Posts

Showing posts from January, 2014

பார்க்க முடிந்த பாறை ஓவியங்கள் - பகுதி இரண்டு

Image
வணக்கம் நண்பர்களே,

நான்கு மாவட்ட நாட்டுநலப்பணி மாணவர்கள் பங்கேற்கும் ஒரு நலப் பயிற்சி  மௌன்ட் சயன் பொறியியற் கல்லூரியில் நடைபெற்று வருகிறது.  புதுகை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர். ந.அருள்முருகன் அவர்களின் சீரிய நெறியாள்கையில் மாணவர்களுக்கு பல்திறப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. எங்கள் முதன்மைக் கல்வி அலுவலர் ரொம்பவும் வித்யாசமான ஒரு அதிகாரி. ஆயிரம் மிரட்டல்களில் ஆகவேண்டிய பணியைக் கூட ஒரு சிறு புன்னகையில் வென்றெடுக்கும் வல்லமை அவரது இயல்பு.

பார்க்க முடிந்த பாறை ஓவியங்கள் பகுதி ஒன்று

Image
சித்தன்ன வாசலின் ஓவியங்கள் உலகப் புகழ் பெற்றவை. ஆனால் இன்னும் அறியப்படாதா ஓவியங்களும் அங்கு இருக்கின்றன என்றால் வியப்பாக இருக்கும் அல்லவா? ஆம் நண்பர்களே இன்னும் சரிவர அறியப்படாத ஒரு சித்தன்னவாசல் இருக்கிறது. அது ஒரு மீட்பருக்காக பல நூற்றாண்டுகளாக காத்திருந்திருக்க வேண்டும்! இதோ மீட்பர்! 


சில மாதங்களுக்கு முன்னர் திருமயம் கோட்டையில் இருந்த தொல்பழங்கால பாறை ஓவியங்களை கண்டறிந்து எங்கள் மாவட்டத்தின் வரலாற்றை பெருமைப் படுத்திய முதன்மைக் கல்வி அலுவலர், பெருமதிப்பிற்குரிய முனைவர். அருள் முருகன் அவர்கள் பொங்கல் வெளியீடாக தற்போது சித்தன்னவாசல் பாறை ஓவியங்களை கண்டறிந்து சொல்லியிருக்கிறார்கள்.

மாற்றத்தின் முகவர்கள்

Image
ஒரு பெண்ணுக்கு வாழ்வு தனது ஒவ்வொரு திருப்பத்திலும் வஞ்சகத்தை மட்டுமே பரிசளித்தால்  வாழப்பிடிக்குமா? இடுக்கனுக்கு நகுதல் சாத்தியமா?
நீங்கள் நூர் (பெயர் மாற்றம்)டீச்சரை பார்த்தல் வியந்து போவீர்கள்.

ஒரு சராசரிப் ஏழைப் பெண்ணிற்கு கிடைத்திருக்கக்கூடிய எந்த வாய்ப்பும் கிடைக்காத ஒரு பெண்மணி. ஏழைத் தாய், எதிர்பாரா திருமணம் என கடும் புயல்வீசிய இளமை.

பதிவர் கவனத்திற்கு வேர்ட் வேரிபிக்கேஷன் வேண்டாமே ...

Image
வேர்ட்  வேரிபிக்கேஷன் ...

பார்க்காத புத்தக கண்காட்சியும், சில உறுத்தல்களும்

Image
உடல் நிலை சரியில்லாத எனது அம்மாவை பார்க்க வந்ததால் என்னால் முயற்சித்தும் சென்னை புத்தக கண்காட்சியை காண முடியவில்லை. சரி ஒரு நேரம் கிளம்பலாம் என்ற பொழுது பிரியத்திற்குரிய கவிஞர் காலதச்சன் நீங்க போற நேரம் வெறும் ஸ்டால் மட்டுமே இருக்கும் என புத்தக கண்காட்சிக்கு போகும் முயற்சி புஸ்.

விதை வீசி வினையறுப்போம்

Image
பயணங்கள் தான் உண்மையான கல்விமுறை என்பார் எஸ்.ரா. அது உண்மைதான் என்பது போல ஒரு நிகழ்வு. ஒரு பயிற்சிக்காக ஈரோடு செல்லவேண்டியிருந்தது.  நிகில் நிறுவன பயிற்சிகளுக்கு செல்லும் பொழுது சக பயிற்சியாளர்களுடன் உரையாடுவதால் கிடைக்கும் தகவல்கள் எல்லாமே பயன்பெறத்தக்கவையே. கரூர் துவங்கி ஈரோடுவரை செல்லும் வழியில் ராமநாதபுரத்தின் ஒரு கி ஜேசி  திரு.தீனதயாளன் அவர்களை  திரு அஸ்வத் கேள்விகளால் துளைத்தெடுத்தார். நான் தீனாவின் பதில்களை பொறுமையாக கேட்டுக் கொண்டுவந்தேன்.

