்காலன் அல்லது பயணக்காதலன்
ஷாஜகான்
காலத்தில் செய்த உதவி, சிறிது எனினும்... ஞாலத்தின் பெரிதெனக் கருதப்படும்னு அய்யன் சொன்னார் ஆனால் காலத்தில் செய்த பேருதவிகளை மறக்கவே முடியாது.

சென்னை வெள்ளத்தில் மனிதர்கள் உடல்களாக அடித்துச் செல்லப்பட்ட பொழுது டெல்லியில் தனியொருவனாக அய்யா ஷாஜகான் முன்னெடுத்த விசயங்கள் இன்னும் என்னிடம் சிலிர்ப்பை ஏற்படுத்துகின்றன.

முதல்வர்கள் முகாம் புதுகை கல்விப் புரட்சி

Image
தங்கள்  பணியில் அக்கறை உள்ள இளம் தலைமுறை முன்னெடுக்கும் இடத்திற்கு  வரும் பொழுது  அது  ஓர் முத்திரை பதிக்கும் அனுபவமாகிறது.

புதுகை முதன்மைக் கல்வி அலுவலர் திருமிகு சாந்தி அவர்கள் போற்றுதலுக்குரிய ஒரு முன்னெடுப்பைச்  செய்திருக்கிறார். மாணவர்களுக்கான ஒரு  உண்டு  உறையுள்  முகாமை நடத்துகிறார்.

யாழியின் என் கைரேகை படிந்த கல்லும் - மகாசிவராத்திரியும் சில தேநீர் கோப்பைகளும்

Image
பொங்கல் உங்களுக்கு எப்படியோ எனக்கு இரண்டு கவிதை நூல்களோடு கழிந்தது.


நந்தனுடன் பேசிய பொழுது இப்போ கவிதை புதுமாதிரியாக இருக்கிறது என்று சொல்ல அப்படி என்ன புதுமாதிரி என கவிஞர் வைகறையைக் கேட்க அவர் நான்கு நூல்களைக் கொடுத்து படிங்க என்றார்.

பின்விளைவுகளை அறியாத அப்பாவி அவர். என்னிடம் நூல்களைக் கொடுத்துவிட்டு அய்யா எப்போ தருவீங்க என்று பலமுறை கேட்டுவிட்டு இனி இவன் தரமாட்டான் என்றே முடிவெடுத்துவிட்டார்.  

தாரை தப்பட்டை

Image
பத்து வருடங்களுக்கு முன்
யாருப்பா இந்த  பாலா ?

கவிஞர் சூர்யா சுரேஷ் பாலாவின் சேது பார்த்தாயா என்றபோது இல்லை என்றேன். அவர் நம்ம ஊர்லதான் இருக்கார் ஒரு படம் ஷூட்டிங் போய்ட்டு இருக்கு என்றார்.

வெள்ளம் ஒரு நினைவோடை 3 flood relief work 3

Image
புதுகையின் முதல் நபராக எங்கள் பகுதி பிரபலம் திரு ஜே.பி.ஆர்.  பெல் அவர்கள் சென்னைக்கு சென்ற பொழுது எழுதிய இற்றை இது. 
நிவாரணப் பயணம்  புதுகையின் முதல்வர் 


சென்னை சென்று முடிச்சூர் மக்களுக்கு பொருட்களைத் தந்து திரும்பிய பெல் அவர்களை விதைக்கலாம் உறுப்பினர்கள் பார்த்துப் பேசியபொழுது 

வெள்ளம் ஒரு நினைவோடை 4 flood relief work 4

Image
எனது இற்றைகள் வழி பேரிடரை பார்ப்பது அடுத்தகட்ட செயல்திட்டத்திற்கு வழிகாட்டுகிறது .. இன்னும் பணிகள் இருக்கின்றன 

வெள்ளம் ஒரு நினைவோடை 5 flood relief work 5

Image
மதர் தெரசா பொறியியல் கல்லூரியின் விரிவுரையாளர் திரு. விக்னேஷ் அவர்கள் யு.கே டெக்கில் நிவாரணப் பொருட்களை வழங்கிய பொழுது 
புதுகை நாணயவியல் சங்கத்தின் தலைவர் திரு. பஷீர் அலி  அவர்கள் யு.கே டெக்கில், மனிதர் காசிம் புதுப்பேட்டையில் ஜமாத்தில் அறிவித்து வெள்ள நிவாரண நிதி திரட்டியவர். விதைக்கலாம் நிவாரணப் பயணத்தை சாத்தியப்படுத்தியதில் மிக முக்கியமானவர்.   மழை அடித்துச் சென்ற குப்பைகளில் "தேவையற்ற இஸ்லாமிய வெறுப்பும் ஒன்று ".  பஷீர் அவர்களுடன் பேசிய ஒவ்வொரு வார்த்தையிலும் இதை நான் உணர்ந்தேன்.

பாய்ன்ட் பிரேக் 2015

Image
சில ஆங்கிலத் திரைப்படங்கள் வழக்கமான மசாலாவை கொஞ்சம்

வித்தியாசமாக கொடுத்து பாக்ஸ் ஆபிசை பிரிக்கும். அந்த வரிசையில் தற்போதைய ஆக்சன் திரில்லர் பாய்ன்ட் பிரேக். 
எரிக்சன் கோர் இயக்கத்தில் வந்திருக்கும் படம் நம்மை வாழவைக்கும் புவிக்  கிரகத்தை கொண்டாடுங்கள் என்று சொல்லும் ஒன்லைனை  வைத்துக்கொண்டு ஆக்சன் அதிரடி சரவெடியை வெடித்திருக்கிறது. 

சாதிக்கலாம் வாங்க 2016

Image
மாநிலத்தில் பள்ளி இறுதித் தேர்வு எவ்வளவு முக்கியமானது என்பது நமக்குத் தெரியும். 
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் புதுகை  ஆசிரியர்களுக்கான உரிமைப் போராட்டத்தை மட்டுமல்ல தனது கடமையையும் செவ்வனே செய்கிறது என்பதற்கு தொடர்ந்து இவ்வியக்கம் நடத்திவரும் சாதிக்கலாம் வாங்க நிகழ்வே சான்று.
மாவட்ட வருவாய் அலுவலர் திரு. மாரிமுத்து அவர்களும், மாவட்ட கல்வி அலுவலர் திரு. மாணிக்கம் அவர்களும் முன்னிலை வகித்து நிகழ்வை சிறப்பித்தனர். 
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் தலைவராக  திரு.மாரிமுத்து  (முன்னாள் பள்ளித் துணை ஆய்வாளர்) இருந்த பொழுது துவங்கப் பட்ட இந்தக் கூட்டணி தொடர்ந்து வெற்றிகரமாக செயல்பட்டு மாணவர் முன்னேற்றத்தில் தங்கள் பணியைப்  பகிர்ந்து கொள்கின்றன.
செந்தூரன் பாலிடெக்னிக் கல்லூரியின் பேராதரவோடு நடைபெற்றுவரும் இந்த நிகழ்ச்சி மாவட்ட தேர்ச்சி சதவிகிதத்தை அதிகரிப்பதில் ஒரு எளிய பங்கினைச் செய்கிறது.  
ஆண்டுதோறும் சுமார் ஐயாயிரம் மாணவர்கள் கலந்துகொள்ளும் நிகழ்வு மிகச் சிறந்த முறையில் திட்டமிடப்பட்டு கல்வி அதிகாரிகள் மற்றும்  மாவட்ட வருவாய் அதிகாரிகள் முன்னிலையில் நடந்துவருகிறது. 
நிகழ்வில் ஐ…