ஒரு நீண்ட பயணம், ஒரு நிகில் பயிற்சி

Image
கடந்த வாரம் நிகில் நிறுவனர் திரு சோம.நாகலிங்கம் அய்யா அழைத்து அவல் பூந்துறை மேல்நிலைப் பள்ளியில் ஒரு வாழ்வியல் திறன் பயிற்சி நீங்கள் கலந்து கொள்ள முடியுமா? என்று கேட்க நான் கொஞ்சம் தயங்கி சரி என்றேன். தயக்கத்திற்கு காரணம், ஒரு சி.எல்லை காலி செய்ய வேண்டும். தேர்வுகள் வேறு நெருங்கிக்கொண்டிருக்கின்றன.
நிறைய நேரத்தை என்னுடைய மாணவர்களிடமே செலவிட வேண்டும். 
சரி என்று சொன்னால் இந்த முறையாவது   தப்பாமல் செல்லவேண்டும். யோசித்துவிட்டு சரி என்று சொன்னேன்.

வீரம், ஜில்லா ஒரு பார்வை

Image
விஜய்" மூன்றெழுத்து, "அஜீத்" மூன்றெழுத்து, "ஜில்லா" மூன்றெழுத்து, "வீரம்" மூன்றெழுத்து, இருவரும் எதிர் பார்க்கும் "வெற்றி" மூன்றெழுத்து. எப்பூடி. ஒரு முக நூல் பதிவரின் குசும்பு!

2 கன்ஸ்

Image
இரு துப்பாக்கிகள், டான்சல் வாசிங்க்டன், மார்க் வால்பர்க் இணைந்து மிரட்டிய படம். கதை வழக்கம்போல் ஒரு போதை வியாபாரி, அவனை ஆதாரத்துடன் கைது செய்ய தொடரும் ஒரு அண்டர்கவர் போலிஸ் அதிகாரி, அவருக்கு ஒரு கைப்பிள்ளை என பல அதிரடி சரவெடிகளை பொதித்துவைத்துள்ள திரைக்கதை.

கொஞ்சம் போதைப்பொருள் வில்லனின் இடத்தில் கிடைத்தால் கைதுசெய்துவிடலாம் என்னும் நிலையில், விவரமான வில்லன் கத்தையாய் பணத்தைக் கொடுத்து வெறுப்பெற்றுகிறான்.

மோடி வளர்ச்சி என்னும் முகமூடி - மக்கள் கலை இயக்க வெளியீடு

Image
இந்தியாவின் ஒளிவீசும் மாநிலம் குஜராத் என்கிற பொய்ப்பிரச்சார மாயையை களைந்திருக்கும் ஒரு நூல்.தோழர். மருதையனின் திருச்சி உரை நூல்வடிவில்.

தாலிபான் - பா.ராகவனின் ஒரு அருமையான நூல்

Image
ராகவனின் எழுத்துக்கள் எப்போதும் எனக்குப் பிடிக்கும். ஜூனியர் விகடனில் அவர் தொடர் எழுத ஆரம்பித்தார். சமகால வராற்றையும் அரசியலையும் எழுதும் எழுத்தாளர்கள் ரொம்ப கம்மி. அவர்களுக்கான வாசகர் வட்டமும் ரொம்ப கம்மி. இருந்தாலும் ராகவனின் வாசகர் வட்டம் மிகப் பெரியது. தல தொடும் விசயங்கள் அப்படி.

ஆப்லிவன் ஒரு அறிவியல் புனைவு திரைப்படம்

Image
டாம் க்ருஸின் நடிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும், என்பதால் அவரது படங்களை விரும்பி பார்ப்பது வழக்கம். அவரது ஆகச்சிறந்த படங்களை பார்த்து அவரை ரசிக்க ஆரம்பிக்கவில்லை மிசன் இம்பாசிபிள் முதல் பாகம்தான் எனக்கு ரொம்ப பிடித்த படம். வேர் இஸ் யுவர் டீம். மை டீம் இஸ் டெட் என்கிற  வசனத்தை அவர் சொல்கிற பொழுது அதில் தெறித்த வேகம் கலந்த ஆற்றாமை எனக்கு பிடித்திருந்தது.

வாழ்த்துக்கள்

Image
அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

பொங்குக பொங்கல்
தமிழர் வாழ்வு பொலிகவென்று
அகிலமெங்கும் என் தமிழினம்
பாங்காய் பரவட்டும்
மனிதம் மலரட்டும்
ஈழத்திலும்
முடிந்தால்
நமது தலைவர்களின் மனதிலும்

வாழ்த்துக்களுடன்
மது

ஆறு மெழுகுவர்த்திகள்

Image
வெகு அரிதாகவே நல்ல திரை முயற்சிகள் நடைபெறுகின்றன. அதிர்ஷ்டம் இருந்தால் அவை பெருவாரி ரசிகர்களின் கவனம் பெறுகின்றன.  பெரும்பாலும் புதிய ஆரோக்கியமான முயற்சிகள் பதிவுலகிலும், பத்திரிக்கை உலகிலும் ஒரு அதிர்வு வளையத்தை ஏற்படுத்துவதுடன் சரி.

விகடன் விருதுகள்

Image
விருதுகள் இன்றய நிலையில் நேர்மையாக தரப்படுவதோ, பெறப்படுவதோ இல்லை என்பது நிதர்சனம். ஒன்று விருது பெறுவோரின் "பொருள்" வெளிச்சம் தம்மீதும் பாயவேண்டி நடத்தபெறும் விருது விழாக்கள், அல்லது விருது பெறுவோரின் நலன் விரும்பிகள் நடத்தும் காவடியாட்டமாக இருக்கும்.

தங்க ரேகை

Image
அமெரிக்கா வாய்ப்புகளின் நாடு என்பது அனைவரும் ஒத்துக்கொள்ளக் கூடியதே. ஆனால் வாழ்க்கை நம்மை நோக்கி வீசும் வாய்ப்புகளை எத்துனைப் பெயர் சரியாக பயன்படுத்துகிறோம்? ஒரு கோடிரூபாய் கேள்வி.

எழுதுவோம் (ஸ்கிரிப்டிங் )

Image
எல்லாம் தலையெழுத்து. எழுதினபடிதான் நடக்கும். என்பது  நல்ல ஆறுதல் வார்த்தைகளாக இருக்கலாம். ஆனால் இதில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கிறது?

எல்லோரும் எளிதாக சொல்லிவிடுவார்கள் முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார். அப்போ தலையெழுத்து பொய்யா? இல்லை என்கிறது ஒரு ஆய்வு!

புதுகையில் ஒரு வாசக வட்டம்

Image
பிரியத்துக்குரிய நந்தன் ஸ்ரீதரன் மதுரை கூழாங்கற்கள் இலக்கிய கூடலுக்கு வருமாறு அழைத்திருந்தார். எட்வின் அய்யாவும் இந்நிகழ்வினை குறித்து எழுதியிருந்ததால் பங்கேற்க வேண்டும் என்ற ஆவல் இருந்தது. ஏனோ தெரியவில்லை பங்கேற்பிற்கான நாள் தள்ளிக்கொண்டே போகிறது என்ற வருத்தம் எனக்கு இருந்தது.

உணர்வுகளும் மனித உடலும்

Image
மன உணர்வுகள் மனித உடலில் அழுத்தமான விளைவுகளை ஏற்படுத்துவதை புதிய ஆய்வு ஒன்று உறுதி செய்திருக்கிறது.

இந்த உணர்வு பாதிப்பு மேற்கு ஐரோப்பிய மனிதர்களுக்கும் கிழக்காசிய மனிதர்களுக்கும் ஒரு மாதிரி இருப்பதும் தெரியவந்துள்ளது.

ஒரு சுபம் ஒரு ஆரம்பம் சில வார்த்தைகள்

Image
கலவையான உணர்வுகளோடு மீண்டும் உங்களுக்களுக்கு ஒரு பணிவான வணக்கங்களுடன் மது...


தங்கையை சந்திக்க ஒரு நீண்ட பயணம், துறையில் புதிதாக அறிமுகம் ஆகவிருக்கும் இணையம் மூலம் வகுப்பறைகளை இணைக்கும் பயிற்சிக்கான கூடுதல் பயணம், மீண்டும் ஒரு மருத்துவ பயணம் என்று இடைவிடாது பயணங்கள் இந்த டிசம்பர் மாதத்தின் கடைசி வாரத்தை கற்பூரமாய் கரைக்க புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிக்க கணிப்பொறியை திறந்தவன் அதிர்ந்தேன். நம்மாழ்வாரின் விடைபெறல் தோழர் எட்வினின் நிலைத்தகவலாக.